
விமர்சனங்களை பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து மக்கள் பணியாற்றுவோம்’ என்று தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசின் சார்பில் நிறைவேற்றப்படும் மக்கள் நலத்திட்டங்கள் மக்களுக்கு முழுமையாக சென்றடைகிறதா? என்பதை கள ஆய்வை செய்யவும், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் கோவை சென்றார்.
அதன்படி, மாவட்டம் வாரியாக கள ஆய்வை நேற்று முன்தினம் கோவையில் தொடங்கினார். அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம், பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள், தங்க நகைப்பட்டறைகளில் தொழிலாளர்களுடன் சந்திப்பு, சிட்கோ தொழிற்பேட்டை தொழிலாளர் விடுதி கட்டுமான பணிகள் ஆய்வு மற்றும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய திட்டத்திற்கான நிலமெடுத்தல் நடவடிக்கைகள் திரும்ப பெறப்பட்டதால் 468.89 ஏக்கர் நிலங்களுக்கு விலக்களித்து, அதற்கான விடுவிப்பு ஆணைகளை நில உரிமையாளர்களுக்கு வழங்கினார். மேலும் கோவை விளாங்குறிச்சியில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் ரூ158.32 கோடியில் கட்டப்பட்ட தகவல் தொழில்நுட்ப பூங்கா கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். முதல்நாளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் இரவு அரசு விருந்தினர் மாளிகையில் தங்கினார்.
2ம் நாளான நேற்று காலை 9.30 மணிக்கு கோவை காந்திபுரத்தில் ரூ133.21 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் செம்மொழி பூங்கா கட்டுமான பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் கோவை காந்திபுரம் டவுன் பஸ் நிலையம் அருகே மத்திய சிறைக்கு சொந்தமான 6.9 ஏக்கர் காலியிடத்தில் தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வி துறை சார்பில், ரூ300 கோடி மதிப்பீட்டில் தரைத்தளம் சேர்த்து 8 தளங்களுடன் 1 லட்சத்து 98 ஆயிரம் சதுர அடியில் அமைக்கப்பட உள்ள பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையத்திற்கு அடிக்கல் நாட்டி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
Denne historien er fra November 07, 2024-utgaven av Dinakaran Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra November 07, 2024-utgaven av Dinakaran Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på

பூந்தமல்லி வரை இருப்பதை நீட்டித்து மெட்ரோ ரயில் சேவை திருவள்ளூர் வரை வேண்டும்
சட்டமன்ற பேரவை கூட்டத்தில் திருவள்ளூர் எம். எல். ஏ. வி. ஜி. ராஜேந்திரன் பேசியதாவது:

ஊத்துக்கோட்டையில் விபத்து தடுப்பது குறித்து ஹெல்மெட் விழிப்புணர்வு
ஊத்துக்கோட்டை பேரூ ராட்சியில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
தறிகெட்டு வந்த கார் மோதி 4 பேர் படுகாயம்
டிரைவர் மீது வழக்கு

பிளஸ் 2 பொதுத் தேர்வு நிறைவு மாணவ- மாணவிகள் உற்சாகம்
தமிழ்நாட்டில் இம்மாதம் 3ம் தேதி முதல் பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடங்கி நடைபெற்று வந்தது. இதனால், பிளஸ் 2 மாணவ, மாணவியர் படிப்பில் தீவிர கவனம் செலுத்தி வந்தனர்.
மயக்க மருந்து கலந்த இனிப்பு கொடுத்து பயணிகளிடம் நகைகள் திருடிய இருவர் கைது
மயக்க மருந்து கலந்த இனிப்புகள் கொடுத்து பேருந்தில் பயணிக்கும் மூதாட்டிகளிடம் நகைகள் திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
தாய்ப்பால் கொடுத்தபோது மூச்சு திணறி குழந்தை பலி
தாய்ப்பால் கொடுத்த போது மூச்சுத் திணறி, பச்சிளம் குழந்தை பரிதாபமாக பலியான சம்பவம் திருத்தணி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

பெரியபாளையம், தண்டலம், சூளைமேனி பகுதியில் சேதமான சென்டர் மீடியன்களால் வர்கன விபத்துகள் அதிகரிப்பு
நெடுஞ்சாலைத்துறை சீரமைக்க கோரிக்கை
தமிழகத்தில் மத நல்லிணக்கம் சிறப்பாக உள்ளது உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பெருமிதம்
நீதிபதிகள் பங்கேற்ற இப்தாரில் பேச்சு
வங்கி லாக்கரில் வைத்திருந்த 44 சவரன் நகைகள் மாயம்
வங்கி ஊழியர் பரபரப்பு புகார்
அதிமுக பூத் கமிட்டி கள ஆய்வு கூட்டம்
திருவள்ளூர் வடக்கு மாவட்டம், பூண்டி ஒன்றியம் மெய்யூர், மாமண்டூர், வேளகாபுரம், தேவந்தவாக்கம் மற்றும் பென்னாலூர்பேட்டை ஊராட்சிகளில் அதிமுக பூத் கமிட்டிகள் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.