CATEGORIES
நாட்டில் 85 சதம் சிறு தொழில்கள் பாதிப்பு
டன் & பிராட்ஸ்ட்ரீட் நிறுவன ஆய்வு தகவல்
மின்வாகனங்கள் விற்பனை கடந்த நிதியாண்டில் 20 சதம் சரிவு
புது தில்லி, ஏப்.23 கடந்த நிதியாண்டில், மின் வாகனங்கள் விற்பனை, 20 சதம் அளவுக்கு சரிவைக் கண்டிருப்பதாக, மின் தயாரிப்பாளர்கள் சங்கமான, எஸ்எம் இவி தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
நாட்டில் கோவிட் தொற்று அதிகரிப்பால் இந்திய விமானங்களுக்கு கனடா, யுஏஇ தடை
ஒட்டவா, ஏப்.23 இந்தியாவில் கோவிட் தொற்று இரண்டாவது அலை பரவி மிகக்கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
ஏப்.26ம் தேதி சுசூகி ஹயபுசா சந்தையில் அறிமுகம்
மும்பை, ஏப்.23 சுசூகி நிறுவனம் 2021 ஹயபுசா மாடலை ஏப்.26ம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
புதிய பர்பிள் நிறத்தில் ஐபோன் 12 சந்தையில் அறிமுகம்
புதிய பர்பிள் நிறத்தில் ஐபோன்12 மற்றும் ஐபோன்12 மினி ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாக உள்ளது. இதற்கான முன்பதிவு இந்த வாரத்தில் துவங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் கடந்த நிதியாண்டில் 17.38 சதம் சரிவு
கடந்த நிதியாண்டில் நாட்டின் மொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம், 17.38 சதம் அளவுக்கு சரிவைக் கண்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
பெங்களூரு மெட்ரோ ரயில் திட்டம் பகுதி 2ஏ, 2பி-க்கு அமைச்சரவை ஒப்புதல்
பெங்களூரு மெட்ரோ ரயில் திட்டம் பகுதி 2ஏ (சென்ட்ரல் சில்க் போர்டு ஜங்ன் முதல் கே.ஆர்.புரம் வரை) மற்றும் 2பி (கே.ஆர். புரம் முதல் ஹெப்பல் ஜங்ன் வழியாக விமான நிலையம் வரை ஆகியவற்றுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 58.19 கிலோமீட்டர் நீளமுடைய இந்தத் திட்டத்திற்கான மொத்த மதிப்பீடு ரூ.14,788.101 கோடி ஆகும்.
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 2,95,041 பேருக்கு கோவிட் தொற்று
நாட்டில் கோவிட் பெருந்தொற்றின் இரண்டாது அலை பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த தொற்று பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் தொற்று பரவல் குறித்து மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ்பூஷண் தெரிவித்துள்ளதாவது:
டால்ச்சர் நிறுவன உரத்துக்கான பிரத்தியேக மானியக் கொள்கை: அரசு ஒப்புதல்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, நிலக்கரி வாயுவாக்கம் மூலம் டால்ச்சர் ஃபெர்டிலைசர்ஸ் லிமிடெட் உற்பத்தி செய்யும் உரத்துக்கு பிரத்தியேக மானியக் கொள்கையை வகுப்பதற்கான உரத்துறையின் முன்மொழிதலுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
7.2 லட்சத்துக்கும் அதிகமான வாகனங்கள் ரயில்வே மூலம் மாருதி அனுப்பியுள்ளது
கடந்த, 5 ஆண்டுகளில் கிட்டத் தட்ட, 7.2 லட்சத்துக்கும் அதிகமான வாகனங்களை மாருதி சுசூகி நிறுவனம் இந்திய ரயில்வே மூலம் அனுப்பி இருப்பதாக தெரிவித்துள்ளது.
