ஆனால், இப்போது அதனுடன் ஒரு செயற்கை நுண்ணறிவும் சேர்ந்திருக்கிறது! ஆம். பிரபல தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், 'ஜெமினி' என்ற வலிமைமிக்க மல்டிமாடல் செயற்கை நுண்ணறிவை கடந்த வாரம் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஏற்கனவே ஓபன்ஏஐ நிறுவனம் சாட்ஜிபிடி என்ற ஏஐ மூலம் பல்வேறு பணிகளை எளிதாக சாத்தியமாக்கி வருகிறது. இந்நிலையில், கூகுள் இந்த ஏஐயை அறிமுகம் செய்துள்ளது.
இந்த சேவையானது நானோ, ப்ரோ, அல்ட்ரா (Nano, Pro, Ultra) ஆகிய மூன்று வடிவங்களில் கிடைக்கும் எனத் தெரிவித்துள் ளது. இதில் நானோவும், ப்ரோவும் செயல்பாட்டுக்கு வந்துள் ளன. அல்ட்ராவை அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்த இருப்ப தாகத் தெரிவித்துள்ளது கூகுள் நிறுவனம்.
இதில் 'ஜெமினி அல்ட்ரா' மிகப்பெரிய, திறமையான வகையைச் சார்ந்தது. 'ஜெமினி ப்ரோ' பரந்துபட்ட அளவிலான பணிகளைச் செய்கிறது. 'ஜெமினி நானோ' குறிப்பிட்ட பணிகள் மற்றும் மொபைல் சாதனங்களுக்குப் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஏஐ மூலம் நம் பணிகளை எல்லாம் எளிதாக்கிக் கொள்ளலாம்; எந்த ஒரு விஷயத்தையும் வேகமாகச் செய்யமுடியும்; எதிர்காலம் ஏஐ காலம் என்றெல்லாம் சொல்லப்பட்டுவரும் நிலையில் கூகுள் ஜெமினி முக்கியமான தாகப் பார்க்கப்படுகிறது. இது குறித்து ஏஐ நிபுணர் ஐ.எஸ்.ஆர் செல்வகுமாரிடம் பேசினோம்.
"மனித நுண்ணறிவு -அதாவது நாம் யோசிப்பது, கற்பனை செய்வது, படைப்பது உள்ளிட்ட இன்டலிஜென்ஸ் விஷயங்களை இயந்திரங்கள் மூலம் சாத்தியப்படுத்துவதே செயற்கை நுண்ணறிவு. இதைத்தான் ஓபன் ஏஐ நிறுவனம் சாட்ஜிபிடி மூலமும், கூகுள் நிறுவனம் ஜெமினி மூலமும் நமக்கு வழங்குகின்றன.
கூகுள் நிறுவனம் கடந்த 2000ம் ஆண்டில் இருந்தே இந்தச் செயற்கை நுண்ணறிவுக்கான பணிகளை முன்னெடுத்திட்டு வர்றாங்க. இதற்காக 'கூகுள் ப்ரைன்' (Google Brain), 'டீப் மைண்ட்' (Deep Mind)னு இரண்டு பிரிவுகளை உருவாக்கினாங்க.
இவை ஏஐ தொழில்நுட்பத்திற்கான ஆராய்ச்சிப் பிரிவுகள். ஒருகட்டத்துல இந்த ரெண்டு பிரிவுகளையும் இணைச்சாங்க.
இதுல டீப் மைண்ட் பிரிவில் சில முன்னேற்றங்களைக் கொண்டு வந்தாங்க. அதாவது, மோட்டார் ஸ்கில்ஸ்னு சொல்வோம். உட்கார்வது, எழுந்து போவது, நடப்பது, குதிப்பது, ஓடுவது... இதுபோல உடல் அசைவுகள் எல்லாம் மோட்டார் ஸ்கில்ஸ்ல வரும்.
Denne historien er fra 22-12-2023-utgaven av Kungumam.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra 22-12-2023-utgaven av Kungumam.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
ஹியூமன் வாஷிங் மெஷின்
மனிதர்கள் ஆயிரக்கணக்கான வருடங்களாக கையால்தான் துணிகளைத் துவைத்து வந்தனர்.
வீட்டை உடைக்கும் இளைஞர்!
‘‘யாரோ திருடர்கள் தங்களின் வீட்டுக் கதவுகளை உடைத்து உள்ளே புகுந்துவிட்டனர்; ஆனால், எந்தப் பொருளும் திருட்டுப் போகவில்லை...’’ என்று ஜப்பானின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேலானவர்கள் காவல்துறையிடம் புகார் தெரிவித்திருக்கின்றனர்.
ஏஐ டாய்லெட் கேமரா!
இந்தத் தலைப்பு உங்களை முகம் சுளிக்க வைக்கலாம்.
விவசாயம் செய்ய பரோலில் வந்த கொலைக் 'குற்றவாளி!
சமீபத்தில் வெளியான செய்தி ஒன்று, இந்திய நீதித்துறையை மட்டுமல்லாமல், பொது மக்களையும் ஆச்சர்யத்தில் மூழ்கடித்துள்ளது.
நெல்ல பெயரை வாங்க வேண்டும் சாந்தினியே!
பதினான்கு வருடங்கள் பயணம், டெம்ப்ளேட் கேரக்டர்களில் சிக்காமல் வித்யாசமான கதாபாத்திரங்கள்... என தனது கரியரை நல்ல நடிகைக்கான பயணமாக கொண்டு சென்று கொண்டிருக்கிறார் சாந்தினி தமிழரசன்.
உலகின் முதல் செயற்கை கண்
பொதுவாக உலகில் அனைத்து பிரச்னைகளுக்குமே தீர்வு என்பது உண்டு. அதுவும் தொழில்நுட்பம் உச்சபட்சமாக முன்னேறியிருக்கும் இந்தக் காலத்தில் பல சிக்கல்களுக்கும் தீர்வுகள் எளிதாகவே கண்டறியப்படுகின்றன.
பி.வி.சிந்துவுக்கு டும்டும்டும்
இந்தியாவின் முன்னணி பாட்மிண்டன் வீராங்கனையான பி.வி.சிந்துவின் திருமணம் வரும் டிசம்பர் 20ம் தேதி உதய்ப்பூரில் நடைபெறுகிறது.
உங்க விஜய் to வடிலெக்ஸா...
‘‘அலெக்ஸா... நான் த்ரிஷா மாதிரி ஒரு பொண்ண கல்யாணம் செய்துக்க போறேன்..!’’
வருகிறார் முஃபாசா
உலகின் தலைசிறந்த பத்து அனிமேஷன் திரைப்படங்களில் ஒன்று, ‘த லயன் கிங்’.
சைபர் மோசடி...Data s மோசடி!
2024ம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இந்தியா ரூ.11,333 கோடி அளவுக்கு சைபர் மோசடி இழப்பை சந்தித்துள்ளதாக உள்துறை அமைச்சகத்தின் ஒரு பிரிவான இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.