துணை முதல்வராகிறார் உதயநிதி
Dinakaran Chennai|September 29, 2024
தமிழக அமைச்சரவை அதிரடி மாற்றம்
துணை முதல்வராகிறார் உதயநிதி

செந்தில் பாலாஜி, ஆவடி நாசருக்கு மீண்டும் பதவி
மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், கே.ராமச்சந்திரன் நீக்கம்
கோவி.செழியன், ஆர்.ராஜேந்திரன் புதிய அமைச்சர்கள்
6 அமைச்சர்கள் இலாகா மாற்றம் இன்று மாலை பதவியேற்பு விழா

தமிழக அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகிறார். செந்தில்பாலாஜி, ஆவடி நாசர், கோவி.செழியன், ராஜேந்திரன் ஆகியோர் புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், கே.ராமச்சந்திரன் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். 6 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் அமைச்சரவை மாற்றி அமைக்கப்படும். உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராவார், சிலர் நீக்கப்பட்டு, புதியவர்கள் சேர்க்கப்படுவார்கள் என்று பல மாதங்களாக பேசப்பட்டு வந்தன. இது குறித்து பேட்டியளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மாற்றம் இருக்கும், ஏமாற்றம் இருக்காது என்று அறிவித்தார். அதற்கு ஏற்றார்போல, முதல்வர் அலுவலகத்தில் இருந்து அமைச்சரவை மாற்றம் தொடர்பான கடிதம் கவர்னர் ஆர்.என்.ரவியின் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்தநிலையில் தென் மாவட்ட சுற்றுப் பயணத்தில் இருந்த கவர்னர், நேற்று இரவு சென்னை திரும்பியதும், கடிதம் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கவர்னர் மாளிகை நேற்று இரவு ஒரு அறிவிப்பை வெளியிட்டது.

அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வரின் பரிந்துரையின் பேரில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின், துணை முதல்வராகிறார். மேலும், செந்தில்பாலாஜி, கோவி.செழியன், ஆர்.ராஜேந்திரன், எஸ்.எம்.நாசர் ஆகியோர் புதிய அமைச்சர்களாக நியமிக்கப்படுகின்றனர். இவர்களுக்கான பதவி ஏற்பு விழா இன்று மாலை 3.30 மணிக்கு கவர்னர் மாளிகையில் நடைபெறுகிறது. மேலும், அமைச்சர்களாக உள்ள மனோ தங்கராஜ் (பால் வளம்), செஞ்சி மஸ்தான் (சிறுபான்மையினர் நலம், வெளிநாட்டு வாழ் தமிழர் நலம்), ராமச்சந்திரன் (சுற்றுலாத்துறை) ஆகியோர் பதவியில் இருந்து நீக்கப்படுகின்றனர். அதோடு, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் இலாகா மாற்றப்பட்டு, அவர் வனத்துறை அமைச்சராக நியமிக்கப்படுகிறார்.

この記事は Dinakaran Chennai の September 29, 2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

この記事は Dinakaran Chennai の September 29, 2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

DINAKARAN CHENNAIのその他の記事すべて表示
மழைநீர் கால்வாய் பணியால் கடும் நெரிசல்
Dinakaran Chennai

மழைநீர் கால்வாய் பணியால் கடும் நெரிசல்

கும்மிடிப்பூண்டி, அக். 2: கும்மிடிப்பூண்டி பேரூராட்சி பஜார் பகுதிக்கு ஆத்துப் பாக்கம், மாதர்பாக்கம், வலுதலம்பேடு, புதூர், ரெட்டம்பேடு, ஆரம்பாக்கம், மங்காவரம், பொன்னேரி, தேவம்பேடு, பட்டுப்புள்ளி, அப்பாவரம், மேலகழனி, நத்தம், தேர்வழி, அயநெல்லூர், பெத்தி குப்பம், சுண்ணாம்புகுளம், மெதிபாளையம், ஓபசமுத்திரம் உள்ளிட்ட 150 கிராமங்களைச் சேர்ந்த கிராமப்புற மக்கள் தங்கள் தேவைக்கு கார், லாரி, இருசக்கர வாகனங்கள் மூலம் தினந்தோறும் வந்து செல்கின்றனர்.

