இந்த கடவுள் ஓவியங்களுக்காகவே அன்றைய வீடுகளில் காலண்டர்கள் வாங்கும் பழக்கமும் இருந்து வந்தது. ஆனால், நவீன டிஜிட்டல் யுகத்தில் அவையெல்லாம் காணாமல் போய்விட்டன.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் காலண்டர் ஓவியத்துக்கென தனித்துவமான பாணியை உருவாக்கி, இந்திய கலைஞர்களைத் திரும்பிப் பார்க்கச் செய்த ஓவியர்கள் இவர்கள்.
அதுமட்டுமல்ல. வட்டார தெய்வங்களைக் காலண்டர் ஓவியங்களாக ஆக்கிய பெருமைக்குரிய ஓவியர்களும் இவர்கள்தான். இவர்களின் ஓவியங்கள் எப்படி இருக்கும் என்பது அன்றைய தென்மாவட்ட மக்களுக்கே தெரியும்.
இப்போது இந்த ஓவியங்களை மீட்டெடுத்து அதை நிரந்தர ஆர்ட் கேலரியாக சென்னையில் காட்சிக்கு வைத்திருக்கிறார் ஜெயக்குமார்.
இவர், அன்று காலண்டர் ஓவியங்களில் ஜொலித்தவரும், ஓவியர் கொண்டையராஜுவின் பிரதான சீடர்களில் ஒருவருமான மு.ராமலிங்கத்தின் இளைய மகன். சென்னை ஆழ்வார்திருநகரில் ‘சித்ராலயம்’ என்ற பெயரில் இவர் திறந்திருக்கும் ஆர்ட் கேலரியில் சந்தித்தோம்.
‘‘2012ம் ஆண்டு பாண்டிச்சேரியில் பிரபல கலைஞர் சிற்பி ஜெயராமன், ‘சினிமா நூறு’னு ஒரு ஆர்ட் ஷோ பண்ணியிருந்தார். சினிமா சம்பந்தமாக நூறு போர்ட்ரைட்ஸ் வரைஞ்சு பார்வைக்கு வச்சிருந்தார். அதுக்கு நான் போயிருந்தேன். அங்க நடந்த வொர்க் ஷாப்ல கலந்துக்கிட்டேன்.
அப்பதான் நாமும் அப்பாவின் ஓவியங்களை ஷோவுக்கு வைக்கலாமேனு தோணுச்சு. ஏன்னா, காலண்டர் ஓவியங்கள், குறிப்பாக அன்றைக்கு மக்களால் நேசிக்கப்பட்ட கடவுள் ஓவியங்களை வைக்க ஒரு கலைக்கூடம் இங்கில்ல. அதை நாம் செய்வோம்னு நினைச்சேன்.
அப்படியாக ஆரம்பிச்ச கனவுப் பயணம், இப்ப பத்தாண்டுகளுக்குப் பிறகு நனவாகியிருக்கு...’’ என்றவர், இந்த ஓவியங்களைச் சேகரிக்க நிறைய அலைந்திருக்கிறார். ‘
‘இதை சேகரிக்கணும்னு நினைச்சதும் என் அண்ணன் சோமுகிட்ட, ‘இப்ப படங்கள் எதுவும் இல்லை. எல்லாமே வித்துட்டாங்க. என்ன செய்ய’னு கேட்டேன். அப்ப அண்ணன் சோமுதான், ‘அப்பா வரைஞ்ச பிரஸ்கள்ல போய் கேட்டால் கிடைக்கும்’னு நம்பிக்கையாகச் சொன்னார்.
Denne historien er fra 19-05-2023-utgaven av Kungumam.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra 19-05-2023-utgaven av Kungumam.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
உலகின் பெரிய வீடு குஜராத்தில் இருக்கிறது!
உலகிலேயே மிகப்பெரிய வீடு என்று சொன்னவுடனே அம்பானியின் வீடாக இருக்கும் அல்லது எலான் மஸ்க்கின் வீடாகத்தான் இருக்கும் என்று உறுதியாக நம்புவோம்.
இந்தியாவின் முதல் சைபர் ஃபேன்டஸி ஹாரர்!
\"இந்தப் படம் முடியும்போது, உங்களுக்கு பக்கத்திலே இருக்க வங்க கிட்ட மொபைல் கொடுக்கவே தயங்குவீங்க...\" துவக்கத்திலேயே சற்று பயம் கொடுக்கிறார் அறிமுக இயக்குநர் பி. பிரவீன்குமார்.
பி.டி.உஷாவாக மாளவிகா மோகனன்?
அப்படித்தான் தன் விருப்பத்தை பகிர்ந்திருக்கிறார் மாளவிகா மோகனன்.
AC கும்மாங்குத்து!
அண்ஷனல் எனர்ஜி நெட்வொர்க்கில் 'இன்டர் ஏஜென்சி' (IEA) என்ற உலகளாவிய அமைப்பு, ஏசி தொடர்பான ஓர் ஆய்வை வெளியிட்டுள்ளது.
வாழ்கை ஓரு சினிமா
காலையில் ஹாஸ்பிட்டல் கிளம்பும் போதே நந்து வந்து கட்டிக்கொண்காணேச டான். 6.30 மணிக்கு தூக்கம் கூட சரியாகக் களையவில்லை. ஆனால், கண்ணைத் தேய்த்துக்கொண்டே, “அப்பா, இன்று ஈவினிங்...\" நிமிர்ந்து முகத்தைப் பார்த்தான்.
சோஷியல் மீடியா மீது வழக்கு!
கனடாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஃபேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம், டிக் டாக் போன்ற சமூக வலைத்தளங்களின் மீது வழக்கு தொடுத்திருக்கிறார். அந்த இளைஞரின் பெயர் வெளியிடப்படவில்லை. அவரது வயது 24.
ஏன் இப்படியே படம் எடுக்கறீங்க?
எல்லாம் மாறிடுச்சு, படம் எடுத்துக்கிட்டே \"எல்லாம் மாறிடுச்சு, மாரி செல்வராஜ் என்கிற மனுஷன் யார்?\" இப்படியான கேள்விகளுக்கு பதில் தான் இந்த 'வாழை'...
பதிவான உங்கள் மீதான வழக்கை டிஜிட்டலாக அழிக்க முடியாவிட்டால் என்ன ஆகும்..?
நம் போன் நம்பர், வீட்டு முகவரி, பிறந்த தேதி, படித்த படிப்பு பற்றிய விபரங்களை ஒருவர் சல்லீசாக ஆன் லைன் தளங்களில் கண்டுபிடித்துவிடலாம்.
எம்-பாக்ஸ் வைரஸ் ஆபத்தா?
ரங்கம்மை என்ற எம்-பாக்ஸ் (Monkeypox) நோய்த் தொற்றை குறித்துதான் உலக நாடுகள் அனைத்தும் அலறுகின்றன.
'ஹிண்டன்பர்க்...அதானி...செபி...
பங்குச் சந்தை, பரிவர்த்தனை, வர்த்தகம் என்றாலே அங்கு ஊழல் களும், ஏமாற்று வேலைகளும், பரபரப்புகளும் இருக்கும் என்பது எழுதப்படாத விதிபோல!