பாகிஸ்தானில் கடந்த 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தோ்தலுக்குப் பிறகு, தெஹ்ரீன்-ஏ-இன்சாஃப் (பிடிஐ) கட்சியின் தலைவரும், முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரமுமான இம்ரான் கான் தலைமையில் கூட்டணி அரசு அமைந்தது.
எனினும், நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் இம்ரான் கான் தோல்வியடைந்து, பிரதமா் பதவியை இழந்தாா்.
அதற்குப் பிறகு, பாகிஸ்தானின் பல்வேறு நீதிமன்றங்களில் இம்ரான் கான் மீது ஊழல் முதல் தேசத் துரோகம், பயங்கரவாதம் வரை பல்வேறு குற்றப் பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
அந்த வழக்குகளில் அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பல கைது ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
இருந்தாலும், போலீஸாரால் கைது செய்யப்படுவதிலிருந்து இம்ரான் கான் தொடா்ந்து தப்பி வந்தாா். நீதிமன்றங்களில் ஜாமீன் பெறுவதால் மட்டுமின்றி, இம்ரானைக் கைது போலீஸாா் கைது செய்யவிடாமல் அவரது இல்லத்தைச் சுற்றிலும் பிடிஐ கட்சி ஆதரவாளா்கள் கலவரத்தில் ஈடுபட்டு வந்ததாலும் அவரைக் கைது செய்ய முடியாத நிலை நீடித்து வந்தது.
இந்த நிலையில், இஸ்லாமாத் உயா்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இரு ஊழல் வழக்குகளில் ஜாமீன் பெறுவதற்காக இம்ரான் கான் நீதிமன்ற வளாகத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்தாா்.
இந்த நிலையில், யாரும் எதிா்பாராத விதமாக அவரை தேசிய ஊழல் தடுப்புப் பிரிவினா் அந்த வளாகத்தில் கைது செய்தனா். அவா்களுக்கு ஆதரவாக பாகிஸ்தான் துணை ராணுவப் படையான ரேஞ்சா்களும் இம்ரானை சுற்றிவளைத்து கவச வாகனத்தில் ஏற்றினா்.
Denne historien er fra May 10, 2023-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra May 10, 2023-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
தமிழ்நாடு கிராம வங்கியில் புதிய வைப்பு நிதி திட்டம் தொடக்கம்
கோவை, நவ. 15: தமிழ்நாடு கிராம வங்கியில் 'அற்புதம் 555' என்ற பெயரில் புதிய வைப்பு நிதி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
தஞ்சை பெரிய கோயிலில் அன்னாபிஷேகம்
தஞ்சாவூர், நவ. 15: தஞ்சாவூர் பெரிய கோயிலில் ஐப்பசி மாத பௌர்ணமியையொட்டி, பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது (படம்).
லி.ஜி.பாலச்ப்பிரமணியம், நாகநாத தேசிகருக்கு தமிழ் இரைர் ரங்க விருதுகள் அறிலிப்பு
தமிழ் இசைச்சங்கத்தின் இசைப் பேரறிஞர் பட்டம் தவில் இசைக்கலைஞர் வேதாரண் யம் வி.ஜி.பாலசுப்பிரமணி யத்துக்கும், பண் இசைப்பேர றிஞர் பட்டம் மயிலை ௯.நாக நாத தேசிகருக்கும் வழங்கப்ப டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உண்மையான எழுத்தே சமுதாய நலனுக்கு தேவை
ராம்நாத் கோயங்கா விருது விழாவில் சுவாமி ஸ்வரூபானந்தஜி
ஜெயங்கொண்டத்தில் ரூ.1,000 கோடியில் காலணி உற்பத்தி தொழிற்சாலை
முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
சிட்னி, நவ. 15: பப்புவா நியூ கினியாவில் வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
அமெரிக்கா: சுகாதார அமைச்சர் நியமனத்துக்கு எதிர்ப்பு
வாஷிங்டன், நவ. 15: அமெரிக்காவின் அடுத்த சுகாதாரத்துறை அமைச்சராக, முன்னாள் அதிபர் ஜான் எஃப். கென்னடியின் உறவினர் ராபர்ட் எஃப். கென்னடியை (ஜூனியர்) டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
பருவநிலை மாநாடுகளால் இனி பலன் இல்லை!!
'பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்காக ஐ.நா. நடத்திவரும் மாநாடுகளால் இனி எந்தப் பலனும் ஏற்படப்போவதில்லை' என்று நிபுணர்களும், முக்கியத் தலைவர்களும் எச்சரித்துள்ளனர்.
ஐ.நா. மொழியாக தமிழை கொண்டு வருவதே இலக்கு!
உலகத் தமிழர் பொருளாதார மாநாட்டில் வலியுறுத்தல்
டி20: சகிப், சாம் அசத்தலில் இங்கிலாந்து வெற்றி
மே.இ. தீவுகளுடனான தொடரை கைப்பற்றியது