சென்னை, அக்.31: தீபாவளி பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நேற்று காலை முதல் கடைகளில் துணிகள், பட்டாசுகள், சுவீட்ஸ் விற்பனை களாகியது. இதனால் பஜார் வீதிகள் திக்குமுக்காடியது.
பஸ், ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. சென்னையில் இருந்து மட்டும் பஸ், ரயில், கார், விமானம் மூலம் சுமார் 15 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.
தீபாவளி பண்டிகை இன்று வழக்கமான உற்சாகத்துடன் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தீபாவளியை பொதுமக்கள் புத்தாடை உடுத்தியும், பட்டாசுகள் வெடித்தும், நண்பர்கள்-விருந்தினர்களுக்கு இனிப்புகளை வழங்கியும் கொண்டாடுவது வழக்கம்.
இந்த நிலையில் தீபாவளி புத்தாடை உள்ளிட்ட பொருட்கள் விற்பனை கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழகம் முழுவதும் உள்ள கடைகளில் முழு வீச்சில் நடைபெற்று வந்தது. மேலும், பண்டிகைக் கால பல்வேறு சிறப்பு தள்ளுபடிகளும் அறிவிக்கப் பட்டிருந்தது.
தீபாவளிக்கு முந்தைய நாளான நேற்று தமிழகம் முழுவதும் விற்பனை மேலும் அதிகரித்து காணப் பட்டது. சென்னையை பொறுத்தவரை தியாகராயநகர், புரசைவாக்கம், மயிலாப்பூர், வண்ணாரப் பேட்டை, பிராட்வே, தாம்பரம், குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் காலை முதலே கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதே நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பொருட்கள் இறுதிக் கட்டப் பர்சேஸில் மக்கள் ஈடுபட்டனர். இதுமட்டுமின்றி, ஆந்திரா, புதுச்சேரி, கர்நாடகா போன்ற பகுதிகளில் இருந்தும் மக்கள் அதிகமாக சென்னைக்கு ஜவுளிகளை வாங்க வந்த காட்சியை காண முடிந்தது.
இதனால் நேரம் ஆக ஆக கூட்டம் வழக்கத்தை விட இரட்டிப்பாக காணப்பட்டது. மாலை நேரத்தில் இன்னும் கூட்டம் அதிகரித்தது. மாலை 4 மணிக்கு மேல் மழை பெய்தாலும் அதை பொருட்படுத்தாமல் கடை வீதிகளில் எங்கு திரும்பினாலும் மக்கள் தலைகளாக காட்சியளித்தது. அந்த அளவுக்கு பஜார் வீதிகள் திக்குமுக்காடியது.
Denne historien er fra October 31, 2024-utgaven av Dinakaran Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra October 31, 2024-utgaven av Dinakaran Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்த பிரபல தனியார் உணவக சிக்கனில் புழு
சென்னை போரூர் அடுத்த காரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன்.
எலும்பு கூடாக காட்சியளிக்கும் மின்கம்பங்கள் மாற்றப்படுமா?
பொன்னேரி அடுத்த, பழவேற்காடு மீன் மார்க்கெட் பகுதியில் உள்ள லைட் ஹவுஸ் மேம்பாலம் அருகே பல வருடங்களுக்கு முன்பு மின்கம்பங்கள் அமைக்கப்பட்டன.
அண்ணா பிறந்தநாள் மாரத்தான் போட்டி
அமைச்சர் நாசர் தொடங்கி வைத்தார்
திருவள்ளூர் மாவட்டத்தில் ஒன்றிய அரசு திட்டப் பணிகள் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது
திருவள்ளூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறையின் கீழ் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை ஒன்றிய அரசின் ஊரக வளர்ச்சி துறை இயக்குனர் ஆய்வு நடத்தினார்.
குண்டும் குழியுமான மாநில நெடுஞ்சாலை
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிப்பட்டு அருகே, கொசத்தலை ஆற்றிலிருந்து நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ₹45 கோடி மதிப்பீட்டில் 6 நீர் உறிஞ்சி கிணறுகள் அமைத்து, பைப் லைன்கள் மூலம் தினமும் 2.76 பில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட உள்ளது.
கிண்ணத்தில் எண்ணெய் கொடுத்து கன்னத்தில் தடவ சொல்லி பெண்ணிடம் அத்துமீறல்
ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சிறையில் அடைப்பு
எஸ்ஆர்எம் வேளாண் அறிவியல் கல்லூரியில் நடந்த கூடைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள எஸ்ஆர்எம் வேளாண் அறிவியல் கல்லூரியில் மண்டல அளவில் நடைபெற்ற கூடைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோப்பைகள் மற்றும் ஊக்க பரிசு தொகை வழங்கப்பட்டது.
சிறுவர்களை பாதிக்கும் நுரையீரல் தொற்று
உலகம் முழுவதும் பருவநிலை மாற்றத்தால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது.
இடைக்கழிநாடு பேரூராட்சியில் வரும் 12ம் தேதி பொங்கல் திருவிழா நலத்திட்ட உதவிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார்
காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில், பொங்கல் விழா மற்றும் ஐந்தாயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இடைக்கழிநாடு பேரூராட்சிக்குட்பட்ட கப்பிவாக்கம் கிராமத்தில் இசிஆர் சாலையையொட்டி வரும் 12ம் தேதி காலை நடைபெற உள்ளது.
13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை
பதிமூன்று வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கார் டிரைவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.