விமானிகளின் சாமார்த்தியத்தால் விமானம் பத்திரமாக தரையிக்கப்பட்டதால் 150 பயணிகள் உயிர் தப்பினர். திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் மாலை 5.40 மணியளவில் சார்ஜாவுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட்டது. அதில், 141 பயணிகள் பயணித்தனர். விமானிகள், விமான பணியாளர்கள் என 150 பேர் இருந்தனர். வழக்கமாக விமானம் தரையிலிருந்து மேலே ஏறிய சில நிமிடங்களில் அதன் சக்கரங்கள் தானாகவே உள்நோக்கி சென்று விடும்.
ஒருவேளை சக்கரங்கள் உள்நோக்கி செல்லாவிட்டாலும், அதற்கென உள்ள பொத்தானை அழுத்தினால், சக்கரங்கள் உள்நோக்கி சென்று விடும். ஆனால், இந்த விமானம் மேலே ஏறி, 10 நிமிடங்களுக்கு மேலாகியும் விமான சக்கரங்கள் தானாக உள்நோக்கி செல்லவில்லை என தெரிகிறது. தொடர்ந்து, அதற்கென உள்ள பொத்தானை விமானி அழுத்தினார். அதற்கும் பலன் கிடைக்கவில்லை. ஒட்டுமொத்த ‘வீல் சிஸ்டமும் ஜாம்’ ஆகி இருந்ததாக தெரிகிறது. உடனே விமானி, திருச்சி விமான நிலையத்தின் அவசர பிரிவை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். மும்பையில் உள்ள ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் தலைமை அலுவலகத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, திருச்சி விமான நிலைய இயக்குனர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் அதிகாரிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர்.
திருச்சியிலேயே விமானத்தை தரையிறக்க விமானிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், விமானத்தை உடனடியாக கீழே இறக்க முடியாத நிலை ஏற்பட்டது. இங்கிருந்து சார்ஜா செல்ல 4 மணி நேரம் பயணிக்க வேண்டும். ஒரு முறை விமானத்தில் எரி பொருள் நிரப்பினால், 5,400 கிமீ தூரம் விமானம் பறக்கும். திருச்சியில் இருந்து சார்ஜா 2,800 கிமீ (1500 நாட்டிக்கல் மைல்) தூரம். எனவே, திருச்சியில் இருந்து சார்ஜா சென்று விட்டு, மீண்டும் திருச்சி வர தேவையான எரி பொருள் விமானத்தில் இருந்தது. முழு கொள்ளளவுடன் எரி பொருள் இருப்பதால், அப்படியே விமானத்தை இறக்கும் பட்சத்தில் ஏதேனும் விபத்து ஏற்பட்டால், முதலில் எரிபொருள் டேங்க் தான் பாதிக்கப்படும். இதனால் அசம்பாவிதம் நிகழ வாய்ப்புண்டு என்பதால், ஓரளவுக்கு எரிபொருளை குறைத்த பிறகு விமானத்தை இறக்க முடிவு செய்தனர்.
この記事は Dinakaran Chennai の October 13, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Dinakaran Chennai の October 13, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
கட்டி முடிக்கப்பட்டு 8 ஆண்டுகள் ஆகியும் பயன்பாட்டுக்கு வராத அங்கன்வாடி மையம்
உடனே திறக்க வலியுறுத்தல்
மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் ஷோரூமில் கலைநயமிக்க நகைகளின் கண்காட்சி
சென்னை, ஜன.10: தி.நகரில் உள்ள மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் ஷோரூமில், கலைநயமிக்க நகைகளின் கண்காட்சி நடைபெற்றது.
பூந்தமல்லி தொகுதியில் மருத்துவமனையுடன் கூடிய மருத்துவக் கல்லூரி தொடங்க வேண்டும்
பேரவையில் ஆ.கிருஷ்ணாமி எம்எல்ஏ வலியுறுத்தல்
கோயில் அர்ச்சகர் மாயம்
திருவள்ளூர், ஜன. 10: திரு வள்ளூர் பஜார் தெருவைச் சேர்ந்தவர் குரு கார்த்திக் (25). இவரது தந்தை வெங்கடகிருஷ்ணன் (65). இவர் பூங்கா நகரில் உள்ள ஜலநாராயணா பெருமாள் கோயிலில் அர்ச்சகராக பணியாற்றி வருகிறார்.
எஸ்.ஏ கல்லூரியில் பள்ளி ஆசிரியர்களுக்கான விளையாட்டு போட்டிகள்
திருவள்ளூர், ஜன. 10: திருவேற்காட்டில் உள்ள எஸ்.ஏ கலை அறிவியல் கல்லூரியில் மாநில அளவில் பள்ளி ஆசிரியர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
புழல் கதிர்வேடு அரசுப் பள்ளியில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிக்கு அடிக்கல்
புழல், ஜன.10: புழல் கதிர்வேடு அரசு பள்ளியில் 714 லட்சம் மதிப்பீட்டில் சுற்று சுவர் அமைக்கும் பணியை 31வது வார்டு கவுன்சிலர் சங்கீதா பாபு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
புழல், சோழவரம் சுற்றுவட்டார பகுதிகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி தொடக்கம்
புழல், ஜன.10: புழல், சோழவரம் சுற்றுவட்டார பகுதிகளில் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
₹1 கோடியில் அமைக்கப்பட்ட பீடரில் இருந்து கும்மிடிப்பூண்டி சுற்று வட்டார மக்களுக்கு மின் வினியோகம்
டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்
ஒடிசாவில் இருந்து கடத்தி வந்த 6 கிலோ கஞ்சா பறிமுதல்
வடமாநில வாலிபர் கைது
பொங்கலையொட்டி இன்று முதல் ஜன.13ம் தேதிவரை 320 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
மாநகர் போக்குவரத்து கழகம் தகவல்