நடப்பாண்டில் இந்தியாவில் எரிவாயு உற்பத்தி சரிவு
நடப்பு நிதியாண்டில் இந்தியாவில் தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் 5 சதமும், இயற்கை எரிவாயு உற்பத்தி 8 சதமும் சரிந்துள்ளதாக மத்திய அரசு தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
நாட்டில் அதிகரித்து வரும் கோவிட் தொற்றால் ஹீரோ நிறுவன தொழிற்சாலை மூடல்
நாட்டின் மிகப்பெரிய இருசக்கர வாகன உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் நாடு முழுவதும் அதிகரித்து வரும் கோவிட் தொற்றுக் காரணமாக, இந்தியாவில் இருக்கும் தனது உற்பத்தி தொழிற்சாலைகள் அனைத்தையும் தற்காலிகமாக மூடியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
கடந்த 3 ஆண்டுகளில் 9,300 மெட்ரிக் டன் ஆக்சிஜன் சிலிண்டர் மத்திய அரசு ஏற்றுமதி செய்துள்ளது
நாட்டில் தற்போது கோவிட் தொற்று பாதித்தவர்களுக்கான ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு உச்சபட்ச அளவில் ஆக்சிஜன் சிலிண்டரை அதிகளவில் ஏற்றுமதி செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
2030க்குள் பட்டினியை ஒழிக்க எடுக்கும் முயற்சிகள் வீணாகும் சூழல் நிலவுகிறது: அமைச்சர் தகவல்
கோவிட் தொற்று பேரிடரால் 2030க்குள் பட்டினியை ஒழிக்க நாம் எடுத்துவரும் முயற்சிகள் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது என ஐநா மாநாட்டில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
புதிய ஆக்சிஜன் விநியோக முறையை டிஆர்டிஓ உருவாக்கியது
மிகவும் உயரமான பனிப்பிரதேச இடங்களில் பணிபுரியும் ராணுவ வீரர்களுக்காக எஸ்பிஓ2 வை சார்ந்து தானியங்கி துணை ஆக்சிஜன் விநியோக முறையை ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) உருவாக்கியுள்ளது.
புதிய இன்ஃபினிக்ஸ் ஹாட் 10 பிளே ஃபிளிப்கார்டில் விற்பனைக்கு வருகிறது
புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இன் ஃபினிக்ஸ் ஹாட் 10 பிளே ஸ்மார்ட்போன் வரும் ஏப்.26ம் தேதி ஃபிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும் எனத் தெரியவந்துள்ளது. சீனாவைச் சேர்ந்த டிரான்சியன் குழுமம் இந்த ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் விலை ரூ.8,499 மட்டுமே.
மிட் பட்ஜெட் விலையில் ஒப்போ ஏ54 அதிக அம்சங்களுடன் அறிமுகம்
புதிய ஒப்போ ஏ54 என்ற ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஒப்போ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஃப்ளிப்கார்ட் தளத்தில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்துள்ளது.
ரெம்டெசிவிர் உயிர் காக்காது மத்திய அரசு விளக்கம்
ரெம்டெசிவிர் மருந்து, உயிர் காக்கும் மருந்து அல்ல என்பதால், அதை கோவிட் தொற்று பாதித்த நோயாளிகளுக்கு அவசியமின்றி தரக்கூடாது என, மத்திய அரசு எச்சரித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
விற்பனையில் 2021 டிரைபர் மாடல் 75 ஆயிரம் யூனிட்களை கடந்தது
2021 டிரைபர் மாடலை கடந்த மாதம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இதன் விற்பனையில் புதிய சாதனை படைத்துள்ளதாக ரெனால்ட் தெரிவித்துள்ளது. இது குறித்து செய்தியாவது : ரெனால்ட் நிறுவனத்தின் 2021 டிரைபர் மாடல் விற்பனையில் 75 ஆயிரம் யூனிட்கள் கடந்துள்ளது.
சில நிமிடங்களில் கேடிஎம் 1290 மோட்டார்சைக்கிள் விற்று தீர்ந்தது
கேடிஎம் 1290 சூப்பர் டியூக் ஆர்ஆர் மோட்டார்சைக்கிள் 48 நிமிடங்களில் விற்றுத்தீர்ந்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது. இது குறித்து விரிவான செய்தியாவது: கேடிஎம் 1290 சூப்பர் டியூக் மோட்டார்சைக்கிள் விற்பனை ஆன்லைனில் நடைபெற்றது.
