試す 金 - 無料
நோய்...மருந்து.நோயாளி...ஒரு பார்வை!
Kungumam Doctor
|October 01, 2024
காலநிலை மாறினால் உடலும், மனமும் மாறுமா”. என்று பல காரும் இன்றைக்கு "மருத்துவர்களிடம் பொதுவான கேள்வியாக தொடர்ந்து கேட்கிறார்கள். வெகுஜன மக்களின் பார்வையிலேயே கூற வேண்டுமென்றால், முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்களில்லை என்ற வாக்கியத்திற்கு ஏற்ப, நம்முடைய இதிகாசங்களில் ஒரு நூலான மகாகவி காளிதாசர் அவர்கள் எழுதிய ரிது சம்ஹாரம் என்ற நூலில் நான்கு பருவ நிலைக்கு ஏற்ப மனிதர்களின் மனநிலையில் மாற்றங்கள் ஏற்படுகிறது என்று அந்நூலில் கூறப்பட்டு இருக்கிறது.
-

பருவகாலங்களுக்கு என்று ஒரு சில இயல்புகள் என்றுமே இருக்கிறது. ஆனால், இன்றைக்கு இருக்கின்ற தலைமுறையினருக்கு அனைத்து விதமான உணவுகளும், அனைத்து நாட்களிலும் கிடைப்பதால், உடலும் அதற்கேற்றவாறு மாறிக்கொண்டிருக்கிறது.
காலநிலை மாற்றத்தினால் நம் உடலிற்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகி விட்டது என்பது உண்மை. ஆனால் அந்த நோய் எதிர்ப்பு சக்தியை முறையாக செயல்பட விடாமல், நவீன கால லைப்ஸ்டைல் மனிதர்களை நோயாளிகளாக மாற்றி இருக்கிறது என்பதுதான் வருத்தமாக இருக்கிறது. உதாரணத்திற்கு, நம்மிடம் இருக்கும் உணவுப் பழக்கம், உடற்பயிற்சி இல்லாமல் எடை அதிகரிப்பது, சோம்பேறித்தனம் போன்றவற்றால் நம்முடைய உடலின் தன்மையை மாறவைத்து, உடலை சரியாகக் கையாளாமல் இருக்கின்றோம் என்பதே இன்றைய தலைமுறைக்கு இருக்கும் மிகப்பெரிய சவால்.
உதாரணத்திற்கு, நம் மக்கள் இன்றைக்கு நீரிழிவு நோயினால் பாதிக்கப்படும் போது, அவர்கள் சாப்பிடும் சாப்பாட்டைப் பற்றி விதம் விதமாக கூறுவார்கள். மருத்துவர்களுக்கோ சில நேரம், நியூட்ரிசியனிடம் பேசிக்கொண்டிருக்கிறோமோ என்கிற அளவுக்கு சந்தேகம் வர ஆரம்பித்துவிடும். அதாவது, சர்க்கரை நோயின் பாதிப்பு குறைய வேண்டும் என்பதற்காக, வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக, நாட்டுச் சர்க்கரை சாப்பிடுகிறேன் என்பார்கள். உண்மையில், வெள்ளை சர்க்கரையும், நாட்டுச் சர்க்கரையும் கரும்பில் இருந்துதானே வருகிறது. கரும்பின் தன்மை மாறாமல் இருக்கும் போது, எப்படி நாட்டுச் சர்க்கரை, சர்க்கரை வியாதியை வரவிடாமல் தடுக்கும் என்பதை மறக்காமல், மருத்துவர்களுக்கு பாடம் எடுப்பார்கள்.
அதாவது, ஒரு நபருக்கு சர்க்கரை வியாதி முற்றிப் போகாமல் இருக்க வேண்டுமென்றால், கண்டிப்பாக இனிப்பு சார்ந்த, வெள்ளை சர்க்கரை, நாட்டுச் சர்க்கரை, கருப்பட்டி, தேன், பனங்கற்கண்டு போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது. இங்கு ஒரு வகையான உணவால், நோயின் தன்மை தீவிரமாகும் என்றால், அதற்கு பதில் அதில் சம்பந்தப்பட்ட உணவு வகைகளை சாப்பிடக் கூடாது என்பதேயாகும். அதாவது, நோ மீன்ஸ் நோதான்.
このストーリーは、Kungumam Doctor の October 01, 2024 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、9,500 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Kungumam Doctor からのその他のストーリー

