அமைச்சராக இருந்த போது கட்டுமான நிறுவனத்திடம் ரூ.28 கோடி லஞ்சம் பெற்றது தொடர்பாக, அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்திற்கு சொந்தமான 13க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று அமலாக்கத்துறை (ஈடி) அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். இச் சோதனையில் வைத்திலிங்கம் தனது மனைவி மற்றும் மகன்கள் பெயரில் சட்டவிரோதமாக குவித்து வைத்திருந்த பல கோடி ரூபாய் சொத்துக்கான ஆவணங்கள், பத்திரங்கள், வங்கிப் பணப் பரிமாற்ற ஆவணங்கள் ஆகியவற்றை கைப்பற்றினர். மேலும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் நண்பர் இளங்கோவன், அவரது சம்பந்தி வீடு, நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா தெலுகன்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் வைத்திலிங்கம். நடுத்தர விவசாய குடும்பத்தை சேர்ந்த இவருக்கு தங்கம் என்ற மனைவி, பிரபு, ஆனந்த பிரபு, சண்முகபிரபு ஆகிய 3 மகன்கள் மற்றும் பிரதீபா என்ற மகள் உள்ளனர். வைத்திலிங்கம் ஒரத்தநாடு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு 3 முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த 2011-2016ம் ஆண்டுகள் அதிமுக ஆட்சி காலத்தில் வீட்டு வசதி துறை, நகர்புற வளர்ச்சி மற்றும் கூடுதலாக விவசாயத்துறை அமைச்சராக வைத்திலிங்கம் பதவி வகித்தார்.
அப்போது வைத்திலிங்கம் தனது பதவி காலத்தில் ராம் குழுமத்திற்கு சொந்தமான ராம் பிராப்பர்ட்டீஸ் நிறுவனம் சார்பில் பெருங்களத்தூர் பகுதியில் 57.94 ஏக்கர் நிலத்தில் 24 பிளாக்குகள் கொண்ட 1,453 வீடுகள் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்திற்கு சட்டவிரோதமாக அனுமதி வழங்கிய விவகாரத்தில், அந்த நிறுவனத்திடம் இருந்து ரூ.27.90 கோடி வைத்திலிங்கம் லஞ்சமாக பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து கடந்த மாதம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில், வைத்திலிங்கம் தனியார் கட்டுமான நிறுவனமான ராம் பிராப்பர்ட்டீஸ் நிறுவனத்திற்கு தொடர்புடைய நிறுவனங்கள் மூலம் அவரது மகன் நடத்தும் முத்தம்மாள் ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு சட்டவிரோதமாக ரூ.27.90 கோடி லஞ்சப்பணம் கொடுக்கப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. அந்த பணத்தில் வைத்திலிங்கத்தின் மகன் பிரபு நடத்தும் முத்தம்மாள் எஸ்டேட் நிறுவனம் சார்பில் ரூ.23 கோடி அளவில் பூந்தமல்லி திருவெறும்பூர் பகுதியில் நிலம் வாங்கி குவித்து இருந்ததும் விசாரணையில் உறுதியானது.
この記事は Dinakaran Chennai の October 24, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Dinakaran Chennai の October 24, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
70 நாடுகளை சேர்ந்த சாப்ட்வேர் கம்பெனி ஊழியர்கள் மாமல்லபுரம் புராதன சின்னங்களை கண்டு மகிழ்ந்தனர்
70 நாடுகளை சேர்ந்த சாப்ட்வேர் கம்பெனி ஊழியர்கள் 220 பேர் மாமல்லபுரம் புராதன சின்னங்களை கண்டு மகிழ்ந்து, செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி அடைந்தனர்.
தனியார் மருத்துவமனை மருத்துவர்களுக்கு மகப்பேறு, குழந்தை நலம் குறித்த பயிற்சி பட்டறை
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவர்களுக்கு மகப்பேறு மற்றும் குழந்தை நலம் குறித்த பயிற்சி பட்டறையை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
சென்னை - நெல்லை இடையேயான வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக 8 பெட்டி
சென்னை – நெல்லை இடையேயான வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக 8 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மாவட்டம் முழுவதும் திமுகவினர் கவர்னரை கண்டித்து ஆர்ப்பாட்டம்
தமிழ்நாட்டில் அத்துமீறும் ஆளுநரையும், அவரைக் காப்பாற்றும் அதிமுக பாஜ கள்ளக்கூட்டணியையும் கண்டித்து திருவள்ளூரில் மேற்கு மாவட்ட திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பைக் மீது வாகனம் மோதி விபத்து உடற்பயிற்சி ஆசிரியர் பரிதாப பலி
பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அரசு உடற்பயிற்சி ஆசிரியர் பரிதாபமாக பலியானார்.
'96' திரைப்பட பாணியில் கவரப்பேட்டை அரசுப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
கவரப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் ‘96’ திரைப்பட பாணியில் 1996ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது.
கோயம்பேடு மார்க்கெட்டில் பொங்கல் சிறப்பு சந்தை அமையும் இடம் ஆய்வு
பொங்கல் பண்டிகை முன்னிட்டு சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 200 ரூபாய் பார்க் பகுதியில் உள்ள சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் சிறப்பு சந்தை வருகின்ற 9ம்தேதி நள்ளிரவில் தொடங்கி 16ம்தேதி வரை நடைபெறுகிறது.
இடைக்கழிநாடு பேரூராட்சியில் பொங்கல் விழா துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கும் கூட்டத்திற்கு அழைப்பிதழ் - கட்சி நிர்வாகிகளுக்கு சுந்தர் எம்எல்ஏ வழங்கினார்
இடைக்கழிநாடு பேரூராட்சியில் நடைபெறும் பொங்கல் விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.
மதுராந்தகம் சுற்று வட்டார பகுதிகளில் மதுவிலக்கு சட்ட விழிப்புணர்வு சுவரொட்டிகள்
மதுராந்தகம் மற்றும் செய்யூரை சுற்றியுள்ள கிராமங்களில் மதுவிலக்கு சட்டம் குறித்து விழிப்புணர்வு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
அண்ணா பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் மாணவர்களுக்கு மிதிவண்டி போட்டி
அண்ணா பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் மாணவர்களுக்கு மிதிவண்டி போட்டிகள் வரும் பிப்ரவரி 1ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.