CATEGORIES
திருச்சியில் 10 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு ரூ. 600 கோடி செலவில் புதிய 'டைடல் பார்க்’
அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு!
முதலமைச்சர் தொடங்கி வைத்த அரும் பணிகள் தமிழ்நாட்டில் 8 இடங்களில் அகழாய்வு
சென்னை ஏப்.7 தமிழ்நாட்டில் கீழடி உள்ளிட்ட 8 இடங்களில் தொல்லியல் அகழாய்வுப் பணிகளைத் தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கீழடி புனை மெய்யாக்க செயலியை அறிமுகம் செய்துவைத்தார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு 15 லட்சம் ஆண்டுகள் மனிதகுல வரலாற்றுத் தொன்மை கொண்ட நிலப்பரப்பாகும்
தமிழர் தலைவர் தலைமையில் நடைபெற்ற இறையன்-திருமகள் இல்ல சுயமரியாதைத் திருமண விழா
சென்னை, ஏப். 7- மறைந்த சுயமரியாதைச் சுடரொளிகள் பெரியார் பேருரையாளர் இறையன், சுயமரியாதைத் திருமண நிலைய மேனாள் இயக்குநர் திருமகள் ஆகியோரின் பெயரனும், இசையின்பன்--பசும்பொன் ஆகியோரின் மகனுமான இ.ப. இன நலம் - ஜோ. ஆட்லின் ஆகியோரின் இணை ஏற்பு விழா 25.3.2023 சனிக்கிழமை சென்னை பெரியார் திடலில் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் ஒருங்கிணைப்பில் மிகச் சிறப்பாக நடைபெற்றது
இந்தியாவின் முதல் 10 பெரும் பணக்காரர்களிடம் குவிந்துள்ள சொத்து ஃபோர்ப்ஸ் ஏட்டின் படப்பிடிப்பு
புதுடில்லி,ஏப்.7- உலகம் முழுவதுமுள்ள வெறும் 2 ஆயிரத்து 640 பெரும் பணக்காரர்களின் கைகளில் 12.2 டிரில்லியன் டாலர் அளவிற்கான சொத்துக்கள் குவிந்திருப்பதாக போர்ப்ஸ் ஏடு அறிக்கை வெளியிட்டுள்ளது.
நிர்வாக ரீதியிலான முடிவுகளை ஆளுநர் வெளியில் பேசுவதா?
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
ஒவ்வொரு நாளும் சர்ச்சைக்குள்ளாகும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைகள்! தமிழ்நாடு அரசின் பொறுமையை, பெருந்தன்மையை பலவீனமாகக் கருதி பல்லாங்குழி ஆடுகிறார்!
ஆளுநரின் அடாவடி நடவடிக்கைகளைக் கண்டித்து மக்கள் திரளுவதுதான் ஒரே வழி!
பொதுத்துறை வங்கிகளில் 10 ஆண்டுகளாக உரிமை கோரப்படாத மக்களின் ரூ.35,012 கோடி!
புதுடில்லி, ஏப். 6- பொதுத்துறை வங்கிக் கணக்குகளில் வாடிக்கையாளர்களால் உரிமை கோரப்படாமல் இருக்கும் நிதி பற்றி மக்களவையில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு ஒன்றிய நிதித்துறை இணையமைச்சர் பகவத் கரத் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் கூறியதாவது
பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகம் ஊரக வளர்ச்சி முகமை சார்பாக மன அழுத்த மேலாண்மை கருத்தரங்கம்
வல்லம், ஏப். 6- சமூகப்பணித் துறை, பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகம் மற்றும் ஊரக வளர்ச்சி முகமை தஞ்சாவூர் மாவட்டம் சார்பாக ஊரக வளர்ச்சி முகமையில் உள்ள அலுவலர்களுக்கு மன அழுத்த மேலாண்மை பற்றிய கருத்தரங்கம் நடத்தப்பட்டது
அமெரிக்க மேனாள் அதிபர் டொனால்டு டிரம்ப் கைது - பிணையில் விடுவிப்பு
வாசிங்டன், ஏப். 6- ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க மேனாள் அதிபர் டொனால்டு டிரம்ப் நியூயார்க் நீதிமன்றத்தில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்
"திராவிட மாடலே நாட்டைக் காக்கும் கேடயம்" - காரைக்குடியில் 'திக்கெட்டும் வழிகாட்டும் திராவிட மாடல்' கருத்தரங்கில் உரை வீச்சு!
