Essayer OR - Gratuit
அமெரிக்கா மிரட்டல் பணிந்ததா இந்தியா ?
Kanmani
|March 26, 2025
அண்மையில் அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு மோடி விஜயம் செய்தபோது, அவர் அமர வசதியாக நாற்காலியையே நகர்த்திக்கொடுத்தார் அந்நாட்டு அதிபர் டிரம்ப். அப்படி, வாஷிங்டனில் வலயவந்த, நம் மோடியை பார்த்து யாராவது அமெரிக்கவுக்கு அடிபணிபவர் என்று சொல்ல முடியுமா?

ஆனால், சர்வதேச வர்த்தக ஆராய்ச்சி அமைப்பின் (ஜிடிஆர்ஐ) தலைவர் அஜய் ஸ்ரீவஸ்தவா, “தவறான தரவுகளை பயன்படுத்தி இந்தியாவை பகிரங்கமாக அவமானப்படுத்துகிறார் டிரம்ப்” என்று சொல்லிவிட்டார்.
ஒருவேளை நம் இந்தியர்களை சங்கிலியால் பிணைத்து சரக்கு விமானத்தில் பொருட்களைப்போல் கொண்டுவந்து இறக்கியதை சொல்லியிருப்பாரோ... என்று கருதினால், இது அதற்கும் மேற்பட்ட விவகாரமாக இருக்கிறது.
அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள டிரம்ப், வெளிநாட்டு இறக்குமதி பொருட்கள் மீதான வரி விதிப்பில் அதிரடி மாற்றங்களை கொண்டு வந்துள்ளார்.
அதாவது, ஒரு நாடு எவ்வளவு வரி விதிக்கிறதோ, அதே அளவுக்கு அமெரிக்காவும் பதிலுக்கு வரி விதிக்கும் எனக் கூறியிருக்கிறார்.
இதற்கு சீனா, கனடா ஆகிய நாடுகள் பதிலடி கொடுத்துள்ளன. அதாவது, அதிரடி நடவடிக்கையாக அமெரிக்காவின் இறக்குமதிக்கு கூடுதல் வரிகளை விதிப்பதாக அறிவித்துள்ளன.
ஆனால், இந்தியாவோ, அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளதோடு, அமெரிக்க பொருட்களுக்கான இறக்குமதி வரியை குறைப்பதற்கும் முடிவு செய்துள்ளது.
ஆனால், தொடர்ந்து இந்தியாவை அவமானப்படுத்தும் டிரம்புடன் வர்த்தக பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது என்றும், பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவும் வரிகளை அறிவிக்க வேண்டும் எனவும் சர்வதேச வர்த்தக ஆராய்ச்சி அமைப்பின் (ஜிடிஆர்ஐ) தலைவர் அஜய் ஸ்ரீவஸ்தவா ஆலோசனை வெளியிட்டுள்ளார்.
இந்தியாவில் விவசாய பொருட்களின் இறக்குமதிக்கு உள்ள கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும். இதற்காக வேளாண் சந்தையை திறக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. இதை இந்தியா ஏற்கக்கூடாது என்றும், அவ்வாறு வேளாண் சந்தையை திறந்துவிட்டால் இந்தியாவுக்கு சிக்கலை ஏற்படுத்திவிடும் என்று அவர் அளிக்கும் விளக்கமும் ஏற்புடையதாக இருக்கிறது.
Cette histoire est tirée de l'édition March 26, 2025 de Kanmani.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Kanmani

Kanmani
இயக்குனர்களிடம் சரண்டர்.ஆகிடுவேன்!
இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் வித்யா பாலன், தமிழில் நேர்கொண்ட பார்வையில் நடித்தார்.
2 mins
August 20, 2025

Kanmani
களைக்கொல்லி: நச்சாகிறதா நிலத்தடி நீர்!.
விவசாயம் நம் நாட்டின் முதுகெலும்பு. ஆனால் இன்று பல்வேறு பிரச்னைகளால் விவசாயிகள் தவித்து வருகிறார்கள். பயிர்களை சாகுபடி செய்து மகசூல் எடுக்கும் வரை போராட்டம்தான்.
1 mins
August 20, 2025

Kanmani
மலையை ஆக்கிரமிக்கும் காங்கிரீட்காடுகள்... சரிக்கும் இயற்கை!
மனிதர்களின் நாசவேலை வகைவகையாய் தொடர்வதால் இயற்கையின் சீற்றம் பலவிதமாக வெளிப்படுகிறது.
2 mins
August 20, 2025

Kanmani
என்னவாகும் தமிழ்நாடு?
2000 ஆண்டுகளுக்கு முன்னர் உலகில் ஆறே ஆறு சமுதாய மக்களே முக்கியமானவர்கள்.
4 mins
August 20, 2025

Kanmani
SQR தெரியுமா?
படிச்சது நல்லா நினைவில் இருக்கணும்னா என்ன செய்யணும்? உங்க கேள்வியிலேயே பாதி பதில் ஒளிஞ்சிருக்கு. 'படிச்சாலே' போதும், அது தன்னால நினைவில் இருக்கும்.
4 mins
August 20, 2025

Kanmani
புரிஞ்சிக்க முடியாத கேரக்டரில் நடிக்கணும்!
முழுக்க முழுக்க பாலிவுட்டிலேயே செட்டில் ஆகி கவர்ச்சி சோலோ டான்ஸ், கன்டன்ட் உள்ள வெப் சீரிஸ் என பிஸியாக இருக்கிறார் தமன்னா. லவ் பிரேக் ஆன பிறகு இன்னும் சோஷியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கும் தமன்னா, கிளாமர் புகைப்படங்களை ட்வீட்டி ரசிகர்களை கிக்கேற்றி வருகிறார். அவருடன் ஒரு அழகான சிட்சாட்.
2 mins
August 20, 2025

Kanmani
இருமனம் இணைந்திடும்...
அந்தத் திருமண மண்டபம் சட்டென நிசப்தமானது. சற்று முன்பு வரை மேளதாளத்தோடும் உறவினர்களின் கலகலப்பான உபசரிப்போடும் தடபுடல் விருந்தோடும்பரபரப்பாய் இருந்த மண்டபம் சில நிமிட கலவரத்தில் கப்சிப்பானது.
4 mins
August 20, 2025

Kanmani
சிவன் கோவிலுக்கு சண்டை போடும் தாய்லாந்து - கம்போடியா?
ரஷ்யா-உக்ரைன், இஸ்ரேல்-பாலஸ்தீனம், இந்தியா-பாகிஸ்தான் போர்களைத் தொடர்ந்து தற்போது சர்வதேச அளவில் கவனம் பெற்றிருப்பது தாய்லாந்து-கம்போடியா இடையிலான மோதல்தான்.
4 mins
August 20, 2025

Kanmani
பாலியல் குற்றங்கள் பெருகுவது ஏன்?
பா.ஜ.க. ஆட்சி செய்யும் குஜராத் மாநிலத்தில், காவல்துறை சார்பில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டி மூலம்... \"பெண்களே நள்ளிரவு விருந்துகளில் கலந்து கொள்ளாதீர்கள்.
3 mins
August 20, 2025

Kanmani
தக்காளியிலிருந்து உருவானதா உருளைக்கிழங்கு?
இந்தியாவில், 19 ஆம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட உருளைக்கிழங்கு, சமையலில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது, மேலும் இது கார்போ ஹைட்ரேட்டுகள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்களின் ஆதாரமாக உள்ளது.
1 mins
August 20, 2025
Translate
Change font size