'ஹேப்பி பஸ்' தீபாவளி சுற்றுலா
20ஆம் தேதி அக்டோபர் காலை இடம்பெற்ற இந்தச் சுற்றுலா, சிங்கப்பூரின் பன்முக சமுதாயத்தைப் பறைசாற்றும் ஒரு புதிய முயற்சி என்று வடமேற்கு மாவட்ட மேயர் அலெக்ஸ் யாம் தெரிவித்தார்.
அதோடு, தீபாவளியின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்க இந்தச் சுற்றுலா முதன்முதலாக லிட்டில் இந்தியா வட்டாரத்தில் இடம்பெற்றதாகவும் கூறினார்.
அவர் இந்திய மரபுடைமை நிலையத்தில் அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கிய தீபாவளி நிகழ்ச்சிகள், பட்டறைகள், ஆடை, அணிகலன்கள் விற்கும் சிறு வணிகச் சந்தைகள் என தீபாவளி மகிழ்ச்சியில் யூடீ குடியிருப்பாளர்கள் திளைத்திருந்தனர்.
மேலும், கேம்பல் சாலையில் ஆண்டுதோறும் நடைபெறும் தீபாவளி சந்தை, லிட்டில் இந்தியாவைச் சுற்றியுள்ள பல பொருள் கடைகள் ஆகியவற்றையும் குடியிருப்பாளர்கள் பார்த்து மகிழ்ந்தனர்.
சுற்றிப் இந்திய மரபுடைமை நிலையத்திற்கு முதன்முதலாக வருகை புரிந்த குடியிருப்பாளர் ஹோ, அதன் பல்வேறு கண்காட்சிகளைப் பாராட்டினார்.
“இதன்மூலம் என்னால் இந்தியக் கலாசாரத்தைப் பற்றி மேலும் புரிந்துகொள்ள முடிகிறது," என்றார் ஹோ.
'கப்பர்' என்ற சிறு உணவகத்தில் வகைவகையான இந்திய உணவுகளை குடியிருப்பாளர்கள் சுவைத்து மகிழ்ந்தார்கள்.
25 ஆண்டுகள் யூடீ வட்டாரத்தில் வசிக்கும் வாசுகி பழனிச்சாமி, தன் நண்பர்களுடன் இந்தச் சுற்றுலாவில் பங்கேற்றார்.
"என் மற்ற இன நண்பர்கள் இந்தியக் கலாசாரத்தையும் உணவையும் பாராட்டும் வகையில் தீபாவளியை என்னுடன் இணைந்து கொண்டாடுவது எனக்கு மகிழ்ச்சி தருகிறது,” என்றார் அவர்.
"கலாசாரம், சமயம் மீதான ஆர்வத்தின் மூலம் மற்றவர்களுடன் பன்முகத்தன்மையின் அழகைப் பற்றி பகிர்ந்துகொள்ள முடிகிறது,” என்றார் யூடீ அடித்தளக் குழுப் பிரிவின் தலைவர் முருகேசன் சேது.
"இது ஒரு மகிழ்ச்சியான, வலுவான சமூகத்தை ஒன்றிணைக்க உதவும் என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் பகிர்ந்துகொண்டார்.
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
ஆந்திராவில் 5 ஆண்டுகளில் அனைத்துக் குடும்பங்களுக்கும் வீட்டுமனை
ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் வீட்டுமனை இல்லாத அனைத்துக் குடும்பங்களுக்கும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் வீட்டுமனை வழங்கப்படும் என்று மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு உறுதி கூறியுள்ளார்.
வட காஸாவில் வீடுகள் மீது தாக்குதல் நடத்தியது இஸ்ரேல்
வட காஸாவில் அதிகமானோர் இருந்த குறைந்தது ஐந்து வீடுகள் மீது இஸ்ரேலிய ராணுவம் வியாழக்கிழமையன்று (நவம்பர் 21) வெடிகுண்டுத் தாக்குதல்களை மேற்கொண்டது.
சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் ஜெயம் ரவி
சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்க இருக்கும் படத்தில் ஜெயம் ரவி வில்லனாக நடிக்க இருக்கிறார்.
தனுஷைத் தவிர்த்து மற்றவர்களுக்கு நன்றி சொன்ன நயன்தாரா
நயன்தாரா ‘நானும் ரவுடிதான்’ படத்தின் காட்சிகளைப் பயன்படுத்திக் கொண்ட நிலையிலும் தனுஷைத் தவிர்த்து மற்றவர்களுக்கு நன்றி சொல்லி இருப்பது தற்பொழுது பேசுபொருளாகி இருக்கிறது.
நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு வலியுறுத்தல்
அதானி லஞ்ச ஊழல் விவகாரம்
ரூ.279 கோடி செலவில் பிரம்மாண்ட டைடல் பார்க்
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்
தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கில் அடுத்த வாரம் தீர்ப்பு
நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கில் அடுத்த புதன்கிழமை தீர்ப்பளிக்கப்படும் என குடும்பநல நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.
பேருந்து - கார் மோதல்; மூவர் மருத்துவமனையில் அனுமதி
உட்லண்ட்ஸ் வட்டாரத்தில், ஜோகூருக்கும் சிங்கப்பூருக்கும் இடையே சேவை வழங்கும் ஏசி7 பேருந்தும் ஒரு காரும் மோதிக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘தூய்மையான கழிவறையால் அனைவருக்கும் பயன்’
தேசிய சுற்றுப்புற வாரியம், பொதுச் சுகாதார மன்றத்தின் ஏற்பாட்டில் ‘தூய்மையான பொதுக் கழிவறைகள் இயக்கம் 2024’ வியாழக்கிழமை (நவம்பர் 21) தொடக்கம் கண்டது.
தென்கொரியாவில் வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன: ஹெங்
தென்கொரியாவில் துடிப்புமிக்க நிறுவனச்சூழல் நிலவுவதாகவும் வாய்ப்புகளும் வளங்களும் அங்கு கொட்டிக் கிடப்பதாகவும் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் தெரிவித்து உள்ளார்.