மேலும் அவர் கூறுகையில், பாதிக்கப்பட்ட மாணவியை போல், இதுபோன்று மற்ற குற்றங்கள் நடந்தாலும் தைரியமாக புகார் அளிக்க முன்வர வேண்டும். அதன் மீது உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் போலீஸ் கமிஷனர் அருண் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த 24ம் தேதி மாலை 4 மணிக்கு காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு 100க்கு ஒரு அழைப்பு வருகிறது. அதில் அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவி ஒருவர் புகார் அளித்தார். அந்த அழைப்பின் படி, போலீசார் குழு அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சென்றது. அங்கு கல்லூரியில் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு குழுவில் உள்ள பேராசிரியர் மற்றும் பாதிக்கப்பட்ட மாணவி ஆகியோர் புகார் அளித்தனர். அவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் எப்ஐஆர் பதியப்பட்டது.
முதல் தகவல் அறிக்கையில் பாதிக்கப்பட்டவர் என்ன கொடுக்கிறார்களோ அதை அப்படியே எழுத வேண்டும். அதில் போலீஸ் எந்த திருத்தமும் செய்யக் கூடாது. சிலர் தெரியாமல் சொல்கிறார்கள். பாதிக்கப்பட்டவர் எப்படி புகார் கொடுக்கிறார்களோ அதை அப்படியே பதிய வேண்டும். அதன்படிதான் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. எப்ஐஆர் பதிவு செய்த உடனே கோட்டூர்புரம் உதவி கமிஷனர் பாரதிராஜா தலைமையில் 4 தனிப்படைகள் அமைத்து, ஒவ்வொருவருக்கும் ஒரு பணி கொடுத்து விசாரிக்கிறோம். சந்தேகிக்கப்பட்ட நபர்கள் சிலரை கொண்டு வந்து விசாரித்தோம்.
அதன்படி அறிவியல் பூர்வமான ஆதாரங்களை சேகரித்து, டவர் லோக்கேஷன் எல்லாம் எடுத்து அடுத்த நாள் காலையில், அதாவது 25ம் தேதி காலையிலேயே குற்றவாளியை பிடித்துவிடுகிறோம். பிடித்ததற்கு பிறகு அவன்தான் குற்றத்தை செய்தானா என்று உறுதிபடுத்துவதற்கு மேலும் சில விசாரணை நடத்தினோம். குற்றம் உறுதி செய்யப்பட்ட பிறகு அவனை கைது செய்து சிறையில் அடைக்கிறோம். இதுதான் இந்த வழக்கைப் பொருத்தவரைக்கும் நடந்தது.
எப்ஐஆர் இதுபோன்ற வழக்கில் வெளியே வரக்கூடாது. வெளியே கசியவிடக் கூடாது. அப்படி செய்தால் இது சட்டப்படி குற்றம்.
Denne historien er fra December 27, 2024-utgaven av Dinakaran Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra December 27, 2024-utgaven av Dinakaran Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
6.10 லட்சம் பரிவர்த்தனைகளில் சந்தேகம் 90 நாட்களில் ₹1,800 கோடி ஆன்லைன் மோசடிகளை தடுத்து நிறுத்திய இந்தியா
சத்தமின்றி சாதித்த தேசிய சைபர் கிரைம் பிரிவு
6 நாளாக எரியும் காட்டுத்தீ லாஸ் ஏஞ்சல்சில் பலி 24 ஆக அதிகரிப்பு
மீண்டும் இன்று முதல் பேய் காற்று வீசும் என்கிற எச்சரிக்கையால் பீதி
மாநிலங்களவையில் கிடைத்த ரூபாய் நோட்டுக்கு யாரும் உரிமை கோராதது வேதனை
துணை ஜனாதிபதி பேச்சு
ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் ஜோகோவிச், சின்னர் வெற்றி
ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் முதல் சுற்றுப் போட்டிகளில் நேற்று மகளிர் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் கோகோ காப், போலந்தின் இகா ஸ்வியடெக், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இத்தாலியின் ஜேனிக் சின்னர், செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் வென்று 2ம் சுற்றுக்கு முன்னேறினர்.
1.75 லட்சம் பேருக்கு ஹஜ் பயண அனுமதி
சவுதியுடன் இந்தியா ஒப்பந்தம்
பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் வளமும், நலமும் பெற்று மக்கள் மகிழ்வுடன் வாழ வேண்டும்
அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து
சேலத்தில் ₹565 கோடியில் விலங்கின அறிவியல் ஆராய்ச்சி நிலையம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
தமிழ்நிலத்தின் தனித்துவம் சொல்லும் தைப்பொங்கல்
மனித குலத்திற்கு உணவளித்து உயிர் வளர்க்கும் ஒப்பற்ற பணியை செய்பவர்கள் உழவர் பெருமக்கள். அவர்கள் தங்களது உழைப்பிற்கு உதவி இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும் மகிழ்வோடு நன்றி தெரிவிக்கும் நாளே ‘தை பொங்கல் திருநாள்.’
புதுச்சேரி கல்லூரியில் காதலனை தாக்கிவிட்டு வடமாநில மாணவி கூட்டு பலாத்கார முயற்சி
3 பேர் கும்பல் வெறிச்செயல்
வட தமிழகத்தின் கதை தோற்றம்
இள பரத் நாயகனாக அறிமுகமாகும் புதிய திரைப்படம் இளங்கோ சினி கிரியேஷன்ஸ் வழங்கும் ‘தோற்றம்’.