மாறிவரும் உலகில் மறையா ‘மாமா கடை
Tamil Murasu|November 10, 2024
சிறிய வானொலியில் பாட்டுச் சத்தம். எளிமையான தோற்றத்தில் அமைந்த ஒரு சிறிய கடை. கடைக்காரரின் கைகளுக்கு எட்டும் தூரத்தில் பொருள்கள்.
அனுஷா செல்வமணி
மாறிவரும் உலகில் மறையா ‘மாமா கடை

குச்சிமிட்டாய் முதல் மளிகைப் பொருள்கள் வரை கிடைக்கக்கூடிய இந்தக் கடையை, சிங்கப்பூரின் பரபரப்பான குடியிருப்பு வட்டாரங்களில் ஆங்காங்கே பார்க்க முடியும்.

‘மாமா கடை’ என்று பலராலும் செல்லமாக அழைக்கப்படும் இந்தக் கடைகள், அந்தந்த வட்டாரக் குடியிருப்பாளர்களுக்கு நன்கு பரிட்சயமானவை. பலசரக்கு கடைகளாகத் தலைமுறை தலைமுறையாகச் செயல்பட்டு வரும் இந்த மாமா கடைகள், சிங்கப்பூர் வரலாற்றின் ஒரு பகுதியாகவும் விளங்குகின்றன.

வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் 1970களில் மாமா கடைகளைக் குடியிருப்பு வட்டாரங்களில் அறிமுகப்படுத்தியது. 1980கள், 1990களில் மாமா கடைகளின் எண்ணிக்கை உச்சத்தில் இருந்தது. 560ஆக இருந்த அந்த எண்ணிக்கை, தற்போது கிட்டத்தட்ட 240க்குக் குறைந்துவிட்டது.

இணைய வர்த்தகர்களின் அதிகரிப்பு, புதிதாகக் கட்டப்படும் வீவக கட்டடங்களின் அடித்தளங்களில் இடப்பற்றாக்குறை என மாமா கடைகள் எதிர்நோக்கும் சவால்கள் பல.

எதிர்காலம் உண்டு

மாமா கடைகளின் எதிர்காலம் என்ன என்று சிலர் வினவும் காலகட்டத்தில், இத்தொழிலில் 43 வயது ஆனந்த் கிருஷ்ணன் புதிதாக இறங்கியுள்ளார்.

விரல் விட்டு எண்ணும் அளவுக்கு மாமா கடைகள் குறைந்துள்ள நிலையில், இத்தொழிலில் புதிதாக இறங்கியுள்ளார் ஆனந்த் கிருஷ்ணன். படம்: த. கவி

சிங்கப்பூரில் கடந்த 19 ஆண்டுகளாக இருக்கும் ஆனந்த், மார்சிலிங் வட்டாரத்தில் ‘அண்ணாச்சி டிரேடிங் மினிமார்ட்’ என்ற கடையை நடத்தி வருகிறார்.

இணைய வர்த்தகங்கள் இயங்கும் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் மாமா கடைகள் பல, இழுத்து மூடப்பட்டாலும் மாமா கடை நடத்தும் தொழில் தமக்கு நம்பிக்கை அளிப்பதாக திரு ஆனந்த் கிருஷ்ணன் கூறினார். முன்னதாக, பொறியியல் தொழில்நுட்ப வல்லுநராகப் பணியாற்றிய இவர், மாமா கடைகளில் விற்கப்படும் பொருள்களுக்கான தேவை தொடர்கிறது என்றார்.

“மாமா கடைகளில் விற்கப்படும் மளிகைப் பொருள்களை மக்கள் இன்னமும் நாட, அவற்றின் நம்பகத்தன்மையே காரணம். அதோடு வீட்டில் இருந்தபடி இணைய வர்த்தகங்களின் மூலம் பொருள் வாங்குவதைவிட மாமா கடைக்கு நடந்து சென்று பொருள்களைக் கையில் எடுத்துப் பார்த்து வாங்குவது மேலும் சிறந்த ஓர் அனுபவம்,” என்றார் ஆனந்த்.

