தமிழகத்தில் கோடை வெயில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் சுட்டெரித்தது.
இந்த நிலையில் தற்போது அக்னி நட்சத்திரம் நீடித்து வரும் நிலையில் தமிழகம் முழுவதும் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. இதனால் தற்போது வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் வருகிற 19-ந்தேதி வரை கனமழை மற்றும் மிக கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள தெற்கு இலங்கை கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக தமிழ்நாட்டில் பல இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் வருகிற 19-ந்தேதி வரை கனமழை மற்றும் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது. அதிக பட்சமாக 20 செ.மீ. வரை மழை பெய்யும். இதனால் பல மாவட்டங்களுக்கு மஞ்சள் மற்றும் ஆரஞ்சு 'அலர்ட்' விடப்பட்டுள்ளது. மேலும் 21 செ.மீ.க்கு மேல் மழை பெய்ய வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் 'ரெட் அலர்ட்' எச்சரிக்கையும் விடுக்கப்படும்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தென்காசி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதன் தொடர்ச்சியாக வருகிற 19-ந்தேதி வரை 26 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
この記事は Maalai Express の May 17, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Maalai Express の May 17, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை உணவுப் பொருள் வழங்கல் இயக்குனர் ஆய்வு
மாவட்ட கண்காணிப்பு அலுவலர் - உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை இயக்குனர் த.மோகன், மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், முன்னிலையில் ஃபெஞ்சல் புயல் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர் வயல்களில் பாதிப்புகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
யுஜிசியின் புதிய விதிகளுக்கு எதிரான தனி தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்
பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனம் தொடர்பாக பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) சமீபத்தில் புதிய விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது.
அனைத்துத் துறைகளின் சார்பில் வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாக கலந்தாய்வு கூட்டம்
மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தலைமையில், அனைத்துத் துறைகளின் சார்பில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாக கள ஆய்வுகள் மேற்கொண்டு, பணிகளின் நிலை மற்றும் திட்டப் பயன்கள் ஆகியன குறித்து கலந்தாய்வுக் கூட்டம் மேற்கொண்டார்.
பனையூரில் நாளை தவெக மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்
நடிகர் விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி 2 ந் தேதியில் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கினார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவி எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக விசாரிக்க தேர்தல் ஆணையத்துக்கு தடை: ஐகோர்ட்
அ.தி.மு.க. உள்கட்சி விவகாரம் தொடர்பாக நிலுவையில் உரிமையியல் வழக்குகளில் உள்ள முடிவு காணும் வரை அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க கூடாது.
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டம்
ஆட்சியர் பழனி தலைமையில் நடைபெற்றது
ஐ.சி.எம்.ஆர்., சார்பில் எலிக்காய்ச்சல் குறித்து பயிற்சி பட்டறை
ஐ.சி.எம்.ஆர்., பிராந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் சார்பில், எலிக்காய்ச்சல் குறித்த பிராந்திய அளவிலான பயிற்சி பட்டறை புதுச்சேரி இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக வளாகத்தில் நேற்று முன்தினம் துவங்கியது.
விழுப்புரத்தில் காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் தலைமையில் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
மீண்டும் 58 ஆயிரத்தை உந்த தங்கம் விலை
தங்கம் விலையில் ஏற்ற, இறக்கம் தொடருகிறது.
குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.