நமது நாட்டில் இருக்கும் மோனசைட் உள்ளடக்கிய கனிம படிவத்தை அகழ்வு செய்வதற்கும், அதனை கையாள்வதற்கும் ஒன்றிய பொதுத்துறை நிறுவனமான ஐஆர்இஎல்க்கு மட்டுமே அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் ஐஆர்இஎல் ஆலை செயல்பட்டு வருகிறது. நாட்டில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு மற்றும் கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிப்புகள் நடைமுறைக்கு வருவதற்கு முன்பே 1970 முதல் இந்த ஆலை இயங்கி வருகிறது. மோனசைட், சிர்கான் மற்றும் அதனுடன் காணப்படும் கனிமங்களை பிரித்தெடுத்து இந்திய அணுசக்தி துறை மற்றும் நாட்டின் பாதுகாப்பு சார்ந்த நிறுவனங்களுக்கு வழங்கி வருகிறது.
இந்த ஆலை ஆண்டுக்கு 1 லட்சத்து 14 ஆயிரத்து 600 டன் அணு கனிமங்களை உற்பத்தி செய்ய அனுமதியை பெற்று செயல்பட்டு வருகிறது. நாட்டின் அணுசக்தி திட்டத்திற்கு தேவைப்படும் மிக முக்கிய கனிமங்களை எடுப்பதற்கு அணுசக்தி துறை கடந்த 2015ம் ஆண்டு தமிழ்நாடு அரசுக்கு கடிதம் எழுதியது. அதன் மூலம் குமரி மாவட்டத்தில் மோனசைட் கனிமம் மிகுந்த பகுதியான 1,144.0618 ஹெக்டர் பரப்பிலான பகுதிகளை ஐஆர்இஎல் நிறுவனத்திற்கு ஒதுக்கீடு செய்ய தமிழ்நாடு அரசின் இசைவை கோரியது.
தமிழ்நாடு அரசும் 2021ல் தனது இசைவை அளித்துள்ளது. அதனை தொடர்ந்து ஒன்றிய சுரங்க அமைச்சகம் 2021ல் அறிவிப்பாணை வெளியிட்டது. இதனை தொடர்ந்து தமிழ்நாடு அரசு ஒன்றிய சுரங்க துறையின் முன் அனுமதி பெற்று சுரங்க குத்தகை வழங்குவதற்கான கடிதத்தை ஐஆர்இஎல்-க்கு அளித்துள்ளது. இங்கு அணு கனிம படிவுகளான மோனசைட், சிர்கான், இல்மனைட், ரூட்டைல், சிலிமனைட் மற்றும் கார்னட் ஆகியவற்றை பிரித்து எடுக்க 1144.0618 ஹெக்டர் பரப்பு நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
கிள்ளியூர் தாலுகாவில் கீழ்மிடாலம் ஏ, மிடாலம் பி, இனயம்புத்தன்துறை, ஏழுதேசம் ஏ, பி, சி மற்றும் கொல்லங்கோடு ஏ மற்றும் பி கிராம பகுதிகளில் இந்த மண் எடுக்கும் பணிகள் நடைபெற உள்ளது. இதன் மூலம் மேற்கொள்ளப்படும் அணு கனிம படிவுகள் உற்பத்தி அளவு 1.5 மில்லியன் டன்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இது தொடர்பான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வறிக்கையின் சுருக்கம் வெளியிடப்பட்டுள்ளது.
この記事は Dinakaran Chennai の September 23, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Dinakaran Chennai の September 23, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
மணலி மண்டலக்குழு கூட்டத்தில் ₹15 கோடி மதிப்பிலான பணிகளுக்கு தீர்மானம்
மணலி மண்டலக்குழு கூட்டத்தில் 15 கோடி மதிப்பிலான பணிகளுக்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
70 ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் தயாரிக்க 2வது ஒப்பந்தம் - அதிகாரிகள் தகவல்
ஓட்டுநர் இல்லாத 70 மெட்ரோ ரயில் தயாரிப்பதற்காக இரண்டாவது ஒப்பந்தம் பிஇஎம்எல் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என மெட்ரோ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
காக்களூர் மற்றும் புட்லூரில் திமுக பாக முகவர்கள் ஆய்வு கூட்டம்
காக்களூர் மற்றும் புட்லூரில் திமுக பாக முகவர்கள் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
புழல் காவாங்கரை, தண்டல் கழனி பகுதியில் மரண பள்ளங்களாக மாறிய சர்வீஸ் சாலை
சீரமைக்க கோரிக்கை
100 நாள் வேலை வழங்காததை கண்டித்து ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
புலிப் பாக்கம் ஊராட்சியில் நூறு நாள் வேலை முறையாக வழங்காததை கண்டித்து ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் மாமல்லபுரம் வருகை
புராதன சின்னங்களை கண்டு ரசித்தனர்
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று முதல் டிஜிட்டல் முறையில் மது விற்பனை
டாஸ்மாக் அதிகாரிகள் தகவல்
மருத்துவரை தாக்கியதை கண்டித்து காஞ்சியில் மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு ஆர்ப்பாட்டம்
சென்னை அரசு மருத்துவமனை வளாகத்தில், புற்றுநோய் மருத்துவரை தாக்கியதை கண்டித்து, காஞ்சிபுரத்தில் மருத்துவர்கள் அடையாள பணி புறக்கணிப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தாம்பரம் மார்க்கெட் பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் - மாநகராட்சி நடவடிக்கை
தாம்பரம் மார்க்கெட் பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு நிதியில் ₹7,500 கோடி மதிப்பீட்டில் புதிதாக 18.000 வகுப்பறை - அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு நிதியின் கீழ் 5 ஆண்டுகளில் 7,500 கோடி மதிப்பீட்டில் 18,000 வகுப்பறைகள் கட்ட திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.