கோவிட் தொற்றின் 2வது அலையில் ஆக்சிஜன் தேவை அதிகரிப்பு: ஆய்வு தகவல்
கோவிட் தொற்று முதல் அலையின் போது இருந்ததை விட 2வது அலையில் ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஏத்தர் 450 இ-ஸ்கூட்டர் டெலிவரி கோவை, திருச்சியில் தொடங்குகிறது
ஏத்தர் 450 மின்சார ஸ்கூட்டர்களின் டெலிவரி கோயம்புத்தூர் மற்றும் திருச்சி நகரங்களில் தொடங்கவுள்ளது. ஏத்தர் 450 எக்ஸ் மற்றும் 450 ப்ளஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தற்போது டெலிவரி செய்யப்பட்டு வருகிறது.
இரண்டே நாளில் எம்ஐ11 சீரிஸ் அறிமுகம்
சென்னை, ஏப்.20 புதிய எம்ஐ11 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை ஏப்.23ம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது எம்ஐ11 எக்ஸ், எம்ஐ11 எக்ஸ் ப்ரோ மற்றும் எம்ஐ11 அல்ட்ரா ஆகிய சாதனங்கள் அறிமுகப்படுத்தப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசு அலுவலகங்களில் 50 சத ஊழியர்களுக்கே அனுமதி புதிய வழிகாட்டி நெறிமுறைகள் மத்திய அரசு வெளியீடு
நாடு முழுவதும் கோவிட் தொற்று வேகமாக பரவி வருவதை தொடர்ந்து மத்திய அரசு அலுவலகங்களில் ஊழியர்களுக்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட் டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இது குறித்து அரசு வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிட்டுள்ளது.
லிடார் தொழில்நுட்பத்தில் மின்சார கார்
லிடார் சென்சிங் தொழில்நுட்பத்தில் முதல் மின்சார கார் சீனாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சீனாவைச் சேர்ந்த எக்ஸ்பெங் என்ற நிறுவனம் இந்த மின்சார காரை தயாரித்து வருவதாக தெரிகிறது.
திருப்பதியில் மே 1 முதல் ரூ.300 டிக்கெட் பதிவு செய்த 15000 பக்தர்களுக்கு அனுமதி: தேவஸ்தானம் தகவல்
கோவிட் தொற்று பரவல் அதிகரிப்பால், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 12-ந் தேதியில் இருந்து இலவச தரிசன பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டது. அதேபோல் ரூ.300 தரிசன டிக்கெட் டிக்கெட்டில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்தது.
நாட்டில் கோவிட் பரவல் அதிகரிப்பால் பொருளாதாரம் நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தக்கூடும்: ராஜீவ் குமார் கருத்து
நாட்டில் தற்போது கோவிட் தொற்றின் பரவல் அதிகரித்து வருவதால், பொருளாதாரத்தில் அதிக நிச்சயமற்ற தன்மையை சந்திக்க தயாராக இருக்க வேண்டும் என்று நிதி ஆயோக்கின் துணைத் தலைவர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளி வந்துள்ளது.
நான்காவது காலாண்டில் எச்டிஎஃப்சி வங்கி ரூ.8,434 கோடி நிகர லாபம் ஈட்டியது
முன்னணி தனியார் துறையைச் சேர்ந்த எச்டிஎஃப்சி வங்கி நான்காவது காலாண்டில் ரூ.8,434 கோடி நிகரலாபத்தை ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த வங்கி வெளியிட்ட செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
பொறியியல் மாணவர்கள் செமஸ்டர் தேர்வின்போது புத்தகத்தை பார்த்து எழுத அண்ணா பல்கலை., அனுமதி
வரும் மே மாதம் நடைபெற உள்ள அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வின் போது பொறியியல் மாணவர்கள் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுத அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி அளித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. கடந்த முறை செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைனில் நடத்தி வந்த அண்ணா பல்கலைக் கழகம் அந்த முறையை கைவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
கடந்த நிதியாண்டில் மருந்துப்பொருட்கள் ரூ.1.83 லட்சம் கோடி அளவுக்கு ஏற்றுமதி
கடந்த நிதியாண்டில், இந்திய மருந்து நிறுவனங்களின் ஏற்றுமதி, 18 சதம் அளவுக்கு அதிகரித்துள்ளதாகவும், கிட்டத் தட்ட, ரூ.1.83 லட்சம் கோடி அளவுக்கு ஏற்றுமதி ஆகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்து, இந்திய மருந்துகள் ஏற்றுமதி மற்றும் மேம்பாட்டு கவுன்சில் தெரிவித்துள்ளதாவது: