மகாராஷ்டிரா மாநில முதல்வராக 3வது முறையாக தேவேந்திர பட்நவிஸ் பதவியேற்றுக் கொண்டார். துணை முதல்வர்களாக ஏக்நாத் ஷிண்டேயும், அஜித்பவாரும் பதவியேற்றுக் கொண்டனர். இவர்களுக்கு ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். விழாவில், பிரதமர் மோடி, பாஜ மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
மகாராஷ்டிராவில் பாஜ, சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய ஆளும் மகாயுதி கூட்டணி 235 இடங்களில் வெற்றி பெற்றது. இருப்பினும், முதல்வர் யார் என முடிவு செய்யாததால், புதிய அரசு பதவியேற்கவில்லை. தேர்தல் முடிவு வெளியாகி 12 நாள் இழுபறிக்குப் பிறகு, நேற்று முன்தினம் நடந்த பாஜ எம்எல்ஏக்கள் கூட்டத்தில், அந்த கட்சியின் சட்டமன்ற தலைவராக தேவேந்திர பட்நவிஸ் தேர்வு செய்யப்பட்டார். அவர் முதல்வராக பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டது. இந்த கூட்டணியில் தேசியவாத காங்கிரஸ் அஜித்பவார் துணை முதல்வர் பதவிக்கு ஏற்கனவே சம்மதம் தெரிவித்து விட்டார். ஆனால், ஷிண்டேயிடம் நிருபர்கள் இது பற்றி கேட்டபோது, ‘‘காத்திருங்கள், சொல்கிறேன்’’ என்றார்.
இதனால், ஷிண்டே துணை முதல்வர் பதவியை ஏற்பாரா என்ற கேள்விக்கான பதில் மர்மமாகவே இருந்தது. ஷிண்டே முதல்வர் பதவிதான் வேண்டும் என நெருக்கடி கொடுத்ததாகவும், அவ்வாறு முதல்வர் பதவி அவருக்குத் தரப்படவில்லை என்றால், தனது மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டேவுக்கு முதல்வர் பதவியை வழங்க வேண்டும் என நிபந்தனை வைத்ததாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், துணை முதல்வர் பதவிக்கு ஆசைப்படவில்லை என, ஸ்ரீகாந்த் ஷிண்டே தெளிவுபடுத்தி விட்டார்.
Denne historien er fra December 06, 2024-utgaven av Dinakaran Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra December 06, 2024-utgaven av Dinakaran Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
நடுக்குத்தகை பகுதியில் மாணவர்கள், பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள்
அமைச்சர் நாசர் வழங்கினார்
திருத்தணியில் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேம்படுத்தப்படும்
அமைச்சர் ராஜேந்திரன் உறுதி
கும்மிடிப்பூண்டி இலங்கை அகதிகள் மறுவாழ்வு மையத்தில் தரமற்ற எம்சாண்ட் மூலம் வீடுகள் கட்டப்படுகிறதா?
• முகாம் நிர்வாகிகள் புகார் நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி
குப்பை மேடாக காட்சியளிக்கும் பள்ளிப்பட்டு விஏஓ அலுவலகம்
நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பள்ளி மாணவர்களுக்கு எம்எல்ஏ இனிப்பு வழங்கினார்
தமிழ்நாடு துணை முதலமைச்சர் இளைஞர் அணி அமைப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் 48வது பிறந்தநாள் முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று முசரவாக்கம் கிராமத்தில் நடைபெற்றது.
ஈச்சங்கரணையில் மழை வெள்ளத்தால் சேதமான தரைப்பாலம்
புதிதாக உயர்மட்ட பாலம் கட்டித்தர கோரிக்கை
திருக்கச்சூர் மலைமேல் தீபம் ஏற்ற சிவன் கோயிலில் திரி தயாரிக்கும் பணி தீவிரம்
திருக்கச்சூர் மலைமேல் தீபம் ஏற்ற சிவன் கோயி லில் திரி தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கூடுவாஞ்சேரியில் துணை முதல்வர் பிறந்தநாள் விழா 200 தொகுகளில் திமுக வெற்றி பெற தொண்டர்கள் களப்பணியாற்ற வேண்டும்
அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு
மாமல்லபுரம் மரகத பூங்காவில் 36 கோடியில் நடைபெற்று வரும் ஒளிரும் தோட்டம் அமைக்கும் பணிகளை உறுதிமொழி குழு ஆய்வு
மாமல்லபுரம் உலக புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக திகழ்ந்து வருகிறது.
திருவொற்றியூர் பகுதியில் வீட்டுக்குள் கஞ்சா பதுக்கிய கணவன்,மனைவி கைது
வியாபாரம் செய்த மேலும் 3 பேர் சிக்கினர்