ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92), கடந்த 2004 முதல் 2014 வரை பத்தாண்டுகள் பிரதமராக பதவி வகித்தார். அதன் பிறகு மாநிலங்களவை எம்பியாக இருந்த அவர் வயது மூப்பு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் தீவிர அரசியலில் இருந்து விலகி ஓய்வில் இருந்தார்.
கடந்த 26ம் தேதி திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மன்மோகன் சிங், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இரவு 9.51 மணிக்கு காலமானார். அவரது மறைவைத் தொடர்ந்து அரசு சார்பில் 7 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, டெல்லியில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்ட மன்மோகன் சிங் உடலுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் நேற்று முன்தினம் அஞ்சலி செலுத்தினர். இதைத் தொடர்ந்து மன்மோகன் சிங்கின் இறுதி சடங்கு நேற்று நடந்தது.
தேசியக் கொடியால் போர்த்தப்பட்ட மன்மோகன் சிங்கின் உடல், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் பலத்த பாதுகாப்புடன் காங்கிரஸ் தலைமையகத்திற்கு காலை 8 மணிக்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. அங்கு மன்மோகன் சிங் உடலுக்கு காங்கிரஸ் கொடி போர்த்தப்பட்டு கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கட்சியின் பொதுச் செயலாளர்கள் கே.சி.வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ், ரன்தீப் சுர்ஜேவாலா, ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட், காங்கிரஸ் எம்பி சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா மற்றும் முன்னாள் ஒன்றிய அமைச்சர்கள், கட்சி தொண்டர்கள் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.
この記事は Dinakaran Chennai の December 29, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Dinakaran Chennai の December 29, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
பேரூராட்சியுடன் ணைக்க எதிர்ப்பு புதுகும்மிடிப்பூண்டி பொதுமக்கள் மனு
கும்மிடிப்பூண்டி அடுத்த புது கும்மிடிப்பூண்டி ஊராட் சியில் தேவாங்க தெரு, ரெட்டியார் தெரு, கரும் புக்குப்பம் காலனி, வியட் நாம் காலனி, பால யோகி நகர், பாலகிருஷ்ணாபுரம், ராமஞ்சேரி கண்டிகை, புதுப்பேட்டை, அருந்ததி யர் காலனி உள்ளிட்ட பல் வேறு பகுதிகளில் சுமார் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமப்புற மக்கள் வசித்து வருகின்றனர்.
பெரியபாளையம் மும்முனை சந்திப்பில் 6 மாதமாக பழுதாகி காணப்படும் உயர்கோபுர மின்விளக்கு
பெரியபாளையம் ஊராட் சியில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
பைக் மீது லாரி மோதி விபத்து கல்லூரி மாணவன் பலி உடன் சென்ற தாய் படுகாயம்
திருவள்ளூர் அருகே பைக் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் கல்லூரி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
புரோக்கர்களின் வளர்ச்சியால் அழிவை சந்திக்கும் விவசாயம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வீட்டுமனைகளாக மாறும் விளைநிலங்கள்
பிளாட் போட்டு விற்க புதிய சட்டம் இயற்ற வலியுறுத்தல்
வண்டலூர் அருகே ஏரியில் சிமென்ட் லாரி தலை குப்புற கவிழ்ந்து விபத்து
வண்டலூர் அடுத்த கீரப்பாக்கத்தில் உள்ள சிமென்ட் கற்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலைக்கு தாம்பரத்திலிருந்து 500 சிமென்ட் மூட்டைகளை ஏற்றிவந்த லாரி, கண்டிகை-கீரப்பாக்கம் சாலையில் வந்தபோது தாறுமாறாக ஓடி சாலையோர ஏரியில் தலைகுப்புற கவிழ்ந்தது.
ஆங்கில புத்தாண்டையொட்டி வையாவூர் தென் திருப்பதி கோயிலில் இன்று படி பூஜை
தென் திருப்பதி என அழைக்கப்படும் திருமலை வையாவூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆங்கில புத்தாண்டையொட்டி, இன்று படி பூஜை நடக்கிறது.
நீண்ட கால கோரிக்கையான இசிஆர் - ஓஎம்ஆர் இணைப்பு சாலை பணிகள் மீண்டும் தொடக்கம்
ஓஎம்ஆர் பகுதியில் 670 மீட்டர் பணி நிறைவு
தி.நகர் பேருந்து நிலையத்தில் மாநகர பஸ் மோதி மூதாட்டி பலி
டயரில் சிக்கிய உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்
மாதவரத்தில் 17 கோடி மதிப்பு மெத்தாம்பெட்டமின் பறிமுதல்
போதைப்பொருள் கடத்தல் மன்னனின் மனைவி உள்பட 8 பேர் அதிரடி கைது
கட்டிட விதிமீறல் மீது விரைந்து நடவடிக்கை மாநகராட்சிக்கு ஐகோர்ட் உத்தரவு
விதிமீறி சட்டவிரோதமாக கட்டப்படும் கட்டிடங்களுக்கு எதிராக அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.