விகடன் குழுமமும், அர்ஜுன் ரெட்டியின் 'வாய்ஸ் ஆஃப் காமன்ஸ்' அமைப்பும் இணைந்து வெளியிட்ட இந்த நூல் வெளியீட்டில் அம்பேத்கர் நூலை விஜய் வெளியிட, அதனை திருமா வளவன் பெற்றுக்கொள்வதாக முடிவு செய்யப்பட்டிருந்தது. தி.மு.க.வை தனது அரசியல் எதிரியாக பிரகடனப்படுத்தி யிருக்கும் விஜய்யுடன், திருமாவளவன் மேடையேறுவதை தி.மு.க. தலைமையும், உடன்பிறப்புகளும் ரசிக்கவில்லை.
இதனை திருமாவிடம் அழுத்த மாகச் சொல்லியிருந்தார் தி.மு.க.) சீனியர் அமைச்சர் ஒருவர்.. இதனைத் தொடர்ந்து விழாவில் கலந்து கொள்வதை திருமா புறக்கணித்தார். ஆனால், அவரது கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் அர்ஜுன் ரெட்டி கலந்துகொள்ள அனுமதியும் கொடுத்தார் திருமா.
இதுகுறித்து திருமாவுக்கும் அர்ஜுன் ரெட்டிக்குமிடையே நடந்த விவாதங்களின்போது, 'நீங்கள் இல்லாத மேடையில் நானும் இருக்க விரும்ப வில்லை. நிகழ்ச்சியை ரத்து செய்துவிட லாம் அல்லது நானும் கலந்து கொள்ள வில்லை' என்று அர்ஜுன் ரெட்டி சொல்ல, "அம்பேத்கர் பற்றிய நூலை தயாரித்து அதனை வெளியிடுவதே உங்கள் அமைப்புதான். நீங்கள் இல்லா மல் நிகழ்ச்சியை நடத்துவது ஆரோக்கிய மாக இருக்காது. எனக்காக நிகழ்ச்சியை ரத்து செய்யாதீர்கள். விழாவில் கலந்து கொள்ளுங்கள்” என்று சொல்லி அனுமதி கொடுத்திருக்கிறார் திருமா.
இப்படிப்பட்ட பின்னணிகளுடன் நடந்த நூல் வெளியீட்டு விழாவில் பேசிய அர்ஜுன் ரெட்டி, “மன்னராட்சியை ஒழிப்போம்; பிறப்பால் இனி முதலமைச்சர் உருவாக்கப்படக்கூடாது. கருத்தியல் தலைவராக விஜய் உருவாகியிருக்கிறார். 2026-ல் புதிய முதலமைச்சரை மக்கள் உருவாக்குவார்கள்" என்று முதல்வர் ஸ்டாலினையும், துணை முதல்வர் உதயநிதியையும் பெயர் குறிப்பிடாமல் தாக்கினார்.
'தி.மு.க.வுக்கு எதிராக அர்ஜுன் ரெட்டியின் பேச்சே இப்படி கடுமையாக இருக்கும்போது, விஜய்யின் பேச்சு இன்னும் சூடாக இருக்குமோ' என தொலைக்காட்சி லைவ்வில் விழாவை கவனித்துக் கொண்டிருந்த அரசியல் கட்சியினரும் உளவுத் துறையினரும் எதிர்பார்த்தனர்.
அதேபோல, மைக் பிடித்த விஜய், தி.மு.க.வுக்கு எதிராக கர்ஜித்ததுடன், “இருநூறு இடங்களை வெல்வோம் என இறுமாப்புடன் எகத்தாளமிடுகின்ற னர். சுயநலத்துக்காக தி.மு.க. அமைத்துள்ள கூட்டணிக் கணக்குகளை 2026 தேர்தலில் மக்களே மைனஸ் ஆக்குவார்கள்" என்று கடுமையாகத் தாக்கினார்.
この記事は Nakkheeran の December 11-13, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Nakkheeran の December 11-13, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
எடப்பாடியின் வெளிநாட்டு முதலீடுகள்!
\"எடப்பாடிக்கு புதிதாக சிக்கல்கள் வரும்போல் தெரிகிறதே?\"
கட்டுக்கட்டாகப் பணம்! காங்கிரஸ் சீனியருக்குப் பொறிவைக்கும் பா.ஜ.க.!
ஹலோ தலைவரே, தமிழக அமைச்சர் ஒருவரைப் பற்றி வந்திருக்கும் தகவல் ஆட்சி மேலி டத்தை அதிரவைத்திருக்கிறது.\"
மாணவியிடம் அத்துமீறிய சப்-இன்ஸ்பெக்டர்! -அருப்புக்கோட்டை அவலம்!