time-read
1 min  |
October 02, 2024
சேதமடைந்து காணப்படும் விஏஓ அலுவலக கட்டிடம்
Dinakaran Chennai

சேதமடைந்து காணப்படும் விஏஓ அலுவலக கட்டிடம்

கிருஷ்ணாகுப்பம் கிராமத்தில் சேதமடைந்து முட்புதர்கள் சூழ்ந்து காணப்படும் விஏஓ அலுவலக கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு, புதிதாக கட்டித்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

time-read
1 min  |
October 02, 2024
சாலையில் பள்ளம் தோண்டியதால் 16 மணிநேரம் போக்குவரத்து நிறுத்தம்
Dinakaran Chennai

சாலையில் பள்ளம் தோண்டியதால் 16 மணிநேரம் போக்குவரத்து நிறுத்தம்

மணலியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகளுக்காக மணலி பகுதி முழுவதும் சிறிய, பெரிய குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றன.

time-read
1 min  |
October 02, 2024
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ்கள்
Dinakaran Chennai

வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ்கள்

மாவட்ட அளவிலான 'தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை' விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு பரிசு வழங்கும் விழா திருவள்ளூரில் நடந்தது. இந்த விழாவிற்கு கலெக்டர் த.பிரபு தலைமை தாங்கினார்.

time-read
1 min  |
October 02, 2024
புதிய டிரான்ஸ்பார்மர்கள்
Dinakaran Chennai

புதிய டிரான்ஸ்பார்மர்கள்

செங்குன்றம் அடுத்த பாடிய நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட மொண்டியம்மன் நகர், நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட காந்தி நகர், ஆட்டம் தாங்கள் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை செய்யப்படுகிறது. இதனால், அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

time-read
1 min  |
October 02, 2024
முன்னெச்சரிக்கை நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும்
Dinakaran Chennai

முன்னெச்சரிக்கை நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும்

வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும் என்று பொன்னேரி நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

time-read
1 min  |
October 02, 2024
Dinakaran Chennai

பெண்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி

பழவேற் காடு மீனவப் பகுதியில் வசிக்கும் பெண்களுக்கு சுய தொழில் மூலம் வாழ்க் கையில் முன்னேறுவதற்கு சுய தொழில் பயிற்சிகள் இந்தியன் வங்கி சார்பில் அளிக்கப்பட்டு வருகிறது.

time-read
1 min  |
October 02, 2024
ஆந்திராவிலிருந்து குட்கா கடத்திய வாலிபர் கைது
Dinakaran Chennai

ஆந்திராவிலிருந்து குட்கா கடத்திய வாலிபர் கைது

திரு வள்ளூர் மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனைக்கு தடுக்கும் வகையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

time-read
1 min  |
October 02, 2024
மெட்ரோ ரயில்களில் 92.77 லட்சம் பேர் பயணம்
Dinakaran Chennai

மெட்ரோ ரயில்களில் 92.77 லட்சம் பேர் பயணம்

செப்டம்பர் மாதத்தில் 92,77,697 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
October 02, 2024
ஆவடி ரயில் நிலையத்தில் சுரங்கப்பாதை அமைக்காததால் பயணிகள் கடும் அவதி
Dinakaran Chennai

ஆவடி ரயில் நிலையத்தில் சுரங்கப்பாதை அமைக்காததால் பயணிகள் கடும் அவதி

ஆவடி ரயில் நிலையத்தில் சுரங்கப் பாதை அமைக்கும் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் ஆபத்தான முறையில் தண்டவாளத்தைக் கடந்து செல்கின்றனர்.

time-read
1 min  |
October 02, 2024