பிறப்பால் சீனர்கள், உணர்வால் தமிழர்கள்
Tamil Murasu|November 03, 2024
சொந்த மண்ணிலிருந்து வேரோடு அகற்றி வேறு மண்ணில் நடப்பட்ட இளஞ்செடிகள் அக்கறையுடன் பராமரிக்கப்படும்போது குறையின்றி வளர்வதுண்டு. அவை நீண்ட நெடு மரங்களாக ஓங்கி, பிறருக்கு நிழல் தரும் வன்மையைப் பெறுவதுமுண்டு.
பிறப்பால் சீனர்கள், உணர்வால் தமிழர்கள்

சிங்கப்பூரில் அந்தக் காலத்தில் சொந்தக் குடும்பத்தினரால் கைவிடப்பட்ட பெண் பிள்ளைகள், தத்துக் குடும்பங்களால் அரவணைக்கப்பட்டதைக் காட்டும் சில கதைகள், ‘சிறு துளிகள்: கடந்தகால சிங்கப்பூரின் செல்லப் பிள்ளைகள்’ (Little Drops: Cherished Children Of Singapore’s Past) என்ற நூலில் இடம்பெற்றுள்ளன.

இத்தகைய பெண்கள் 14 பேரின் உருக்கமான கதைகள் வரலாற்று அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளன. இவை பிரிவின் வலியையும் பரிவின் வலிமையையும் எடுத்துக்கூறுகின்றன.

முற்காலச் சமூகத்தில் வாழ்ந்த, நட்பு, சமூக உறவுகள், சிங்கப்பூர்க் குடியேறிகளின் மரபு எனப் பல்வேறு அம்சங்களை அறிய, ஆராய, முனைவர் தெரேசா தேவசகாயம் திரட்டியுள்ள இந்தத் தகவல் பெட்டகம் உதவலாம்.

இவர் சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த குடும்ப, பாலின மானுடவியலாளர் (family and gender anthropologist) ஆவார்.

பூசலுக்கிடையே பூத்த புன்னகை மலர்

திருமதி ஜேன் தேவசகாயம், 86, நான்கு வயதுச் சிறுமியாக இருந்தபோது சிங்கப்பூரிலும் அன்றைய மலாயாவிலும் ஜப்பானியப் படையெடுப்பு நிலவியது. மனைவியை இழந்த சீன விவசாயி ஒருவரிடமிருந்து தமிழ்க் குடும்பம் ஒன்று அவரைத் தத்தெடுத்துக்கொண்டது.

1947ல் வளர்ப்புத் தாயார் கிரேஸ் ஜோசஃப்புடன் ஒன்பது வயது ஜேன் வில்சன் தேவசகாயம். சிறு வயதில் ஜேன், பிறரால் ‘பாக்கியம்’ எனச் செல்லமாக அழைக்கப்பட்டார். படம்: Little Drops: Cherished Children Of Singapore’s Past

ஜேன் பிறந்தபோதே அவரது தாயாரின் உயிர் பிரிந்ததால் குழந்தை ஜேன் ராசியற்றவராகக் கருதப்பட்டார்.

சீனப் பஞ்சாங்கத்தின்படி புலி ஆண்டில் பிறந்தார் அவர். புலி ஆண்டில் பிறக்கும் பெண் குழந்தைகள், கோபம் மிக்கவர்களாக வளர்வர் என்றும் குடும்பத்திற்கு துரதிர்ஷ்டம் சேர்ப்பவர்கள் என்றும் சிலர் நம்புகின்றனர்.

ஆனால் தத்தெடுக்கப்பட்ட குடும்பத்தில் இவரது செல்லப் பெயர் ‘பாக்கியம்’.

தனது தோலின் நிறம் குறித்துத் தாயாரிடம் கேட்டபோதெல்லாம், “நீ சிறு குழந்தையாக இருந்தபோது பால் குடம் ஒன்றுக்குள் விழுந்துவிட்டாய்,” என விளையாட்டாகச் சொல்வாராம் அந்தத் தாயார்.

பிரசவத் தாதியாக வேலை பார்த்த அந்தத் தாயார், பிறகு ஜேனிடம் அவர் தத்தெடுக்கப்பட்ட உண்மையைக் கூறினார்.

