இறந்த அப்பா என்கூட பேசாரதா தோணின கணத்துல இந்த படத்தை தயாரிக்கு முடிவு செய்தேன்! - அமலா பால் OpenTalk
Kungumam|12-08-2022
டாம் கேர்ள் லுக்,  ஹேர் ஸ்டைல், ஜீனியஸ் கண்ணாடி, சுற்றிலும் பிணங்கள், அதில் அமைதியாக அமர்ந்து சாப்பிடும் அமலா பால்... என 'கடாவர்' பட போஸ்டரே ஆயிரம் கேள்விகளை ஏற்படுத்துகின்றன.
ஷாலினி நியூட்டன்
இறந்த அப்பா என்கூட பேசாரதா தோணின கணத்துல இந்த படத்தை தயாரிக்கு முடிவு செய்தேன்! - அமலா பால் OpenTalk

இங்கே 'குட்டி ஸ்டோரி' கொடுத்துவிட்டு அப்படியே மலையாளம், தெலுங்கு, இந்தி என பிஸியாகிட்டீங்களே நியாயமா?

'ஆடை' படத்துக்குப் பிறகு முழுமையா நடிக்கக் கூடிய கதைக்காகக் காத்திருந்தேன். நிறைய கதைகள் கூட கேட்டுட்டு இருந்தேன். எனக்கு மொழி ஒரு விஷயம் இல்லை. கதையிலே நான் யார்... இதிலே நான் இம்ப்ரஸ் ஆகிட்டா நிச்சயம் அது 15 நிமிஷ படமானாலும் ஓகே சொல்லிடுவேன். அதனால்தான் 'குட்டி ஸ்டோரி’, ‘பிட்ட காதலு' மாதிரியான ஆந்தாலஜி படங்கள் கூட நடிச்சேன்.

இப்ப வாழ்க்கை எப்படி இருக்கு?

சந்தோஷமா இருக்கு, அமைதியா இருக்கேன், நிம்மதியா இருக்கேன். நான் என்னை நேசிக்கிறேன். சுதந்திரமா முடிவுகள் எடுக்கறேன். என்னைப்பத்தி நிறைய யோசிக்கிறேன். சின்ன வயசிலே இருந்தே என்னுடைய கனவு சினிமாதான். அதிலே எனக்குன்னு ஒரு தனித்துவத்தை உருவாக்கியிருக்கேன்.

எத்தனையோ தடைகள், பிரச்னைகள், சர்ச்சைகள்... அதற்கு இடையிலேயும் எப்படி படங்கள், வெப் சீரீஸ்கள் கொடுக்க முடிஞ்சது?

அத்தனை போராட்டங்களும், பிரச்னைகளும், சர்ச்சைகளும் இந்த நடிப்பு, சினிமா மேலே இருந்த ஆசையாலதானே.

அதை விட்டுட்டு என் பிரச்னைகளை மட்டுமே நான் பார்த்துட்டு இருந்தா எப்படி நான் நேசிக்கற சினிமாவிலே எனக்கான இடத்தை தக்க வெச்சுக்க முடியும். எத்தனை தடைகள் இருந்தாலும் நடிப்பை விட மாட்டேன். அதனால்தான் என் பயணம் எங்கேயும் நிற்கல.

‘கடாவர்' பெயர்க்காரணம் என்ன?

‘ஆடை’ கதைக்கு அப்படி ஒரு லுக்ல போஸ்டர், அப்படியான கவர்ச்சி தேவைப்பட்டது. இந்தப் படத்துக்கு முழுக்கவே இந்த லுக். இந்தப் படத்திலே என்னை பேன்ட் ஷர்ட்ல மட்டும்தான் பார்க்க முடியும்.

எனக்குத் தெரிஞ்சு அதீத கவர்ச்சி காட்டினாலும் ஆபாசம்னு சொல்ல முடியாத அளவுக்கு ‘ஆடை’ படலுக் அமைஞ்சது. அதேபோல ஒரு டாம் கேர்ள் கேரக்டர் செய்தாலும் லுக் செட் ஆனதுதான் ரொம்ப ஸ்பெஷலா உணர்றேன்.

சடலம், உயிரற்ற உடலைத் தான் 'கடாவர்'னு (Cadaver) சொல்வோம். ஃபாரன்சிக் டிபார்ட்மெண்ட்ல இது முக்கியமான வார்த்தை. படத்தினுடைய தீம் ஃபாரன்சிக் கான்செப்ட் தான். நிறைய உண்மைச் சம்பவங்களை அடிப்படையா வெச்சுதான் இந்தக் கதை உருவாகியிருக்கு.

Denne historien er fra 12-08-2022-utgaven av Kungumam.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

Denne historien er fra 12-08-2022-utgaven av Kungumam.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA KUNGUMAMSe alt
உலகின் பெரிய வீடு குஜராத்தில் இருக்கிறது!
Kungumam

உலகின் பெரிய வீடு குஜராத்தில் இருக்கிறது!

