தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு நேற்று தமிழகம் முழுவதும் துணிகள் வாங்க கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு மக்கள் பஸ், ரயில்களில் படையெடுத்தனர். இதே போல ஜவுளி, பட்டாசு விற்பனையும் களைகட்டியது. இன்றும் விற்பனை இறுதிக்கட்டத்தை எட்டும் என்பதால் கூட்டம் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும், வெளியூர் செல்லும் பொதுமக்களின் வசதிக்காக பள்ளி, கல்லூரிகளுக்கு தமிழ்நாடு அரசு அரை நாள் விடுப்பு அறிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகை நாளை (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. தீபாவளியை பொதுமக்கள் புத்தாடை உடுத்தியும், பட்டாசுகள் வெடித்தும், நண்பர்கள்-விருந்தினர்களுக்கு இனிப்புகளை வழங்கியும் கொண்டாடுவது வழக்கம். இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்கு இன்று ஒரு நாள் மட்டுமே எஞ்சியுள்ளது. இருந்தாலும் பொதுமக்கள் தீபாவளி ‘பர்சேஸ்’ செய்வதை ஒரு மாதத்திற்கு முன்னரே தொடங்கினர். நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால் நேற்று காலை முதல் தீபாவளி பொருட்கள் வாங்க மக்கள் படையெடுத்தனர். இதனால், தமிழகம் முழுவதும் கடை வீதிகளில் தீபாவளி விற்பனை நேற்று களைகட்டியது.
சென்னையை பொறுத்தவரை கடந்த ஒரு மாதமாகவே கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சென்னையின் முக்கிய வணிக பகுதிகளான தி.நகர், புரசைவாக்கம், பிராட்வே, மயிலாப்பூர், வண்ணாரப்பேட்டை, தாம்பரம், குரோம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது. ஒவ்வொருவரும் குடும்பத்துடன் வந்து துணிகள், பாத்திரங்கள் உள்ளிட்ட ெபாருட்களை வாங்கி சென்றனர்.
この記事は Dinakaran Chennai の October 30, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Dinakaran Chennai の October 30, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
வேளாண் துறை, தமிழ் வளர்ச்சி, மீன்வளம், பால்வளம் ஆகிய துறைகளில் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று தலைமை செயலகத்தில் வேளாண்மை-உழவர் நலத்துறை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆகிய துறைகளின் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
பெரம்பூரில் தண்டவாளத்தை கடந்தபோது விபரீதம் ரயில் இன்ஜினில் தலை சிக்கி 2 கி.மீ.க்கு தொங்கிய கல்லூரி மாணவியின் உடல்
பெரம்பூரில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் இன்ஜினில் தலை சிக்கி பலியான கல்லூரி மாணவியின் உடல் சுமார் 2 கி.மீ. தூரத்திற்கு தொங்கியபடி சென்றது.
விடுதிகளுக்கு மின்கட்டணத்தில் சலுகை வழங்க வேண்டும்
உரிமையாளர்கள் நலச்சங்க பொதுக்குழுவில் தீர்மானம்
கும்பகோணம் கோயிலில் இருந்து 1957ல் திருடப்பட்ட திருமங்கையாழ்வார் சிலை 67 ஆண்டுகளுக்கு பிறகு மீட்பு
லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அருங்காட்சியகத்தில் இருந்து கொண்டு வரப்படுகிறது * சிலை திருட்டு தடுப்பு பிரிவுக்கு டிஜிபி பாராட்டு சென்னை,: கும்பகோணம் சவுந்திரராஜபெருமாள் கோயிலில் கடந்த 1957ம் ஆண்டு காலத்தில் திருடப்பட்ட திருமங்கை ஆழ்வார் சிலையை லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அருங்காட்சியத்தில் இருந்து 67 ஆண்டுகளுக்கு பிறகு சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் மீட்டுள்ளனர்.
மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை பூங்கா, கடற்கரை பகுதி இன்று மூடல்
மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூங்காக்கள் மற்றும் கடற்கரை பகுதிகள் இன்று மூடப்படும் என்று சென்னை மாநராட்சி ஆணையர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.
சென்னை பெருநகர காவல்துறை டிவிட்டரில் போலீசார் குறித்து முதல்வர் பேசிய வீடியோவை 1 லட்சம் பேர் பார்வை
சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று முன்தினம் உள்துறை சார்பில் தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக இரண்டாம் நிலை காவலர்கள் மற்றும் தீயணைப்பாளர்கள் ஆகிய பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 3,359 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினர்.
ஏஐசிடிஇ.யின் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசிநாள்
அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமத்தின் (ஏஐசிடிஇ) அங்கீகாரம் பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் கேட் அல்லது சிஇஇடி நுழைவுத் தேர்வு அடிப்படையில் சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கு மாதந்தோறும் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி பொறியியல், தொழில்நுட்பம், கட்டிடவியல் ஆகிய படிப்புகளில் நடப்பு கல்வியாண்டில் (2024-25) சேர்க்கை பெற்ற முதுநிலை மாணவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது டங்ஸ்டன் சுரங்க உரிமையை ரத்து செய்ய வேண்டும்
மதுரை மாவட்டம், இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இரண்டு நாட்களாக போக்கு காட்டி வந்த பெஞ்சல் புயல் உருவானது
இன்று இரவு முதல் அதிகாலை வரை ஃபெஞ்சல் புயல் கரையைக் கடக்கும் என்றும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் அதிக மழை பெய்யும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.
வடாரண்யேஸ்வரர் கோயிலில் தெப்பத் திருவிழா கோலாகலம்
திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் திருக்கோயிலில் தெப்பத் திருவிழா நேற்று வெகு விமரிசையாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.