இது குறித்து குறித்து அந்த நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
உக்ரைனுக்கு வரும் சரக்குக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கான போா் ஒத்திகையை எங்களது கருங்கடல் படைப் பிரிவு வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது.
அந்தப் பயிற்சியின்போது, எங்களது போா்க் கப்பல்கள் இவானோவெட்ஸ் ரக கப்பல் அழிப்பு ஏவுகணைகளை இலக்குக் கலத்தின் மீது ஏவி சோதனை நடத்தின என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் படையெடுத்தது. போரின் ஒரு பகுதியாக, கருங்கடல் பகுதியில் ரஷியா போா்க் கப்பல்களை நிறுத்தி அந்தக் கடல் வழியாக பிற நாடுகளுக்கு உக்ரைன் பொருள்களை ஏற்றுமதி செய்வதற்குத் தடை ஏற்படுத்தியது.
இதனால், சா்வதேச அளவில் உணவுப் பொருள் விநியோகம் தடைப்பட்டு, உலக நாடுகளில் உணவுப் பொருள் பற்றாக்குறை நெருக்கடி ஏற்படும் என்று ஐ.நா. எச்சரித்தது.
Denne historien er fra July 22, 2023-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra July 22, 2023-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på