CATEGORIES
ரயில் நிலைய பெயர்ப் பலகையில் கருப்பு வண்ணம் பூசினால் 6 மாதம் சிறை
ஹிந்தியில் எழுதப்பட்ட ஊர்ப் பெயரை அழிக்கிறோம் என்ற பெயரில் ரயில் நிலையங்களில் உள்ள பெயர்ப் பலகைகளில் கருப்பு மை பூசி சேதப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கைவிடுத்ததுள்ளது.

ஜெயலலிதா பிறந்த நாள்: பிரதமர் மோடி புகழாரம்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி (பிப். 24) அவரை நினைவுகூர்ந்து, 'கருணை உள்ளம் கொண்ட தலைவர்; தமிழகத்தின் வளர்ச்சிக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்' என பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் காலியாக உள்ள பதவிகளை நிரப்ப உத்தரவு
தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் காலியாக உள்ள தலைவர், உறுப்பினர் பதவிகளை மூன்று மாதங்களில் நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
ரூ. 20 லட்சம் வழிப்பறி வழக்கு: வணிக வரித் துறை அதிகாரிகள் இருவர் கைது
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் ரூ. 20 லட்சம் வழிப்பறி வழக்கில், வணிக வரித் துறையைச் சேர்ந்த இரு அதிகாரிகள் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.

ஹிந்தி எதிர்ப்பு நாடகமாடுகிறது திமுக: அண்ணாமலை
ஹிந்தி எதிர்ப்பு நாடகத்தை திமுக மீண்டும் தொடங்கியுள்ளது என்று தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலை குற்றஞ்சாட்டி உள்ளார்.
வளர்சிதை மாற்ற குறைபாடுகள்: இலவச பரிசோதனை திட்டம் அறிமுகம்
தமிழகம் முழுவதும் வளர்சிதை மாற்ற குறைபாடுகள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளவர்களுக்கு இலவச மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என மெடிந்தியா மருத்துவமனையின் தலைவரும், ஜீரண மண்டல மருத்துவ நிபுணருமான டி.எஸ்.சந்திரசேகர் தெரிவித்தார்.
தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆள்கள் சேர்ப்பு: இளைஞர் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல்
தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆள்களை சேர்த்த வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞர் மீது குற்றப்பத்திரிகையை என்ஐஏ அதிகாரிகள் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

புதிய மாவட்ட பொறுப்பாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
தேர்தல் பணி குறித்து அதிமுகவில் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்டப் பொறுப்பாளர்களுடன் கட்சியின் பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினார்.
வேலை வாங்கித் தர லஞ்சம் பெற்றதாக வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றிய உத்தரவுக்கு எதிரான ராஜேந்திர பாலாஜி மனு மீது பிப்.28-இல் விசாரணை
வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக தனக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி பிறப்பித்த உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை பிப். 28-ஆம் தேதி பட்டியலிட உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

பிஎம் கிசான்: 9.8 கோடி விவசாயிகளுக்கு ரூ.22,000 கோடி
பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் (விவசாயிகள் உதவித் தொகை) 19-ஆவது தவணையாக சுமார் 9.8 கோடி விவசாயிகளுக்கு ரூ.22,000 கோடிக்கு அதிகமான நிதியை பிரதமர் மோடி திங்கள்கிழமை விடுவித்தார்.

நிதி நெருக்கடியிலும் மக்கள் நலத் திட்டங்கள்
மத்திய அரசு தரும் நிதி நெருக்கடிகளுக்கு இடையிலும் மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

பாலியல் குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தினார்.

தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம்: ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு
அமைச்சர்கள் குழு கூட்டத்தில் முடிவு இல்லை

முதல் வரிசையும் முதல் பெஞ்சும்
முதல் வரிசையில் அமர்ந்து ஆசிரியரின் ஒவ்வொரு வார்த்தைக்கும் தலையை ஆட்டியவர்களில் பலர், வாழ்க்கையில் முன்னேறியவர்களாக இருப்பதில்லை. இறுதி பெஞ்சில் அமர்ந்திருந்தவர்கள் சாதனையாளர்களாக மிகப் பெரும் ஆளுமைகளாக உயர்ந்து நிற்பதும் தெரியவரும்.
நெல்லை அருகே ஐவர் கொலை வழக்கில் 11 பேருக்கு ஆயுள் தண்டனை
திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் அருகே இருதரப்பினரிடையே நிகழ்ந்த மோதலில் 5 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில், ஒருவருக்கு ஆயுள் தண்டனையும், 10 பேருக்கு 4 ஆயுள் தண்டனையும் விதித்து திருநெல்வேலி மாவட்ட மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.
பொன் மாணிக்கவேல் மீதான வழக்கு: சிபிஐ அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவு
முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தது ஏற்புடையதா என கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம், இதுதொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்வதற்கு முன்பாக நடத்திய விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய திங்கள்கிழமை உத்தரவிட்டது.

ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் பணியிட மாற்றம்
ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் ஸ்ரீவெங்கட பிரியா பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
புதிய வருமான வரி மசோதா: நாடாளுமன்ற குழுவின் முதல் கூட்டத்தில் பரிசீலனை
புதிய வருமான வரி மசோதாவை பரிசீலனை செய்யும் நாடாளுமன்ற தற்காலிக குழுவின் முதல் கூட்டம் தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனுக்கு எதிராக சிறப்பு புலனாய்வு குழுவினர் திங்கள்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
செம்மொழி நாள் விழா: மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டி
செம்மொழி நாள் விழாவையொட்டி, தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பிளஸ் 1, பிளஸ் 2 மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகை புகார்; விசாரணைக்கு ஆஜராக சீமானுக்கு போலீஸார் அழைப்பாணை
நடிகை அளித்த பாலியல் வன்கொடுமை புகார் தொடர்பான விசாரணைக்கு வரும் 27-ஆம் தேதி ஆஜராகுமாறு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு வளசரவாக்கம் போலீஸார் அழைப்பாணை அனுப்பினர்.

உலகின் எதிர்காலம் இந்தியா: பிரதமர் மோடி
உலகின் எதிர்காலம் இந்தியாவை சார்ந்து உள்ளதாக பிரதமர் மோடி திங்கள்கிழமை தெரிவித்தார்.

பட்டாசுக் கிடங்கு வெடி விபத்தில் 3 பெண்கள் உயிரிழப்பு
தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர் அருகே பட்டாசுக் கிடங்கில் திங்கள்கிழமை பிற்பகல் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பெண்கள் உடல் சிதறி உயிரிழந்தனர்.
முதல்வர் மருந்தகம்: இடதுசாரிகள் வரவேற்பு
தமிழகத்தில் முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளதற்கு இடதுசாரி கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.
நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகினார் காளியம்மாள்
நாம் தமிழர் கட்சியின் பெண்கள் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள், அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் அமித் ஷா இன்று கோவை வருகை
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா செவ்வாய்க்கிழமை இரவு கோவைக்கு வருகிறார்.
பெங்களூரு கற்பிக்கும் பாடம்!
கடந்த சில மாதங்களாக ஊடகங்களை ஆக்கிரமித்த பெருமழை, கடுங்குளிர் ஆகிய விஷயங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு, இனி வரும் காலங்களில் அதிகரிக்க இருக்கும் வெப்பநிலை குறித்த செய்திகள் உலா வரத் தொடங்கியுள்ளன.

சரக்கு ரயில் என்ஜின் தடம் புரண்டது
திருவாரூரில் சரக்கு ரயில் என்ஜின் திங்கள்கிழமை தடம் புரண்டது.
அகில இந்திய அளவில் ஜூன் 26-இல் வேலைநிறுத்தம்
தமிழக மின்வாரிய ஊழியர்கள் பங்கேற்க திட்டம்
சிறப்பு விபத்து காப்பீடு திட்டம்: தாம்பரத்தில் பிப். 28 வரை சிறப்பு முகாம்
மத்திய அரசின் சிறப்பு விபத்து காப்பீடு திட்டத்தில் இணைவதற்கு வசதியாக தாம்பரம் கோட்டத்துக்குள்பட்ட அனைத்து அஞ்சலகங்களிலும் பிப். 28-ஆம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.