‘யூத்’, நாளை’, ‘மிளகா’, ‘கர்ணன்’, ‘சதுரங்கவேட்டை’, ‘பரினீதா’, ‘ராஞ்சனா’ உட்பட பல படங்களில் ஒளிப்பதிவாளராகவும் நடிகராகவும் தன் திறமையை வெளிப்படுத்தியவர். இப்போது இயக்குநர்கள் தேடும் நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். சமீபத்தில் இவர் நடித்த ‘பிரதர்’, ‘கங்குவா’ வெளியான நிலையில் நட்ராஜ் என்கிற நட்டியை சந்தித்தோம்.
வெற்றிகரமான கேமராமேனாகவும், நடிகராகவும் கால் நூற்றாண்டாக பயணம் செய்து வருகிறீர்கள். இப்போது உங்கள் வெற்றியை எப்படி எடை போட்டு பார்க்கிறீர்கள்?
இதுல எடை போடுறதுக்கு என்ன இருக்கு! வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர்கள், இயக்குநர்களுக்குதான் நன்றி சொல்லணும்.
இன்ட்ரஸ்ட்டிங்கான ரோல் இருந்துச்சுன்னா நட்டியை கூப்பிடுங்கன்னு நடிக்க வாய்ப்பு கொடுக்கிறாங்க. கேமராமேனா கடின உழைப்பு தேவைப்படும்போது நட்டியை கூப்பிடுங்கன்னு சொல்றாங்க. இது எல்லாமே கடவுள் கொடுத்தது.
எந்த வேலையிலும் கஷ்டம், சந்தோஷம் இருக்கும். கஷ்டத்தை தவிர்க்க முடியாது. கஷ்டப்பட்டால்தான் முன்னேற முடியும். அந்தவகையில் எனக்கு வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி.
ஒரு படத்தை உள் உணர்வுகளுடன் தேர்வு செய்வீர்களா அல்லது சினிமா கால்குலேஷன் ஏதேனும் இருக்கிறதா?
சினிமாவுல கால்குலேஷன் பண்ணி படம் பண்ண முடியாது. எல்லாவற்றுக்கும் கதை முக்கியம். கதையை எப்படி போர்ட்ரைட் பண்ணப்போகிறார்கள் என்பதைத்தான் பார்ப்பேன். அப்படி வந்த படங்கள்தான் ‘மிளகா’, ‘சதுரங்கவேட்டை’, மகாராஜா’, ‘கடைசி உலகப் போர்’.
அந்த வகையில் கதாபாத்திரம், கதை நடக்கும் காலகட்டம் பிடிக்கும்போது பண்ணுகிறேன். மக்கள் மத்தியில் சேர்ந்துவிடும்னு உள்ளுணர்வும் ஓரளவு சொல்லிவிடும். ப்ளாக் பஸ்டர் ஆவது இறைவன் அருள்.
எந்த நடிகருடன் நடிக்கும்போது கவனமாக இருப்பீர்கள்?
இங்கு வாய்ப்பு கிடைத்தவர்கள், கிடைக்காதவர்கள் என்ற வித்தியாத்தை தவிர மற்றபடி எல்லோரும் திறமைசாலிகள். கதாபாத்திரத்தை புரிஞ்சுக்கிட்டா தூள் கிளப்பிடுவாங்க. டவுட் வரும்போதுதான் கொஞ்சம் தடுமாறுவாங்க.
Denne historien er fra 22-11-2024-utgaven av Kungumam.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra 22-11-2024-utgaven av Kungumam.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
சென்னை வெள்ளத்தை தடுக்கும் சதுப்பு நிலங்கள்
‘என்னது கெணத்த காணோமா...’ போல சென்னையில் இருந்த 85 சதவீத சதுப்பு நிலங்கள் மாயமாக மறைந்திருப்பதாக வந்த அண்மைய செய்தி தீபாவளி அதிர்ச்சியாக இருந்தது.
அமெரிக்க துணை அதிபர் இந்தியாவின் மருமகன்!
