மலையாள சூப்பர் ஸ்டாரின் மகனாக இருந்தும் நடிப்பைப் பற்றிய சிந்தனையே இல்லாமல் வெளிநாட்டில் சென்று வேலையிலும் சேர்ந்தவர். ஏதோ ஒரு சினிமா பந்தம் இழுக்க ‘லெட்'ஸ் கிவ் இட் ஏ டிரை' என நடிக்க ஆரம்பித்தவர் இதோ இன்று பல தயாரிப்பாளருக்கு லக்கி சார்ம் எனில் பெண் ரசிகைகளுக்கு சாக்லேட் பாய்.
மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி என களமிறங்கி தூள் கிளப்பிக் கொண்டிருக்கிறார் துல்கர் சல்மான்.
"எனக்கு நிறைய மொழிகள் கத்துக்க பிடிக்கும். நிறைய கத்துக்கிட்டேன். வெறும் சவுண்டை வெச்சே இது இந்த மொழி அந்த மொழின்னு சொல்லிடுவேன். ஒருவேளை அதுதான் இப்ப என் கரியருக்கே உதவி செய்யுதுன்னு நினைக்கிறேன்...” டிரேட் மார்க் புன்னகையுடன் பேசத் தொடங்கினார் துல்கர் சல்மான்.
10 வருட சினிமா பயணம்...என்ன கத்துக்கிட்டீங்க?
எனக்கு இந்த சினிமா எவ்வளவு பிடிச்சிருக்குங்கறதைக் கத்துக்கிட்டேன். நான் எந்த மொழில, எங்க நடிச்சாலும் என்னை ஏத்துக்கறாங்க. நான் ஆசீர்வதிக்கப்பட்டவனா நினைக்கிறேன். என்னை இயக்குற மிகப்பெரிய சக்தியா சினிமாவைப் பார்க்கறேன்.
நீங்க செல்லும் மொழியெங்கும் சிறப்பு கிடைக்கிதே... என்ன மேஜிக் அது?
அமெரிக்கால படிக்கும் போதே இந்தியர்கள் எல்லாம் அடிக்கடி ஒண்ணா சேர்வோம். அப்ப ஒவ்வொருத்தரும் அவங்க தாய்மொழில பேசுவாங்க.
இந்தியாவுடைய மொழிக் கலாசாரம் அங்கதான் எனக்குக் கிடைச்சது. அந்தத் திறமைதான் இப்ப எனக்குக் கை கொடுக்குது. நானும் அந்த மேஜிக்கை தேடி தான். எல்லா மொழிலயும் படங் கள் செய்யறேன். ஒருவேளை மேஜிக் இதுதான்னு தெரிஞ்சிட்டா இப்ப இருக்கறதை விட இன்னும் நிறைய சிறப்பு கிடைக்கும்னு தோணுது.
அப்பா மம்மூட்டி நடிக்காம விட்ட கதைகள் மிஸ் ஆகி இப்ப உங்ககிட்ட வருதோ..? வரிசையா பீரியாடிக் படங்களா இருக்கே?
ஹாஹா! அட இதை நான் இப்படி யோசிக்கல! ஆனா, அப்பாகூட 1970கள்ல தான் நடிக்க ஆரம்பிச்சார். எனக்கு 1960கள்ல நடக்குற கதைகளா வருது!
ஆக்ச்சுவலி எனக்கு பீரியாடிக் படங்கள்ல நடிக்க ரொம்பப் பிடிக்கும். ஏன்னு கேட்டா சொல்லத் தெரியலை.
Denne historien er fra 12-08-2022-utgaven av Kungumam.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra 12-08-2022-utgaven av Kungumam.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
ஹியூமன் வாஷிங் மெஷின்
மனிதர்கள் ஆயிரக்கணக்கான வருடங்களாக கையால்தான் துணிகளைத் துவைத்து வந்தனர்.
வீட்டை உடைக்கும் இளைஞர்!
‘‘யாரோ திருடர்கள் தங்களின் வீட்டுக் கதவுகளை உடைத்து உள்ளே புகுந்துவிட்டனர்; ஆனால், எந்தப் பொருளும் திருட்டுப் போகவில்லை...’’ என்று ஜப்பானின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேலானவர்கள் காவல்துறையிடம் புகார் தெரிவித்திருக்கின்றனர்.
ஏஐ டாய்லெட் கேமரா!
இந்தத் தலைப்பு உங்களை முகம் சுளிக்க வைக்கலாம்.
விவசாயம் செய்ய பரோலில் வந்த கொலைக் 'குற்றவாளி!
சமீபத்தில் வெளியான செய்தி ஒன்று, இந்திய நீதித்துறையை மட்டுமல்லாமல், பொது மக்களையும் ஆச்சர்யத்தில் மூழ்கடித்துள்ளது.
நெல்ல பெயரை வாங்க வேண்டும் சாந்தினியே!
பதினான்கு வருடங்கள் பயணம், டெம்ப்ளேட் கேரக்டர்களில் சிக்காமல் வித்யாசமான கதாபாத்திரங்கள்... என தனது கரியரை நல்ல நடிகைக்கான பயணமாக கொண்டு சென்று கொண்டிருக்கிறார் சாந்தினி தமிழரசன்.
உலகின் முதல் செயற்கை கண்
பொதுவாக உலகில் அனைத்து பிரச்னைகளுக்குமே தீர்வு என்பது உண்டு. அதுவும் தொழில்நுட்பம் உச்சபட்சமாக முன்னேறியிருக்கும் இந்தக் காலத்தில் பல சிக்கல்களுக்கும் தீர்வுகள் எளிதாகவே கண்டறியப்படுகின்றன.
பி.வி.சிந்துவுக்கு டும்டும்டும்
இந்தியாவின் முன்னணி பாட்மிண்டன் வீராங்கனையான பி.வி.சிந்துவின் திருமணம் வரும் டிசம்பர் 20ம் தேதி உதய்ப்பூரில் நடைபெறுகிறது.
உங்க விஜய் to வடிலெக்ஸா...
‘‘அலெக்ஸா... நான் த்ரிஷா மாதிரி ஒரு பொண்ண கல்யாணம் செய்துக்க போறேன்..!’’
வருகிறார் முஃபாசா
உலகின் தலைசிறந்த பத்து அனிமேஷன் திரைப்படங்களில் ஒன்று, ‘த லயன் கிங்’.
சைபர் மோசடி...Data s மோசடி!
2024ம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இந்தியா ரூ.11,333 கோடி அளவுக்கு சைபர் மோசடி இழப்பை சந்தித்துள்ளதாக உள்துறை அமைச்சகத்தின் ஒரு பிரிவான இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.