அது மன அமைதி, தூய்மை ஆகியவற்றைத் தூண்டி, உண்மையான மெய்ப்பொருளின் தன்மையை விளக்கி, புலன்கள் வெளி உலகத்திற்கு வசப்படும் தன்மையை விலக்கி, புதுவேகத்துடன் ஆன்மிகப் படிநிலைகளில் முன்னேறும்படி செய்கிறது.
ஆனால் ஆன்மிக சாதகர்கள் செல்ல வேண்டிய உண்மையான திசைக்குமாறாகச் சென்றால் ஆன்மிக வழியை இழந்தவர்கள் ஆவர். சரியான வழியை அறியாத அறிவு, தவறான வழியின் மயக்கம் இவற்றால் அவர்கள் பாதிப்படைகின்றனர். அவர் களின் வழிகாட்டிகளும் திசைமாறியவர்களாகவே அமைகின்றனர். உலகப் பெருமையை நினைத்து மந்திர சித் தியினால் சில அற்ப சக்திகளைப் பெற்று தன்னை உயர்ந்தோர் என நினைத்துக்கொண்டு 'தமது வாழ்க்கை எலாம் வாழ்க்கை என மதித்து மயங்குகிறார்கள்'.
"குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்
என்று 'அபக்குவன்' நிலையை திரு மந்திரம் விளக்கிக் கூறுகிறது. தவம், ஞானம் என்னும் இருவகை நிலைகளி லும் உள்ள போலிவேடம், உண்மை வேடம் என்னும் இவற்றை திருமூலர் 23 திருமந்திரங்களால் விளக்குகிறார். 'அபக்குவன்' ஆன பக்குவம் இல்லாத சிலர் நல்ல குருவை நாடாமல், போலி குருவைக் குருவாகக் கொண்டு பயன் பெறுவதை ஏளனம் செய்கிறார். இங்கு 'குருடு' என்பது அவர்களின் 'அறியாமை' யைக் குறிக்கும்.
அருணகிரிநாதர் காலத்தில், ரச வாதத்தில் அதாவது உலோகங்களைப் பொன்னாகச் செய்வதில் விருப்பமுள் ளவர்கள் நிறைய இருந்துள்ளனர். அந்த ஆசை மக்களின் பேராசையென்றும் அந்த பயனற்ற ஆசையை அறவே ஒழித்து, உண்மைப் பெருநிலையைத் தெரிந்து கொள்வதற்கு உற்ற வழி முருகன் அருளே. அந்த அருளைக் கொடுப்பது திருப்புகழே என மக் களுக்கு அறிவுரை கூறவே, 'சித்து வகுப்பு' பாடுகிறார் அருணகிரிநாதர்.
"அடல் புனைந்த வேலும் மயிலும் என்றும் வாழி
அரிய தொன்று கூற அருகிருந்து கேண்மின்"
"வலிமை வாய்ந்த வேலும் மயிலும்' எஞ்ஞான்றும் வாழ்வதாக! அருமை யான விஷயம் ஒன்று சொல்லப் போகி றேன். அதை என்பக்கத்தே இருந்து கேட்பீர்களாக!” என்று தொடங்கி 119 மூலிகைகள் பற்றிய ஒரு பட்டியலைக் கொடுத்து இந்த மூலிகைகள் மூலம் நீங்கள் பெறும் சித்துக்கள் எல்லாம் பெரிதல்ல. இந்த சித்துக்கள் மூலம் ஜீவ சிவ ஐக்கியத்தை பெறமுடியாது என்றும் எடுத்துக்காட்டுகிறார்.
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
"ஸங்கல்ப ஸித்த சாயி”
அனுபூதியடைந்த மகான் ஒரு வரது முன்னிலையில் வசிப்பது சாதகன் ஒருவனுக்கு மிக விரைவான ஆன்மிக முன்னேற்றத்தைக் கொடுக்கும் என்பது பெரியோர் வாக்கு.
சிந்தாதேவி
ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணி மேகலையில் கூறப்பட்டுள்ள தெய்வம் சிந்தாதேவி ஆவாள்.
ஆகாசமூர்த்தி
இந்தியத் திருநாட்டின் பல்வேறு அரச மரபினரின் கலைப் படைப்புகளைத் தொகுத்து நோக்குவோ மாயின் காண்போரின் உள்ளத்தை ஈர்க்கும் தனிச்சிறப்பு ஆடல் வல்லான் திருமேனிகளுக்கே உரியவைகளாக இருப்பதைக் காணலாம்.
நமக்குள்ளேயே இருக்கும் ரகசியம்!
யோகயுக்தோ விசுத்தாத்மா ஜிதேந்த்ரிய ஸர்வபூத்த்மபூதாத்மா குர்வன்னபி நலிப்யதே (5:7)
12 வரிகளில் பாரதம் முழுவதும் பாராயணம் செய்த பலன்!
இந்து மதத்தின் மூல புருஷராக விளங்குப வர் வியாசபகவான்.
கசனின் குருபக்தி
மூவுலகையும் ஆள வேண்டும் என்ற எண்ணம் தேவர்களும், அசுரர்களும் இடையே போட்டி ஏற்பட்டு கொண்டே இருந்தன.
தேனையும் பாகையும் போலும் பனிமொழியே!
சென்ற இதழில், உமை யம்மையானவள் மலைமகள் அலை மகள் கலைமகள் மூன்று சக்தி களின் அம்சமாகவே கருதப்படுகிறாள்.
பிரச்னைகளை களைவாள் பிரத்யங்கிரா!
ஓரு கோயிலுக்கு மிக முக்கியமான ஒன்று, ஆகமம்.
அவதாரப் புருஷர் மத்வர்!
12.10.2024 - ஸ்ரீமத்வாச்சாரியார் ஜெயந்தி
காட்டுமன்னனாரை கண்டு சேவிப்போம் வாருங்கள்!
என் புத்தக சாலையில் ஏதோ ஒரு புத்தகத் தைத் தேடியபோது, எப் போதோ வாங்கிய “பொன்னியின் செல்வன்\" கிடைத்தது. படித்து வெகு நாள் ஆனதால் மறுபடியும் முதல் அத்தியாயத்தை வாசிக்கத் தொடங்கினேன். என்னை மறந் தேன்... இதோ அந்த வர்ணனை சில வரிகளில். வீர நாராயண ஏரிக்கரை, ஆடித் திங்கள் பதி னெட்டாம் நாள், முன் மாலை நேரத்தில், அலைகடல் போல் விரிந்து பரந்திருந்த வீர நாரா யண ஏரிக்கரை மீது ஒரு வாலிபவீரன் குதிரை ஏறிப்பிரயாணம் செய்து கொண்டிருந்தான்.