காரைக்குடி, ஏப். 6- காரைக்குடி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் ஆசிரியர் 90, தளபதி 70 ஆவது பிறந்த நாள் விழா கருத்தரங்கம் மாவட்டத் தலைவர் ச.அரங்கசாமி தலைமையில், சிவகங்கை மண்டல தலைவர் கா.மா.சிகாமணி, மண்டல செயலாளர் அ.மகேந்திரராசன், மாவட்ட துணைத் தலைவர், கொ.மணிவண்ணன், மாவட்ட துணைச் செயலாளர் இ.ப.பழனிவேல், பொதுக்குழு உறுப்பினர் சாமி.திராவிடமணி, நகர தலைவர் ந.ஜெகதீசன், நகர செயலாளர் தி.கலைமணி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது
வாலாஜாபாத்தில் அன்னை மணியம்மையார் பிறந்தநாள், மகளிர் நாள் கருத்தரங்கம்
வாலாஜாபாத், ஏப்.6-காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் பேரூராட்சியில் உள்ள ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கக் கட்டடத்தில், 26.3.2023 அன்று காலை 10.30 மணியளவில், அன்னை மணியம்மையார் பிறந்த நாள் மற்றும் உலக மகளிர் நாள் கருத்தரங்கம் நடைபெற்றது
'நீட்' எனும் கொலை வாளுக்கு மற்றொரு பெண் பலி
கடலூர், ஏப்.6 ரயில் முன் பாய்ந்து ‘நீட்’ பயிற்சி மாணவி தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதலமைச்சரின் திறனறி தேர்வு திட்டம் : கற்க சிறந்த இடம் அரசுப் பள்ளியே!
சென்னை அய்.அய்.டி. விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
உலக மகளிர் தின விழா கருத்தரங்கம் - படத்திறப்பு
ஊற்றங்கரை, ஏப்.6-ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் சார்பில் கடந்த 26.3.2023 அன்று காலை 10 மணியளவில் ஊற்றங்கரை வித்யா மந்திர் விருந்தினர் மாளிகையில் உலக மகளிர் தின விழா கருத்தரங்கம்-படத்திறப்பு-பாராட்டு என மூன்று நிகழ்வுகளை உள்ளடக்கி வெகுசிறப்புடன் கொண்டாடப்பட்டது
ஒசூரில் பெரியார் சதுக்கம் பெயர் சூட்டலுக்கு தமிழ்நாடு அரசுக்கு வரவேற்பும் - பாராட்டும் பா.ஜ.க. சங் பரிவாரங்களுக்கு கண்டனம்
ஒசூர்,ஏப்.6- ஒசூர் உள்வட்ட சாலையுடன் முனிஸ்வர்நகர், வஉசி நகர் இணையும் சந்திப்புக்கு பெரியார் சதுக்கம் என பெயரிட்ட தமிழ்நாடு அரசுக்கு நன்றி, பாராட்டுகள் தெரிவித்தும், பெரியார் பெயரை வைக்க கூடாது என மதவெறியைத் தூண்டி, அரசியல் ஆதாயத்திற்க்காக தவறான சட்டத்திற்கு புறம்பாக ஆர்பாட்டம் நடத்திய பி.ஜே.பி. -சங்பரிவார் அமைப்புகளை கண்டித்தும் ஜனநாயக அமைப்புகளை ஒருங்கிணைத்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஒசூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் எம்.ராமசந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் (28.3.2023) நடை பெற்றது.
மேற்கு வங்க வன்முறையின் பின்னணியில் பா.ஜ.க.மம்தா குற்றச்சாட்டு
கொல்கத்தா, ஏப்.6 மேற்கு வங்கத்தில் ராம நவமி ஊர்வலங்களின் போது ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களின் பின்னணியில் பாஜக இருப்பதாக மாநில முதலமைச்சர் மம்தா குற்றஞ்சாட்டியுள்ளார்
சமூகநீதியில் முதன்மையானது தந்தை பெரியாரின் சமூகநீதி மண்! அரசியல் ஒருமைப்பாட்டைவிட - சமூகநீதி ஒருமைப்பாடுதான் முதன்மையானது! 'திராவிட மாடல்' ஆட்சி நடத்திவரும் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் சமூகநீதிப் போரில் வெல்லுவோம்!
உரிய நேரத்தில் இம்மாநாட்டை ஒருங்கிணைத்தவர்களுக்கும் - பங்கேற்றவர்களுக்கும் பாராட்டும், நன்றியும்! அகில இந்திய சமூகநீதி மாநாடு: காணொலியில் தமிழர் தலைவர் ஆசிரியர் எழுச்சியுரை
கருவாக்குறிச்சி தங்க,பிச்சைக்கண்ணு இல்ல மணவிழா
நீடாமங்கலம், ஏப். 5- மன்னார்குடி கழக மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றிய செயலாளர் கருவாக் குறிச்சி தங்க பிச்சைக்கண்ணு - பிச்சையம்மாள் ஆகியோரின் மகள் அன்பரசிக்கும், நீடாமங்கலம் வட்டம் எடமேலையூர் பாலன் - சீத்தாலெட்சுமி ஆகியோரின் மகன் கார்த்திக்கும் 24-.3.2023 அன்று காலை 10 மணியளவில் காவராப்பட்டு கி.வி.ஸி.ரி திருமண மண்டபத்தில் மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் தலைமையில் மாவட்ட செயலாளர் கோ.கணேசன், மாவட்ட துணைத்தலைவர் ந.இன்பக்கடல், மாவட்ட அமைப்பளர் ஆர்.எஸ்.அன்பழகன், மாவட்ட துணைச் செயலாளர் வீ.புஸ்பநாதன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
ஜாதியை ஏற்காதவர்களை நாம் ஒன்றுபடுத்துவோம்! எல்லோரும் இளைஞர்களாக மாறுவோம்; ஜாதியற்ற ஒரு சமுதாயத்தை உருவாக்குவோம்!
