கோயில்களில் நேற்று விடிய விடிய வரிசையில் நின்று வழிபட்டனர். சர்ச்களில் நள்ளிரவு பிரார்த்தனைகள் நடந்தன. கிழக்கு கடற்கரை சாலை என 4 இடங்களில் நடந்த விபத்தில் கல்லூரி மாணவன் உட்பட 5 வாலிபர்கள் உயிரிழந்தனர். இருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், போலீசாரின் தடையை மீறி பைக் ரேசில் ஈடுபட்ட நபர்களிடம் இருந்து 242 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
2025ம் ஆண்டின் ஆங்கில நேற்று புத்தாண்டு பிறந்ததையொட்டி பொதுமக்கள் அனைவரும் தங்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் கேக் வெட்டி வெகு விமர்ச்சையாக கொண்டாடினர். புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக சென்னை பெருநகர காவல்துறை சிறப்பு ஏற்பாடுகள் செய்து இருந்தனர்.
இயைதடுத்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி கூடுதல் கமிஷனர்கள் கண்ணன், நரேந்திரன் நாயர் மற்றும் போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுதாகர் தலைமையில் 19 ஆயிரம் போலீசார் மற்றும் 1500 ஊர்காவல்படையினர் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
இதையடுத்து மெரினா, பெசன்ட் நகர் பகுதியில் பொதுமக்கள், நண்பர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் ஒன்று கூடி கேக்குகள் வெட்டி நேற்று முன்தினம் இரவு 12 மணிக்கு ‘ஹாப்பி நியூ இயர்’ என்று விண்ணை முட்டும் வகையில் கோஷம் எழுப்பி புதிய புத்தாண்டை பொதுமக்கள் வரவேற்றனர்.
வழக்கத்தை விட இந்த ஆண்டு பொதுமக்கள் அதிகமாக கூடினர். இதற்காக சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. குறிப்பாக பெண்களும், சிறுவர்களும் அதிக அளவில் திறண்டனர். நள்ளிரவில் கடலில் இறங்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் கடற்கரை சாலைகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டிருந்ததால் சாலைகளில் புத்தாண்டை பொதுமக்கள் கொண்டாடினர்.
この記事は Dinakaran Chennai の January 02, 2025 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Dinakaran Chennai の January 02, 2025 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்த பிரபல தனியார் உணவக சிக்கனில் புழு
சென்னை போரூர் அடுத்த காரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன்.
எலும்பு கூடாக காட்சியளிக்கும் மின்கம்பங்கள் மாற்றப்படுமா?
பொன்னேரி அடுத்த, பழவேற்காடு மீன் மார்க்கெட் பகுதியில் உள்ள லைட் ஹவுஸ் மேம்பாலம் அருகே பல வருடங்களுக்கு முன்பு மின்கம்பங்கள் அமைக்கப்பட்டன.
அண்ணா பிறந்தநாள் மாரத்தான் போட்டி
அமைச்சர் நாசர் தொடங்கி வைத்தார்
திருவள்ளூர் மாவட்டத்தில் ஒன்றிய அரசு திட்டப் பணிகள் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது
திருவள்ளூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறையின் கீழ் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை ஒன்றிய அரசின் ஊரக வளர்ச்சி துறை இயக்குனர் ஆய்வு நடத்தினார்.
குண்டும் குழியுமான மாநில நெடுஞ்சாலை
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிப்பட்டு அருகே, கொசத்தலை ஆற்றிலிருந்து நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ₹45 கோடி மதிப்பீட்டில் 6 நீர் உறிஞ்சி கிணறுகள் அமைத்து, பைப் லைன்கள் மூலம் தினமும் 2.76 பில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட உள்ளது.
கிண்ணத்தில் எண்ணெய் கொடுத்து கன்னத்தில் தடவ சொல்லி பெண்ணிடம் அத்துமீறல்
ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சிறையில் அடைப்பு
எஸ்ஆர்எம் வேளாண் அறிவியல் கல்லூரியில் நடந்த கூடைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள எஸ்ஆர்எம் வேளாண் அறிவியல் கல்லூரியில் மண்டல அளவில் நடைபெற்ற கூடைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோப்பைகள் மற்றும் ஊக்க பரிசு தொகை வழங்கப்பட்டது.
சிறுவர்களை பாதிக்கும் நுரையீரல் தொற்று
உலகம் முழுவதும் பருவநிலை மாற்றத்தால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது.
இடைக்கழிநாடு பேரூராட்சியில் வரும் 12ம் தேதி பொங்கல் திருவிழா நலத்திட்ட உதவிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார்
காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில், பொங்கல் விழா மற்றும் ஐந்தாயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இடைக்கழிநாடு பேரூராட்சிக்குட்பட்ட கப்பிவாக்கம் கிராமத்தில் இசிஆர் சாலையையொட்டி வரும் 12ம் தேதி காலை நடைபெற உள்ளது.
13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை
பதிமூன்று வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கார் டிரைவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.