அருப்புக்கோட்டை அருகிலுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த ப்ளஸ் 2 மாணவி காணாமல் போனார்.
சேலம் உருக்காலை தேர்தல்! தி.மு.க.வோடு மல்லுக்கட்டிய கம்யூனிஸ்ட்!
சேலம் உருக்காலையில் நடந்த தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தலில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் சி.ஐ.டி.யூ. தொழிற்சங் கம், அ.தி.மு.க., பா.ம.க. ஆதரவுடன் களமிறங்கி யதை வைத்து, வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.கூட்டணிக்கு மார்க் சிஸ்ட் கம்யூ. கட்சி தாவப் போவதாக பரபரப்பு கிளம்பி யுள்ளது. சேலத்தின் அடையாள மான சேலம் உருக்காலையில் 591 நிரந்தரத் தொழிலாளர்களும், 1,000 ஒப்பந்தத் தொழிலாளர்களும் பணியாற்றுகின்றனர்.
கார்ப்பரேட்டுகள் வசமாகும் ஏரி, குளங்கள்! -போராட்டத்தில் விவசாயிகள்!
சிறப்புத் திட்டங்கள் அறிவிக்கப் பட்டு, அந்தத் திட் டங்களை நிறைவேற்றுவதற்காக விவசாயிகளிடமிருந்து நிலம் எடுப்பதை எளிதாக்கும் வகையில் 'தமிழ்நாடு அரசு சிறப்புத் திட்டங்களுக்கான நில ஒருங்கிணைப்புச் சட்டம்' என்ற சட்டம் கடந்த 2023, ஏப்ரல் 21ஆம் தேதி சட்டசபையில் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப் பட்டது. கடந்த ஆகஸ்டில் தமிழக கவர்னரும் ஒப்புதலளித்தார். விவசாயிகள் நலனுக்கு எதிரான இந்த சட்டத்தை கம்யூனிஸ்ட், பா.ம.க. உறுப்பினர்கள் எதிர்த்த நிலையில், திடீரென கடந்த மாதம் 18ஆம் தேதி முதல் இந்த சட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
வக்பு வாரிய ஊழல்! போராட்டத்தில் இஸ்லாமியர்கள்!
ஒன்றிய அரசு பாராளுமன்றத் தில் தாக்கல் செய்த வக்பு வாரியத் திருத்தச் சட்டத்தை எதிர்க்கட்சியினர் கடுமையாக எதிர்க்கும் நிலையில், தமிழகத்தில் வக்பு வாரியத்தில் ஊழல் அதிகமாக நடப்பதாக பகீர் புகார்கள் கிளம்பியிருக்கிறது.
என்.ஆர்.ஐ.சான்றிதழ் மோசடி! சிக்கும் மருத்துவ மாணவர்கள்!
இந்தியாவில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான என்.ஆர்.ஐ. கோட்டாவில் மோசடி நடப்பது புதுச்சேரி மாநிலத்தில் கண்டறியப்பட்டு 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் மீது புகார் தரப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களிலும் இதுபோல் மோசடி நடந்திருக்குமென்பதால், இதனை சி.பி.ஐ. தீவிரமாக விசாரிக்க வேண்டுமென்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.
வி.சி.க.வை உடைக்கும் விஜய்-ஆதவ் கூட்டணி! அதிரடி காட்டிய திருமா!
எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' நூல் வெளியீட்டு விழாவில் த.வெ.க. தலைவர் விஜய்யும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அர்ஜுன் ரெட்டியும் போட்டி போட்டுக்கொண்டு தி.மு.க.வை தாக்கிய சம்பவம் தமிழக அரசியலில் அதிர்வுகளை ஏற்படுத்தியது. அந்த அதிர்வுகள் இன்னும் அடங்கவில்லை.
போதைப் பொருள் கடத்தல் நெட்வொர்க்கில் காக்கிகள்! அதிரவைக்கும் உண்மை!
தமிழகத்தில் புழக்கத்திலி ருக்கும் கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகளைக் கட்டுப்படுத்துவது தமிழக அரசிற்கு பெரும் சவாலான முயற்சியாக உள்ளது.
எடப்பாடியை நெரிக்கும் கொடநாடு!
'கொடநாடு வழக்கில் எனக்கும் அந்தக் கொலை கொள்ளைக்கும் சம்மந்தமில்லை.