கடலூர்: சமூகநீதி பாதுகாப்பு - திராவிட மாடல் ஆட்சி சாதனை விளக்கப் பரப்புரையின் நிறைவு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் அழைப்பு!
வைக்கம் சத்தியாகிரகம் ஒப்பிட முடியாத சமூக சீர்திருத்த முன்னேற்றம்!
வைக்கம் நூற்றாண்டு விழாவில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்
சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரை பறக்கும் சாலைப் பணி டெண்டர் இறுதி செய்யப்படுகிறது
சென்னை, ஏப். 5- துறைமுகம் -மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டத்திற்கு ஏற்கெனவே அமைக்கப்பட்ட பழைய தூண்களை அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கலாசேத்ரா மாணவிகளுக்கு பாலியல் தொல்லை மூன்று பேராசிரியர்களுக்கு தடை
சென்னை, ஏப். 5- கலாசேத்ரா கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் புகாருக்கு உள்ளான 3 பேராசிரியர்களை கல்லூரிக்குள் நுழைய அனுமதிக்கக்கூடாது என கல்லூரி இயக்குநருக்கு மாநில மகளிர் ஆணைய தலைவி உத்தரவிட்டு உள்ளார்.
ராணிப்பேட்டைக்கு வருகிறது ரூ.1,000 கோடியில் காலணி தொழிற்சாலை
சென்னை, ஏப். 5- ராணிப்பேட்டையில் ரூ.1,000 கோடியில் 20 ஆயிரம் பேருக்கு வேலை வழங்கும் வகையில், காலணி தொழிற்சாலையை தைவான் நிறுவனம் அமைக்க உள்ளது. இதற்கான நில ஒதுக்கீட்டு ஆணை அமைச்சர் தங்கம் தென்னரசு முன்னிலையில் வழங்கப்பட்டது.
வேளச்சேரி முதல் பரங்கிமலை வரை பறக்கும் ரயில்: ஜூலைக்குள் பணிகள் முடியும்
சென்னை, ஏப். 5- சென்னை வேளச்சேரி - பரங்கிமலை இடையேயான பறக்கும் ரயில் திட்டத்தை ஜூலை மாதத்துக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டில் வைக்கம் சத்தியாக்கிரக நூற்றாண்டு விழா
செங்கல்பட்டு, ஏப். 5- 1.4.23 சனிக்கிழமை காலை 10 மணிக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் செங்கல்பட்டு மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் வைக்கம் சத்தியாக்கிரக நூற்றாண்டு தொடக்க விழா முன்னிட்டு வைக்கம் வீரர் தந்தை பெரியார் சிலைக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி செங்கல்பட்டு மாவட்ட தலைவர் சங்கர் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
நிலக்கரி சுரங்க ஏல ஒப்பந்தம் டெல்டா பகுதிகளுக்கு விலக்கு அளித்திடுக!
பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
ஏப்ரல் 8 ஆம் தேதி மாலை 4 மணிக்கு தஞ்சையில் எனது (கி,வீரமணி) தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்!
நெய்வேலியில் நிலக்கரி சுரங்கம் அமைத்து அப்பகுதி மக்களை ஏமாற்றியது போதாதா, இப்பொழுது டெல்டா மாவட்டங்களிலும் நிலக்கரி எடுக்க ஒன்றிய அரசு முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது!, தமிழ்நாடு அரசை அலட்சியப்படுத்தி ஆணையா? கட்சிகளைக் கடந்து பங்கேற்பீர் தோழர்களே!
பொத்தனூரில் சமூகநீதிக்கான விழிப்புணர்வு பிரச்சாரம்
பொத்தனூர் பெரியார் படிப்பகத்தின் சார்பாக சமூகநீதிக்கான விழிப்புணர்வு பிரச்சாரம் 31.3.2023இல் பொத்தனூர் அண்ணா சிலை அருகில் நடந்த நிகழ்ச்சிக்கு பொத்தனூர் கழக தலைவர் அன்புமணி தலைமை வகித்தார்.
ரூபாய் 4,400 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்: சென்னையில் ஒப்பந்தம்
சென்னை, ஏப்.4- சென்னையில் ரூ.4,400 கோடி மதிப்பில் கடல் நீரை குடிநீராக்கும் ஆலை அமைப்பதற்கான உரிமையை வாபாக் நிறுவனம் பெற்றுள்ளது.
பள்ளி செல்லாத குழந்தைகளை கணக்கெடுக்க உத்தரவு
சென்னை, ஏப். 4- பள்ளி செல்லாத குழந்தைகளை ஆசிரியர்கள் கணக்கெடுக்க வேண்டும் என்று தொடக்கக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.