இப்பாலம் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாட்டின் நிலப்பரப்புடன் ராமேஸ்வரம் தீவினை இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்ட பாம்பன் ரயில் பாலம், 110 ஆண்டுகளாக விபத்துகள் ஏதும் இன்றி மக்களை பயணிக்க செய்திருக்கிறது. பெருமைமிக்க இந்த பாலம் தனது சேவையில் இருந்து ஓய்வு பெறும் நிலையில் புதிதாக ரயில் பாலம் ஒன்றை அமைத்துள்ளது இந்திய ரயில்வே `நிகாம்’ நிறுவனம். இப் புதிய பாலம் மக்கள் பயன்பாட்டிற்காக விரைவில் வர உள்ளது.
ஆங்கிலேயர்களின் ஆட்சியின் போது ராமேஸ்வரம், பாம்பன் துறைமுகங்களில் இருந்து இலங்கைக்கும், உள்நாட்டு துறைமுகங்களுக்கும் சிறு கப்பல்கள் மூலம் வாணிபம் செய்து வந்தனர். 1854ம் ஆண்டில் 80 அடி அகலத்தில் 4400 அடி நீளத்திற்கு சுமார் 14 அடி ஆழப்படுத்தப்பட்டதன் விளைவாக பாம்பன் கால்வாயில் பெரிய கப்பல்களும், போர் கப்பல்களும் பயணிக்கத் தொடங்கின. மேலும் வியாபார தொடர்பை விரிவாக்கும் வகையில் இந்தியாவையும் இலங்கையையும் இணைக்க முயன்றனர்.
அதன் அடிப்படையில் பாம்பன் கடலிலும், தனுஷ்கோடி தலைமன்னார் இடையிலும் பாலம் அமைக்க திட்டமிட்டனர். அப்போதைய கவர்னர் ஜெனரல் நடத்திய ஆய்வில், பாலம் அமைப்பதற்கான வாய்ப்புகள் குறைவாக இருந்ததால் இந்த திட்டம் கைவிடப்பட்டது. அதனை தொடர்ந்து ‘டுவின் ரயில் பெரி சர்வீஸ்’ என்ற திட்டம் ஆய்வு செய்யப்பட்டது. இதன்படி சென்னையில் இருந்து வரும் ரயிலை தனுஷ்கோடி வரை கொண்டு செல்வது, பின்னர் அந்த ரயிலின் எஞ்சினை தவிர்த்து மற்ற ரயில் பெட்டிகளை அப்படியே கப்பலுக்குள் இழுத்து செல்வது. ரயிலுடன் செல்லும் கப்பல் தலைமன்னாரில் மீண்டும் தரையிறக்கப்பட்டு எஞ்சின் பொருத்திய ரயிலாக இயக்கத் திட்டமிடப்பட்டது.
இதற்கான திட்ட மதிப்பீடாக அன்றைய மதிப்பில் ரூ.229 லட்சம் என கூறப்பட்டது. ஆனால் இந்த திட்டத்திற்கும் இங்கிலாந்து அரசு அனுமதி அளிக்கவில்லை. இதன் பின்னர்தான் பாம்பன் கடலின் மேலே ரயிலும், கீழே கப்பலும் செல்லும் வகையில் ‘டபுள் லீப் கேட்லீவர்’ முறையில் பாலம் கட்ட திட்டமிட்டனர். குறிப்பாக வர்த்தக போக்குவரத்திற்காக பாம்பன் கடலில் பாலம் கட்ட பிரிட்டிஷ் அரசு முடிவு செய்தது. இத்திட்டப்படி பாம்பன் கடலில் தூக்குப் பாலம் மற்றும் தனுஷ்கோடி வரை ரயில் பாதை அமைக்க வேண்டும்.
この記事は Dinakaran Chennai の December 29, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Dinakaran Chennai の December 29, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
தை முதல் ஞாயிறையொட்டி திருத்தணி கோயிலில் பக்தர்கள் கூட்டம்
திருத்தணி முருகன் கோயிலில் தை மாதம் ஞாயிற்றுக்கிழமை அடுத்த நாளாகிய நேற்று காலை பெய்த திடீர் மழையின் காரணமாக பக்தர்கள் கூட்டம் குறைந்த அளவில் காணப்பட்டது.
ஈரோடு இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட அதிமுக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை
ஈரோடு இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட அதிமுக நிர்வாகியைகட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளார்.
ஒரு சமுதாய ஓட்டுக்களுக்காகதான் கூட்டணியிலிருந்து அதிமுக விலகல் - அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு
ஒரு சமுதாயத்தினரின் ஓட்டுக்கள் வேண்டும் என்பதற்காகத்தான் தேர்தல் நேரத்தில் பாஜவை விட்டு அதிமுகவினர் விலகினர் என்று பாஜ மாநில தலைவர் அண்ணாமலை பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகத்தின் நிதிநிலை கட்டுக்குள் இருக்கிறது பொருளாதாரம், நிதி மேலாண்மை குறித்து எடப்பாடிக்கு அடிப்படை புரிதல் இல்லை - நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி
தமிழகத்தின் நிதிநிலை கட்டுக்குள் இருக்கிறது. பொருளாதாரம் குறித்தும், நிதி மேலாண்மை குறித்தும் எந்த ஒரு அடிப்படை புரிதலும் எடப்பாடிக்கு இல்லை என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்துள்ளார்.
சைப் அலிகானை தாக்கிய வங்கதேச ஆசாமி கைது பெயரை மாற்றி தங்கியிருந்தது அம்பலம்
மும்பை பாந்த்ராவில் உள்ள நடிகர் சைப் அலிகான் வீட்டிற்குள் கடந்த கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு புகுந்த மர்ம நபர், நடிகரை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு தங்கம் கடத்தி வந்த 13 பேரை சோதனையின்றி வெளியே அனுப்பிய சுங்கத்துறை அதிகாரிகள்
விஜிலென்ஸ் தனிப்படை சுற்றிவளைத்தது, கடத்தலுக்கு துணைபோன 4 அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்
சத்தியமூர்த்தி நகர் பஸ் நிறுத்தம் அருகே வடிகாலில் குப்பை குவியல் -சீரமைக்க கோரிக்கை
திருவொற்றியூர் மண்டலத்தின் 6வது வார்டுக்கு உட்பட்ட சத்தியமூர்த்தி நகரில் மணலி நெடுஞ்சாலை அமைந்துள்ளது.
3 பெண் பணய கைதிகள் விடுவிப்பு இஸ்ரேல்-ஹமாஸ் போர்நிறுத்தம் அமல்
பாலஸ்தீனர்கள் மகிழ்ச்சி கொண்டாட்டம்
டாலருக்கு எதிரான ரூபாயின் வீழ்ச்சி ஆயத்த ஆடை ஏற்றுமதிக்கு சாதகம்
சர்வதேச சந்தையில் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் இந்தியா முன்னிலை பெற்று வருகிறது. இந்திய ஜவுளி ஏற்றுமதியில் 55 சதவீதத்திற்கும் அதிகமான உற்பத்தி தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
2 மில்லியன் சதுர அடியில் புதிய ஐடி பார்க் ஏஐ தகவல் தொழில்நுட்ப பூமியாக மாறும் கோவை
* 20 லட்சம் இளைஞர்களுக்கு பிரத்யேக பயிற்சி அளிக்க திட்டம், மாணவர்களின் திறனை மேம்படுத்த ரூ.78 கோடியில் 13 ஒப்பந்தங்கள்