
செழிப்பான பாதுகாப்பு, விண்வெளி உற்பத்திச் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதில் தமிழக அரசு கவனம் செலுத்தி வருவதாகவும் தொழில் துறையின் தேவைகளைப் புதுமையான முறையில் நிவர்த்தி செய்வதன் மூலம் இத்துறையில் முதலீட்டாளர்களை ஈர்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஆளில்லா வானூர்தி சோதனை மையம் மூலம் இந்தியாவில் விண்வெளி, பாதுகாப்பு நிறுவனங்களைத் தொடங்குவதற்கான விருப்பமான இடமாக தமிழகம் மாறும் என்று அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
உலக நாடுகள் பலவும் ‘டிரோன்’ துறையில் தீவிர கவனம் செலுத்தி வரும் நிலையில், இந்தியாவும் இத்துறையில் முன்னோக்கிச் செல்ல நினைப்பதில் வியப்பு ஏதுமில்லை.
இந்திய அரசு வேளாண், விண்வெளி, பாதுகாப்புத் துறைகளில் ஆளில்லா வானூர்திகளின் பயன்பாட்டுக்கு ஆக அதிக முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கியதை அடுத்து, மாநில அரசுகளும் அந்த வழியைப் பின்பற்றுகின்றன.
மகளிர்க்கான ஆளில்லா வானூர்தி பயிற்சித் திட்டம்
மகளிர்க்கான ‘நமோ ஆளில்லா வானூர்தி’ பயிற்சித் திட்டத்தை, கருடா ஏரோ ஸ்பேஸ் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்த உள்ளது இந்திய அரசு.
இதன் மூலம் 446 ஆளில்லா வானூர்திகள் தயாரிக்கப்படும் என்றும் 500 பேருக்கு அவற்றை இயக்குவதற்கான இலவசப் பயிற்சி அளிக்கப்படும் என்றும் கருடா நிறுவனத்தின் அதிகாரி ஷ்யாம் குமார் தெரிவித்துள்ளார்.
“ஒரு வலுவான, வளர்ந்த தேசத்தைக் கட்டியெழுப்ப பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது மிக முக்கியமானது. பெண்கள் பொருளியல் ரீதியில் முன்னேறும்போது வீட்டுக்கும் கிராமப்புற வளர்ச்சிக்கும் பெரிதும் பங்களிக்கின்றனர். இந்த அடிப்படையில்தான் இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது,” என்கிறார் ஷ்யாம் குமார்.
இத்திட்டத்தின்கீழ் வேளாண் துறையில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் பங்களிப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன், அடுத்த மூன்று ஆண்டுகளில் 15,000 ஆளில்லா வானூர்திகளுக்கு மானியம் வழங்கப்பட உள்ளது.
மேலும், நாடு முழுவதும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 1,000 ஆளில்லா வானூர்திகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் பெண் தொழில் முனைவோர்களுக்கான இலவச ஆளில்லா வானூர்தி பயிற்சித்திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றும் கருடா ஏரோ ஸ்பேஸ் தெரிவித்துள்ளது.
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In

$124,000 மதிப்புடைய தங்கத் தகடுகளைத் திருடிய நகைக்கடை ஊழியருக்குச் சிறை
பூகிஸ் ஜங்ஷன் கடைத்தொகுதியில் $124,000க்கும் அதிகமான மதிப்புடைய தங்கத் தகடுகளைத் திருடிய ஊழியருக்கு (மார்ச் 14) 20 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் தமிழ்ப் புத்தகக் கண்காட்சி
தமிழக அரசு சார்பில் வெளிநாடுகளில் தமிழ் புத்தகக் கண்காட்சி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் வட்டாரத்தில் போக்குவரத்து மேம்பாடு
ஜோகூர் - சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் வட்டாரம், சிறப்பு நிதி வட்டாரம் ஆகியவற்றின் வளர்ச்சிக்கு ஆதரவளிக்க ஃபாரஸ்ட் சிட்டி அதன் போக்குவரத்துக் கட்டமைப்பை மேலும் விரிவுபடுத்தவிருப்பதாகத் தெரிவித்துள்ளது.

தெம்பனிசில் 7 கட்டடங்களுக்கு பகிர்வுக் குளிரூட்டு அமைப்பு
தெம்பனிஸ் வட்டாரத்தில் ஏழு கட்டடங்கள் ஒரு பகிர்வுக் குளிரூட்டு அமைப்பை இம்மாதத் தொடக்கத்திலிருந்து பயன்படுத்தி வருகின்றன.

மின்சிகரெட்டுகளை ஒடுக்கும் தாய்லாந்து கல்வியமைச்சு
தாய்லாந்துப் பள்ளிகளில் மின்சிகரெட்டுகள் கிடைப்பதைத் தடுக்க 4 புதிய கட்டுப்பாடுகளை அந்நாட்டுக் கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

மரின் பரேட் வெள்ளம்: நிறுவனத்துக்கு அபராதம்
சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் மரின் பரேடில் வெள்ளம் ஏற்படுவதற்குக் காரணமாக இருந்த கட்டுமான நிறுவனத்துக்கு செவ்வாய்க்கிழமையன்று (மார்ச் 11) 49,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.

வழிகாட்டிக் குறியீடுகள்: மக்கள் கருத்து வரவேற்பு
வட்டப் பாதை ரயில் நிலையங்களில் காட்சிப்படுத்தப்படவுள்ளன

விளையாட்டாளரின் நேர்மையை எண்ணிப் பெருமைப்படும் யுனைடெட் நிர்வாகி
யூயேஃபா யுரோப்பா லீக் காற்பந்துப் போட்டியில் காலிறுதிக்கு முந்தைய சுற்றின் ஆட்டத்தில் ஸ்பெயினின் ரியால் சோசியடாட்டை 4-1 எனும் கோல் கணக்கில் வென்றுள்ளது இங்கிலிஷ் பிரிமியர் லீக் குழுவான மான்செஸ்டர் யுனைடெட்.

கார்த்திக்காக காத்திருக்கும் படங்கள், இயக்குநர்கள்
வித்தியாசமான, சவாலான கதைக்களம் அல்லது கதாபாத்திரம் தயாராக உள்ளது என்றால் இயக்குநர்கள் நம்பிக்கையுடன் நடிகர் கார்த்தியை அணுகலாம்.
சிம்புவை இயக்குபவர் தனுசுக்கும் கதை சொன்னார்
‘டிராகன்’ படத்தின் வெற்றியை அடுத்து, சிம்புவை வைத்து படம் இயக்கும் அஸ்வத் மாரிமுத்து, அடுத்ததாக தனுஷிடம் கதை சொல்லி இருக்கிறார்.