この記事は Tamil Murasu の November 10, 2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

この記事は Tamil Murasu の November 10, 2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

TAMIL MURASUのその他の記事すべて表示
மனிதவளத் துறையில் ‘ஏஐ’ பயன்பாடு கண்காணிக்கப்படும்
Tamil Murasu

மனிதவளத் துறையில் ‘ஏஐ’ பயன்பாடு கண்காணிக்கப்படும்

மனிதவளப் பிரிவில் செயற்கை நுண்ணறிவைப் (ஏஐ) பயன்படுத்தும் நிறுவனங்களின் ஊழியர்கள் பாகுபாடு காட்டப்படுவதாக அரசாங்கத்திடம் எந்த ஒரு புகாரும் அளிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

time-read
1 min  |
November 14, 2024
டிரம்ப் அரசாங்கத்தில் எலோன் மஸ்க், விவேக் ராமசாமிக்குப் பொறுப்பு
Tamil Murasu

டிரம்ப் அரசாங்கத்தில் எலோன் மஸ்க், விவேக் ராமசாமிக்குப் பொறுப்பு

அமெரிக்காவின் அடுத்த அதிபராகப் பொறுப்பேற்கவுள்ள டோனல்ட் டிரம்ப், செல்வந்தர் எலோன் மஸ்க், விவேக் ராமசாமி ஆகியோருக்குப் பொறுப்பு வழங்கியுள்ளார்.

time-read
1 min  |
November 14, 2024
ஆஸ்திரேலியாவில் சிங்கப்பூரின் ராணுவப் பயிற்சிப் பகுதி விரிவாக்கம்
Tamil Murasu

ஆஸ்திரேலியாவில் சிங்கப்பூரின் ராணுவப் பயிற்சிப் பகுதி விரிவாக்கம்

சிங்கப்பூர் ஆயுதப்படையும் ஆஸ்திரேலியத் தற்காப்புப் படையும் தங்களின் ராணுவப் பயிற்சிகளை நடத்துவதற்காக இரு நாடுகளும் இணைந்து விரிவுபடுத்தப்பட்ட 'ஷோல்வாட்டர் பே' பயிற்சிப் பகுதியை மேம்படுத்தியுள்ளன.

time-read
1 min  |
November 14, 2024
Tamil Murasu

இலங்கையில் இன்று நாடாளுமன்றத் தேர்தல்

பெரும்பான்மை பெறவேண்டிய கட்டாயத்தில் அதிபர் திசாநாயக்க

time-read
1 min  |
November 14, 2024
சாம்பியன்ஸ் டிராபி: பாகிஸ்தான் விலகக்கூடும்
Tamil Murasu

சாம்பியன்ஸ் டிராபி: பாகிஸ்தான் விலகக்கூடும்

இஸ்லாமாபாத்: சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட பாகிஸ்தான் செல்வதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், பாகிஸ்தானும் அதற்கு வலுவான பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

time-read
1 min  |
November 13, 2024
சிறுநீரக நோய்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திய நடை
Tamil Murasu

சிறுநீரக நோய்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திய நடை

யோகிதா அன்புச்செழியன் சிறுநீரக நோயாளிகளுக்கு நிதி திரட்டுவதற்கும் பொதுமக்களிடையே சிறுநீரக நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் சிறுநீரக ரத்தச் சுத்திகரிப்பு அறநிறுவனம் (Kidney Dialysis Foundation) ஆண்டுதோறும் 'காட் டு வாக்' (Got to Walk) எனும் நடை நிகழ்ச்சியை நடத்திவருகிறது.

time-read
1 min  |
November 13, 2024
சீனாவின் மாபெரும் விமானக் கண்காட்சி தொடங்கியது
Tamil Murasu

சீனாவின் மாபெரும் விமானக் கண்காட்சி தொடங்கியது

சீனாவில் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 12) மாபெரும் விமானக் கண்காட்சி தொடங்கியது.

time-read
1 min  |
November 13, 2024
உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சரை அறிவித்த டிரம்ப்
Tamil Murasu

உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சரை அறிவித்த டிரம்ப்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள டோனல்ட் டிரம்ப், அந்நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையை வழிநடத்த சவுத் டக் கோட்டா மாநில ஆளுநர் கிறிஸ்டி நோமைத் தேர்வுசெய்துள்ளதாக 'சிஎன்என்' தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
November 13, 2024
Tamil Murasu

ஷாருக்கானுக்குக் கொலை மிரட்டல் விடுத்த வழக்கறிஞர்

இந்தித் திரையுலக நட்சத்திரம் ஷாருக்கானுக்குக் கடந்த வாரம் கொலை மிரட்டல் விடுத்த ஆடவரைக் காவல்துறை கைதுசெய்துள்ளது.

time-read
1 min  |
November 13, 2024
பத்தாண்டுகளில் 15 லட்சம் பேர் விபத்துகளில் மரணம்
Tamil Murasu

பத்தாண்டுகளில் 15 லட்சம் பேர் விபத்துகளில் மரணம்

2012ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவில் இருமடங்கிற்கும் மேல் பெருகிய வாகனங்கள்

time-read
1 min  |
November 13, 2024