யெஸ். பிரிக்க முடியாத விஷயங்களில் ஒன்றாக அமெரிக்க அரசியலில் இந்தியர்களின் பங்கு மாறி வருகிறது. அமெரிக்க அதிபர் தேர்தலில் அப்போதைய துணை அதிபரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் தோற்றிருக்கலாம். ஆனால், அதே நேரத்தில் அவருக்கு பதில் துணை அதிபர் தேர்தலில் வென்றிருக்கிறார் ஜேடி வான்ஸ். இவர் இந்தியாவின் மருமகன்!
அபோகலிப்ஸ் இஸட் த பிகினிங் ஆஃப் தி எண்ட்
‘அமேசான் ப்ரைமி’ல் நேரடியாக வெளியாகி, பார்வைகளை அள்ளிக்கொண்டிருக்கும் ஸ்பானிஷ் மொழிப்படம் இது. ஒரு சோலார் பவர் நிறுவனத்தை நடத்தி வருகிறார், வழக்கறிஞரான மேனல். ஒரு கிறிஸ்துமஸ் மாலைப் பொழுதில் உறவினர் வீட்டுக்குப் போய்விட்டு, திரும்பும் வழியில் ஏற்பட்ட விபத்தில் மேனலின் மனைவி இறந்துவிடுகிறார்.
கோலம்
‘அமேசான் ப்ரைமி’ல் வெளியாகி, பார்வைகளை அள்ளிக்கொண்டிருக்கும் மலையாளப்படம், ‘கோலம்’. தமிழ் டப்பிங்கில் காணக்கிடைக்கிறது.ஒரு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக இருக்கிறார் ஐசக் ஜான்.
தேவரா பாகம் ஒன்று
சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி, பட்ஜெட்டை விட இரண்டு மடங்கு அதிகமாக வசூலை அள்ளிய தெலுங்குப்படம், ‘தேவரா: பாகம் ஒன்று’. இப்போது ‘நெட்பிளிக்ஸி’ல் தமிழில் காணக்கிடைக்கிறது. இந்தியாவில் நடக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை சீர்குலைக்க ஒரு கும்பல் திட்டமிடுகிறது.
யோலோ
உலகளவில் 2024ம் வருடத்தில் அதிக வசூலைக் குவித்த படங்களின் பட்டியலில் ஏழாம் இடத்தைப் பிடித்துள்ளது, ‘யோலோ’ எனும் மாண்டரின் மொழிப்படம். சீனாவில் முதல் இடம்.
திரில்லர் + அமானுஷ்யம் = ககன மார்கன்
‘‘‘கவனக் குளிகை கொண்டு அதனாலே ககனமார்க்கந் தனிலே அகனமாய்ச்சென்று தவமுறு மா சித்தர்கள் வாழ்கின்ற சதுரகிரிக்குப் போய் குதூகலித்தேன்’ - ‘மாயா மச்சிந்திரா’ என்று செல்லமாக அழைக்கப்படும் மச்சேந்திர சித்தர் எழுதிய பாடல் இது. அந்தப் பாடலில் இருந்துதான் இந்த ‘ககன மார்கன் ’ங்கிற பெயர்...’’ எனத் தொடங்கினார் இயக்குநர் மற்றும் எடிட்டர் லியோ ஜான் பால்.
ரசிகர்கள் எப்போதும் ஸ்மார்ட்! சொல்கிறார் நவீன் சந்திரா
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிசியாக இருப்பவர் நவீன் சந்திரா.
இரண்டு நான்கு கேட்டால் கிடைக்கும்!
ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்ராஜ், கோலிவுட் முதல் பாலிவுட் வரை புகழ் பெற்றவர். ஆனால், எளிமையாக, யதார்த்தமாகப் பழகக்கூடியவர். அவருடைய மென்மையான வார்த்தைகள் கடினமான மனிதர்களையும் கரைய வைத்துவிடும்.
மணிரத்னம் என்னைப் பாராட்டவே இல்லை..
‘பொன்னியின் செல்வன்’ பூங்குழலி கதாபாத்திரத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்கமாட்டார்கள். அகமும் முகமும் மகிழ்ச்சி கொப்பளிக்க அதில் நடித்தவர் ஐஸ்வர்யா லட்சுமி.