பெருநகர சென்னை மாநகராட்சி, மதுரை, திருச்சி உள்ளிட்ட 16 மாநகராட்சிகளுடன் 4 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள், 149 ஊராட்சிகளை இணைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளர் கார்த்திகேயன் நேற்று வெளியிட்டுள்ள அரசாணையில் கூறி இருப்பதாவது: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளின் எல்லைகள் விரிவாக்கம் மற்றும் புதிய நகராட்சிகள், பேரூராட்சிகள் உருவாக்குவது தொடர்பாக 5 அரசாணைகள் வெளியிடப்படுகிறது.
தமிழ்நாடு நகரமயமாதலில் இந்தியாவில் முன்னோடி மாநிலமாக உள்ளது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நகர்ப்புற மக்கள் தொகை 48.45 சதவீதமாகவும், தற்போது நகர்ப்புறங்களில் வாழும் மக்கள் தொகை சதவீதம் மேலும் உயர்ந்துள்ளது. எனவே, மாநிலத்தின் மிக வேகமான நகரமயமாக்கலை கருத்திற்கொண்டு, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை மறுசீரமைக்க வேண்டியதன் அவசியம் எழுகின்றது.
மாநகராட்சிகள், நகராட்சிகள் போன்ற பெரியளவிலான நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை சுற்றி அமைந்துள்ள ஊராட்சிகள், பேரூராட்சிகள் போன்றவை நகரங்களின், பெருநகரங்களின் நுழைவாயிலாக அமைந்துள்ளதுடன், உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருவாய் ஈட்டித் தருகின்ற பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட பெருநிறுவனங்கள், தொழிற்சாலைகள் பலவும் இவற்றில் அமைந்துள்ளன. இந்த பெருநிறுவனங்கள், தொழிற்சாலைகளில் பணிபுரியும் பணியாளர்கள் ஏராளமானோர் அருகில் உள்ள நகர்ப்புற பகுதிகளிலும், அதனை சுற்றியுள்ள ஊராட்சிகளிலும் குடியிருந்து வருகின்றனர்.
この記事は Dinakaran Chennai の January 02, 2025 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Dinakaran Chennai の January 02, 2025 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
தமிழ்நாட்டை போல இந்தோனேஷியாவிலும் இலவச மதிய உணவு
தமிழ்நாட்டைப்போல இந்தோனேஷியாவிலும் பள்ளி மாணவர்களுக்கு இலவச மதிய உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரியாவில் ஆட்சி அமைக்க வலதுசாரி கட்சி முயற்சி
ஆஸ்திரியாவில் கடந்த செப்டம்பர் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் வலதுசாரி ஆதரவு ஹெர்பர்ட் கிக்ல் தலைமையிலான சுதந்திரக் கட்சி வெற்றி பெற்றது.
பிரம்மபுத்திரா மீது உலகின் மிகப்பெரிய அணை இந்தியாவுக்கு தண்ணீர் கிடைப்பதில் எந்தவித சிக்கலும் இருக்காது
திபெத்தில் பிரம்மபுத்திரா ஆற்றின் மீது உலகின் மிகப்பெரிய அணையைக் கட்டுவதால் இந்தியா மற்றும் வங்கதேசத்திற்கு தண்ணீர் கிடைப்பதில் எந்தவித சிக்கலும் இருக்காது என்று சீனா தெரிவித்துள்ளது.
இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா கேப்டன்
அயர்லாந்து மகளிர் அணியுடன் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் மோதும் இந்திய மகளிர் அணிக்கு ஸ்மிருதி மந்தனா தலைமை வகிப்பார் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது.
ஆங்கிலம் பேசுவதில் இந்தியா முன்னிலை
பியர்சன் நிறுவனம் உலக நாடுகளின் ஆங்கிலப் புலமை குறித்து ஆய்வு செய்து தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
கோல்டன் குளோப் விருதுகள் விழா இந்திய படம் வெளியேறியது
82வது கோல்டன் குளோப்ஸ் 2025 கலிபோர்னியாவில் உள்ள பெவர்லி ஹில்ஸில் நடைபெற்றது. 82வது கோல்டன் குளோப்ஸ் நிகழ்ச்சியை பிரபல நகைச்சுவை நடிகையான நிக்கி கிளேசர் தொகுத்து வழங்கினார்.
மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும்
தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரியான கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஒன்றிய அரசு நிறைவேற்றிட வேண்டும் என ஆளுநர் உரையில் குறிப்பிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு 18 பேரை குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவு ரத்து
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷச் சாராயம் அருந்தி 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது தொடர்பாக கைது செய்யப்பட்ட 18 பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர்.
ஒரு பாலின ஈர்ப்பு பிரிவினருக்கான உரிமை பாதுகாப்பு கொள்கைக்கு ஒரு மாதத்தில் ஒப்புதல்
ஒரே பாலின ஈர்ப்பு பிரிவினருக்கான உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான கொள்கைக்கு ஒப்புதல் வழங்குவதற்கு தமிழக அரசு தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது.
சட்டமன்ற மரபுகளை மதிக்காமல், தமிழக மக்களை அவமதிக்கும் ஆளுநர் ரவியை பதவி நீக்க வேண்டும்
சட்டமன்ற மரபுகளை மதிக்காமல் தமிழக மக்களை அவமதிக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.