பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சென்னை பெருநகர காவல்துறை 90 நாட்களில் விரைந்து செயல்பட்டு கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் உள்பட 30 பேர் மீது நேற்று எழும்பூர் நீதிமன்றத்தில் 5 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கில் முதன்மை குற்றவாளிகள் நாகேந்திரன், சம்பவ செந்தில், அஸ்வத்தாமன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் (51), கடத்த ஜூலை 5ம் தேதி வீட்டின் அருகே கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் சகோதரர் பொன்னை பாலு உள்பட 11 பேர் அடுத்தடுத்து அண்ணாநகர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். மேலும், வழக்கில் தொடர்ந்தவர்களை கைது செய்ய புதிய போலீஸ் கமிஷனர் அருண் மேற்பார்வையில் சென்னை வடக்கு மண்டல கூடுதல் கமிஷனர் நரேந்திரன் நாயர் தலைமையில் இணை கமிஷனர் விஜயகுமார், ஒரு துணை கமிஷனர், 4 உதவி கமிஷனர்கள், 10 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 50 பேர் கொண்ட 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. முன்னாள் பாஜ மாவட்ட மகளிர் அணி செயலாளராக இருந்த ரவுடி ஆற்காடு சுரேஷ் காதலியான அஞ்சலை, முன்னாள் அதிமுக வழக்கறிஞர் அணியை சேர்ந்த பிரபல ரவுடி தோட் டம் சேகர் மனைவி மலர் கொடி, முன்னாள் தமாகா வழக்கறிஞர் அணியை சேர்ந்த ஹரிதரன், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் அஸ்வத்தாமன், முன்னாள் அதிமுக கவுன்சிலர் ஹரிகரன், வடசென்னை பிரபல ரவுடி நாகேந்திரன் உள்பட 28 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
இவர்களில் கூலிப்படை தலைவன் குன்றத்தூர் திரு வேங்கடம், ஆயுதங்களை பறிமுதல் செய்ய அழைத்து சென்றபோது புழல் அருகே போலீசாரை மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிக்க முயன்றபோது என்கவுன்டர் செய்யப்பட்டது. அதேபோல், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு தமாகா முன்னாள் வழக்கறிஞர் அணியை சேர்ந்த ஹரிதரன் மற்றும் முன்னாள் அதிமுக வழக்கறிஞர் மலர்கொடி மூலம் கூலிப்படையாக செயல்பட்ட பொன்னை பாலு, திரு வேங்கடத்திற்கு ரூ.50 லட்சம் வரை சம்பவ செந்தில் மூலம் பணம் கொடுத்து உதவியது தெரியவந்தது. அந்த பணம் வழக்கறிஞரான மொட்டை கிருஷ்ணன் மூலம் கொடுக்கப்பட்டது என விசாரணையில் தெரியவந்தது. தலைமறைவான ரவுடி சம்பவ செந்தில் மற்றும் மொட்டை கிருஷ்ணனை போலீசார் தேடி வருகின்றனர்.
この記事は Dinakaran Chennai の October 04, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Dinakaran Chennai の October 04, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
கந்தசஷ்டி 4ம் நாள் திருத்தணி முருகனுக்கு திருவாபரண அலங்காரம்
கந்தசஷ்டி விழாவில் 4ம் நாளான நேற்று திருத்தணி முருகப்பெருமானுக்கு திருவாபரண அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன.
ஆவடி - சென்ட்ரல் புதிய ரயில் சேவை
சென்னை சென்ட்ரல் இடையே புதிய மின்சார ரயில் சேவை இன்று (6ம் தேதி) அறிமுகம் செய்யப்பட உள்ளது.
தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் போலீசார் தீவிர சோதனை
சென்னை நுழைவாயிலில் அமைந்துள்ள தாம்பரம் ரயில் நிலையம், முக்கிய போக்குவரத்து முனையமாக உள்ளது. இங்கிருந்து சென்னை கடற்கரை, செங்கல்பட்டு, காஞ்சிபுரத்திற்கு மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது.
காவலர் குறைதீர் சிறப்பு முகாம் 282 மனுக்கள் மீது நடவடிக்கை
காவலர்களுக்கான குறைதீர் சிறப்பு முகாமில் 282 மனுக்களை பெறப்பட்டு, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டார்.
ரப்பர் பந்தை வைத்துக்கொண்டு சிக்சர் அடிக்கும் டுபாக்கூர்களை பார்த்து திமுக ஒருபோதும் அஞ்சாது - ஐ.லியோனி
ரப்பர் பந்தை வைத்துக்கொண்டு சிக்சர் அடிப்பவர்களை பார்த்து திமுக அஞ்சாது என்று திண்டுக்கல் ஐ.லியோனி பேசினார்.
வாயு கசிவால் 2வது முறை மாணவிகள் மயக்கம் திருவொற்றியூர் தனியார் பள்ளியில் நவீன இயந்திரம் மூலம் சோதனை
திருவொற்றியூர் தனியார் பள்ளியில் கடந்த மாதம் 26ம் தேதி, விஷவாயு கசிவால் பல மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
இஸ்ரேல் குண்டுமழை காசாவில் 30 பேர் பலி
பாலஸ்தீனத்தின் காசா நகர் மீது இஸ்ரேல் ராணுவம் நேற்று நள்ளிரவில் நடத்திய அதிரடி தாக்குதல்களில் 30 பேர் உயிரிழந்தனர்.
விண்வெளியில் தினந்தோறும் 16 சூரிய உதயம், அஸ்தமனத்தை காணும் சுனிதா வில்லியம்ஸ்
அமெரிக்காவின் நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி பயணம் மேற்கொண்டார்.
ரஞ்சி கோப்பை 4வது சுற்று தொடக்கம் காலிறுதி முனைப்பில் தமிழ்நாடு
ரஞ்சி கோப்பை தொடரின் 4வது சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்குகின்றன.
துபாயில் அஜித்துக்கு விருந்து தந்த மாதவன்
துபாயில் அஜித்துக்கு தடபுடல் விருந்து கொடுத்திருக்கிறார் நடிகர் மாதவன்.அஜித்தும் மாதவனும் நல்ல நண்பர்கள்.