This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM TAMIL MURASUView all
காம்லிங்க் பிளஸ்: குறைந்த வருமான குடும்பங்களுக்குக் கூடுதல் ஆதரவு
Tamil Murasu

காம்லிங்க் பிளஸ்: குறைந்த வருமான குடும்பங்களுக்குக் கூடுதல் ஆதரவு

காம்லிங்க் பிளஸ் திட்டத்தின்கீழ் குறைந்த வருமான குடும்பங்களுக்குக் கூடுதல் ஆதரவு வழங்கப்படுகிறது.

time-read
1 min  |
March 11, 2025
Tamil Murasu

ஊக்கமருந்து உட்கொண்ட 9 பேருக்குக் கடும் அவதி

சிங்கப்பூரில் ஆற்றலை அதிகரிப்ப தற்கான மாத்திரைகளை உட் கொண்ட ஒன்பது பேரின் தோலில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன.

time-read
1 min  |
March 11, 2025
$143 பி. வரவுசெலவுத் திட்டம் ஒருமனதாக நிறைவேற்றம்
Tamil Murasu

$143 பி. வரவுசெலவுத் திட்டம் ஒருமனதாக நிறைவேற்றம்

சிங்கப்பூர் அதன் 60வது பிறந்தநாளைக் கொண்டாடும் வேளையில்  $143.1 பில்லியன் மதிப்பிலான வரவு செலவுத்திட்டம் நாடாளுமன்றத்தில் திங்கட்கிழமை (மார்ச் 10) அன்று நிறைவேற்றப்பட்டது.

time-read
1 min  |
March 11, 2025
Tamil Murasu

ஜூன் இறுதிக்குள் ஃபேஸ்புக் விளம்பரதாரர்கள் அடையாளத்தை |உறுதி செய்ய வேண்டும்

ஃபேஸ்புக்கில் விளம்பரம் செய்யும் அனைவரும் ஜூன் மாத இறுதிக்குள் தங்கள் அடையாளங்களை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
March 11, 2025
Tamil Murasu

வாரயிறுதியில் விற்று முடிந்த 1,000 கூட்டுரிமை வீடுகள்

சிங்கப்பூரில் கடந்த வாரயிறுதியில் விற்பனைக்கு விடப்பட்ட புதிய கூட்டுரிமை வீடுகளில் ஏறக்குறைய 1,150 வீடுகள் விற்பனையானதாகக் கூறப்பட்டுள்ளது.

time-read
1 min  |
March 11, 2025
தேக்கா நிலையத்தில் குப்பை போடுவோருக்கு எதிராக உடனடி நடவடிக்கை
Tamil Murasu

தேக்கா நிலையத்தில் குப்பை போடுவோருக்கு எதிராக உடனடி நடவடிக்கை

தேக்கா நிலையத்தில் குப்பை போடுவோர் இனி பொதுமக்கள் முன் அங்கேயே துப்புரவுப் பணிகளை மேற்கொள்ள வேண்டி யிருக்கும்.

time-read
1 min  |
March 11, 2025
Tamil Murasu

வீட்டில் யார் தயவுமின்றி வசிக்க உடற்குறையுள்ளோருக்குக் கூடுதல் தெரிவுகள்

வீட்டில் யார் தயவுமின்றி வசிக்க உடற்குறையுள்ளோருக்கும் அறிவுத்திறன் குன்றியோருக்கும் கூடுதல் தெரிவுகள் வழங்கப்படுகின்றன,

time-read
1 min  |
March 11, 2025
Tamil Murasu

கஞ்சா தொடர்பான இசைவுப் போக்குக்கு தவறான தகவல் காரணம்: ஜோசஃபின் டியோ

உலகெங்கும் போதைப்பொருள் பயன்பாடு மோசமாக இருக்கும் சூழலில் கஞ்சா குறித்த தவறான தகவல்கள் பரவுகின்றன.

time-read
1 min  |
March 11, 2025
ஜம்மு காஷ்மீர் முதலீட்டை மீட்டுக்கொள்ளும் முத்தையா முரளிதரன் நிறுவனம்
Tamil Murasu

ஜம்மு காஷ்மீர் முதலீட்டை மீட்டுக்கொள்ளும் முத்தையா முரளிதரன் நிறுவனம்

முன்னாள் இலங்கை கிரிக்கெட் நட்சத்திரம் முத்தையா முரளிதரனின் குளிர்பானக் குவளை நிறுவனம் இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் முதலீடு செய்வதை மீட்டுக்கொள்ளப்போவதாக ஞாயிற்றுக்கிழமையன்று (மார்ச் 9) அதிகாரிகள் தெரிவித்தனர்.

time-read
1 min  |
March 10, 2025
Tamil Murasu

மலேசியாவில் அதிரடிச் சோதனை; விமானப் பாகங்கள், தோட்டாக்கள் கண்டெடுப்பு

ஜோகூர் பாரு: மின்னணுக் கழிவு அதிகாரிகள் 46,000 கிலோவுக்கும் அதிகமான மின்னணுக் கழிவு கள் சட்டவிரோதமாக மறுசுழற்சி செய்யப்படுவதைத் தடுக்க மலேசியாவின் பினாங்கு, பேராக், ஜோகூர் ஆகிய மாநிலங்களில் பெரிய அளவிலான சோதனைகள் நடத்தப்பட்டன.

time-read
1 min  |
March 10, 2025