உலகிலேயே மிகப்பெரிய வீடு என்று சொன்னவுடனே அம்பானியின் வீடாக இருக்கும் அல்லது எலான் மஸ்க்கின் வீடாகத்தான் இருக்கும் என்று உறுதியாக நம்புவோம்.

time-read
1 min  |
30-08-2024
இந்தியாவின் முதல் சைபர் ஃபேன்டஸி ஹாரர்!
Kungumam

இந்தியாவின் முதல் சைபர் ஃபேன்டஸி ஹாரர்!

\"இந்தப் படம் முடியும்போது, உங்களுக்கு பக்கத்திலே இருக்க வங்க கிட்ட மொபைல் கொடுக்கவே தயங்குவீங்க...\" துவக்கத்திலேயே சற்று பயம் கொடுக்கிறார் அறிமுக இயக்குநர் பி. பிரவீன்குமார்.

time-read
1 min  |
30-08-2024
பி.டி.உஷாவாக மாளவிகா மோகனன்?
Kungumam

பி.டி.உஷாவாக மாளவிகா மோகனன்?

அப்படித்தான் தன் விருப்பத்தை பகிர்ந்திருக்கிறார் மாளவிகா மோகனன்.

time-read
1 min  |
30-08-2024
AC கும்மாங்குத்து!
Kungumam

AC கும்மாங்குத்து!

அண்ஷனல் எனர்ஜி நெட்வொர்க்கில் 'இன்டர் ஏஜென்சி' (IEA) என்ற உலகளாவிய அமைப்பு, ஏசி தொடர்பான ஓர் ஆய்வை வெளியிட்டுள்ளது.

time-read
1 min  |
30-08-2024
வாழ்கை ஓரு சினிமா
Kungumam

வாழ்கை ஓரு சினிமா

காலையில் ஹாஸ்பிட்டல் கிளம்பும் போதே நந்து வந்து கட்டிக்கொண்காணேச டான். 6.30 மணிக்கு தூக்கம் கூட சரியாகக் களையவில்லை. ஆனால், கண்ணைத் தேய்த்துக்கொண்டே, “அப்பா, இன்று ஈவினிங்...\" நிமிர்ந்து முகத்தைப் பார்த்தான்.

time-read
3 mins  |
30-08-2024
சோஷியல் மீடியா மீது வழக்கு!
Kungumam

சோஷியல் மீடியா மீது வழக்கு!

கனடாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஃபேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம், டிக் டாக் போன்ற சமூக வலைத்தளங்களின் மீது வழக்கு தொடுத்திருக்கிறார். அந்த இளைஞரின் பெயர் வெளியிடப்படவில்லை. அவரது வயது 24.

time-read
1 min  |
30-08-2024
ஏன் இப்படியே படம் எடுக்கறீங்க?
Kungumam

ஏன் இப்படியே படம் எடுக்கறீங்க?

எல்லாம் மாறிடுச்சு, படம் எடுத்துக்கிட்டே \"எல்லாம் மாறிடுச்சு, மாரி செல்வராஜ் என்கிற மனுஷன் யார்?\" இப்படியான கேள்விகளுக்கு பதில் தான் இந்த 'வாழை'...

time-read
3 mins  |
30-08-2024
பதிவான உங்கள் மீதான வழக்கை டிஜிட்டலாக அழிக்க முடியாவிட்டால் என்ன ஆகும்..?
Kungumam

பதிவான உங்கள் மீதான வழக்கை டிஜிட்டலாக அழிக்க முடியாவிட்டால் என்ன ஆகும்..?

நம் போன் நம்பர், வீட்டு முகவரி, பிறந்த தேதி, படித்த படிப்பு பற்றிய விபரங்களை ஒருவர் சல்லீசாக ஆன் லைன் தளங்களில் கண்டுபிடித்துவிடலாம்.

time-read
1 min  |
30-08-2024
எம்-பாக்ஸ் வைரஸ் ஆபத்தா?
Kungumam

எம்-பாக்ஸ் வைரஸ் ஆபத்தா?

ரங்கம்மை என்ற எம்-பாக்ஸ் (Monkeypox) நோய்த் தொற்றை குறித்துதான் உலக நாடுகள் அனைத்தும் அலறுகின்றன.

time-read
2 mins  |
30-08-2024
'ஹிண்டன்பர்க்...அதானி...செபி...
Kungumam

'ஹிண்டன்பர்க்...அதானி...செபி...

பங்குச் சந்தை, பரிவர்த்தனை, வர்த்தகம் என்றாலே அங்கு ஊழல் களும், ஏமாற்று வேலைகளும், பரபரப்புகளும் இருக்கும் என்பது எழுதப்படாத விதிபோல!

time-read
4 mins  |
30-08-2024