‘கஸ்தூரியின் பேச்சு வெடிகுண்டு போல உள்ளது. பேச்சுரிமை என்ற பெயரில் சமூக மோதல்களை ஏற்படுத்தக்கூடாது’ என கூறியுள்ள ஐகோர்ட் கிளை, தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய நடிகை கஸ்தூரியின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. சென்னை எழும்பூரில் கடந்த 3ம் தேதி நடந்த பிராமணர்கள் சங்க ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி, தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசியதற்கு பல்வேறு தெலுங்கு அமைப்புகள் சார்பில் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அளித்த புகாரின் படி அந்தந்த காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து நடிகை கஸ்தூரி தலைமறைவானார். மதுரை திருநகர் போலீசார் பதிவு செய்துள்ள வழக்கில், முன்ஜாமீன் கோரி நடிகை கஸ்தூரி, ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தார். இந்த மனு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் கடந்த 12ம் தேதி விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், நடிகை கஸ்தூரி பேசிய வீடியோ காட்சி நீதிபதி முன்பு போட்டுக் காட்டப்பட்டது. இதையடுத்து நீதிபதி, ‘‘கற்றவர், சமூக ஆர்வலர், அரசியல்வாதி என கூறிக்கொள்ளும் கஸ்தூரி எப்படி, இப்படி பேச முடியும். தவறை உணர்ந்து அவர் மன்னிப்பு கேட்கவில்லை. தான் கூறியதை நியாயப்படுத்தவே கஸ்தூரி விரும்புவதாக அவரது விளக்கம் உள்ளது. தெலுங்கு மக்கள் குறித்த அவரது பேச்சு தேவையற்றது. அவரது பேச்சு ஆபத்தை விளைவிக்கும்’’ எனக் கூறி தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தார். இந்த மனுவின் மீது நேற்று தீர்ப்பளித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், நடிகை கஸ்தூரியின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.
この記事は Dinakaran Chennai の November 15, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Dinakaran Chennai の November 15, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
மணல் திருட்டை காட்டி கொடுப்பதாக வாலிபருக்கு கொலை மிரட்டல்
திருவள்ளூர் அடுத்த அதிகத்தூர் பாரதிதாசனார் தெருவைச் சேர்ந்தவர் ஏஞ்சல் (28). இவரது கணவர் வினோத்குமார்.
ஆரணி பேரூராட்சியில் மது பிரியர்களின் பாராக மாறிய மருத்துவமனை கட்டிடம்
பெரியபாளையம் அருகே, ஆரணியில் புதர்கள் மண்டி மர்ம நபர்களின் பாராக மாறிவரும் பழைய கால்நடை மருத்துவமனையை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
திருத்தணி முருகன் கோயிலில் திருப்படித் திருவிழா ஏற்பாடுகள் தீவிரம்
திருத்தணி முருகன் கோயிலில், வரும் 31ம் தேதி திருப்புகழ் திருப்படித் திருவிழா நடைபெற உள்ள நிலையில், விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கவர்னர் ரவி ஓய்வெடுப்பதற்காக போக்குவரத்து சேவை நிறுத்தம்
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி திருமலையில் சாமி தரிசனம் செய்ய சாலை மார்கமாக சென்ற நிலையில், திருத்தணியில் 45 நிமிடங்கள் போக்குவரத்து சேவையை போலீசார் தடுத்து நிறுத்தியதால், பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.
ஆரணி, சத்தரை ஆற்றில் வெள்ளப்பெருக்கு நீரில் மூழ்கிய சாலை, தரைப்பாலம்
திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்த மழையால், மங்களம் கிராமத்தில் ஆரணியாற்றின் குறுக்கே இருந்த செம்மண் சாலை நீரில் மூழ்கியது.
மாவட்டம் முழுவதும் பெய்த கனமழையால் முழு கொள்ளளவை எட்டிய பூண்டி ஏரி
மாவட்டம் முழுவதும் பெய்த கனமழையால் பூண்டி நீர்த்தேக்கத்தில் நீர் இருப்பு உயர்ந்து வருகிறது. எனவே உபரி நீர் திறக்க வாய்ப்பு உள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலையூர் ஊராட்சியில் ~1.66 கோடியில் கட்டப்பட்ட பாலத்தை அமைச்சர் திறந்து வைத்தார்
திருப்போரூர் ஒன்றியத்திலடங்கிய மேலக்கோட்டையூர் ஊராட்சியில் ரூ.14 லட்சத்து 31 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி கட்டிடம், படூர் ஊராட்சியில் ரூ.14 லட்சத்து 31 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி கட்டிடம், கேளம்பாக்கம் ஊராட்சியில் 15வது நிதிக்குழு மான்ய நிதியில் கட்டப்பட்டுள்ள ரூ.57 லட்சத்து 31 ஆயிரம் மதிப்புள்ள வட்டார பொது சுகாதார வளாகம், கொட்டமேடு மற்றும் கீழூர் ஊராட்சிகளில் தலா ரூ.39 லட்சத்து 95 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கிராம ஊராட்சி செயலக கட்டிடங்கள், ரூ.7 லட்சம் மதிப்பில் கீழூர் ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள கலையரங்கம், மேலையூர் ஊராட்சியில் ரூ.2 கோடியே 11 லட்சத்து 28 ஆயிரம் செலவில் உபரிநீர் கால்வாய் மீது கட்டப்பட்ட பாலம் மற்றும் ரூ.1 கோடியே 66 லட்சத்து 33 ஆயிரம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள சாலை ஆகியவற்றின் திறப்பு விழா நேற்று நடந்தது.
பாட்டில் குடிநீரால் ஏற்படுப் ஆரோக்கிய பிரச்னைகள் என்னென்ன?
ஒவ்வொரு மனிதனும் உடல் சோர்வு இல்லாமல் உழைக்க தண்ணீர் இன்றியமையான ஒரு முக்கிய தேவையாக உள்ளது.
கட்டுமான உடல் உழைப்பு தொழிலாளர் சங்கம் சார்பில் தொழிலாளி கல்வி உதவி தொகை ஆண், பெண் என பாரபட்சம் இன்றி ஒரே மாதிரி வழங்க வேண்டும்
மாநில பொது குழு கூட்டம் தீர்மானம் நிறைவேற்றம்
தனியார் வங்கியில் போலி நகையை அடகு வைத்து 711.45 லட்சம் நூதன மோசடி
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியை சேர்ந்த சுரேந்திரன் (51) என்பவர், கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் வங்கியில், கடந்த 2021ம் ஆண்டு முதல் வாடிக்கையாளராக இருந்து வந்தார்.