Kungumam Doctor
நேர மேலாண்மையும் இலக்கு நோக்கிய பயணமும்!
வீட்டைப் பெருக்குவது, பாத்திரம் தேய்ப்பது ஒரு முறைதான், தொலைக்காட்சி ஒரு மணிநேரம் மட்டுமே பார்ப்பது, சோசியல் மீடியாவிற்கு இரண்டு மணி நேரம் இப்படி நம் மனக்கட்டுப்பாடுகளுக்கான வரையறைகளையும் எண்களாக வகுத்துக் கொள்வது கண்கூடான பலன்களைத் தரும்.
2 mins
July 16-31, 2025

Kungumam Doctor
லோ சுகர் தடுக்கும் வழிகள்!
பொதுவாக சர்க்கரை அளவு அதிகரிப்பை விட, சர்க்கரை அளவு திடீரென்று குறைவது தான் ஆபத்தானது.
1 min
July 16-31, 2025

Kungumam Doctor
இதய அறுவைசிகிச்சை... கட்டுக்கதைகள் VS உண்மைகள்!
இதய அறுவைசிகிச்சையில் இதய நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான பல்வேறு மருத்துவ நடைமுறைகள் அடங்கியுள்ளன.
3 mins
July 16-31, 2025

Kungumam Doctor
ஆட்டுப்பால் சீஸின் நன்மைகள்!
ஆட்டுப்பால் சீஸ் என்பது ஆட்டின் பாலில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு தயாரிப்பு ஆகும்.
1 mins
July 16-31, 2025

Kungumam Doctor
சருமத்தை மென்மையாக்கும் ரோஸ் ஆயில்!
சருமப் பாதுகாப்புக்குப் பயன்படுத்தும் அத்தியாவசிய எண்ணெய்களில் ஒன்று தான் ரோஸ் எண்ணெய்.
2 mins
July 16-31, 2025

Kungumam Doctor
தர்பூசணி விதையின் பயன்கள்!
தர்பூசணி விதைகள் பல நன்மைகள் கொண்டவை. அவை, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் புரதங்கள் நிறைந்தவை.
1 min
July 16-31, 2025

Kungumam Doctor
ரத்தத்தைய சுத்தம் செய்யும் சுக்கான் கீரை!
நமது முன்னோர்கள் பெரும்பாலான நோய்களுக்கு மருந்தாக கீரைகளையே உணவாக பயன்படுத்தியிருக் கிறார்கள் என்பது நம் பாரம்பர்யத்தின் தனிசிறப்பு.
1 mins
July 16-31, 2025

Kungumam Doctor
எந்த திசையில் தலைவைத்து தூங்குவது நல்லது
பொதுவாக தூங்குவதற்கு ஏற்ற காலம் இரவு மட்டும் தான் என்பது இயற்கையின் விதிகளில் ஒன்று.
1 min
July 16-31, 2025
Kungumam Doctor
ருபெல்லா வைரஸ் ஒரு முழுமையான பார்வை
ரூபெல்லா (Rubella) என்பது ஒரு வைரஸ் காரணமாக ஏற்படும் தொற்று நோயாகும்.
2 mins
July 16-31, 2025

Kungumam Doctor
கவுன்சலிங் ரூம் மருத்துவப் பேராசிரியர் முத்தையா
எனக்கு கடந்த ஆறு மாதங்களாக வாய்ப்புண் தொல்லை உள்ளது.
3 mins
July 16-31, 2025