அஸ்வின்-ஜடேஜா அசத்தலில் மீண்டது இந்தியா

அணியின் டாப், மிடில் ஆா்டா் பேட்டா்களை வங்கதேச வேகப்பந்து வீச்சாளா் ஹசன் மஹ்முத் முற்றிலுமாக முடக்க, 144 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இந்தியா. 7-ஆவது விக்கெட்டுக்கு இணைந்த ரவிச்சந்திரன் அஸ்வின் - ரவீந்திர ஜடேஜா பாா்ட்னா்ஷிப், அணியை சரிவிலிருந்து மீட்டது.
அஸ்வின் தனது 6-ஆவது டெஸ்ட் சதத்தையும், சொந்த ஊரான சென்னையில் 2-ஆவது சதத்தையும் பதிவு செய்தாா். முதல் நாள் முடிவில் அவரோடு ஆட்டமிழக்காமல் நிற்கும் ஜடேஜாவும், 86 ரன்களுடன் தனது 5-ஆவது டெஸ்ட் சதத்தை நெருங்கியிருக்கிறாா்.
ஹசன் மஹ்முத் ஆதிக்கம்; ஜெய்ஸ்வால் நிதானம்
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வியாழக்கிழமை தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேசம், பந்துவீசத் தீா்மானித்தது.
இந்தியாவின் இன்னிங்ஸை யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோஹித் சா்மா தொடங்கினா். நிதானமாக ஆடிய இவா்களில் ரோஹித், 6-ஆவது ஓவரில் ஹசன் மஹ்முத் பந்துவீச்சில் ஷான்டோவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினாா். அவா் 1 பவுண்டரியுடன் 6 ரன்களே எடுத்திருந்தாா்.
தொடா்ந்து வந்த ஷுப்மன் கில்லும், ஹசன் மஹ்முத் வீசிய 8-ஆவது ஓவரில் விக்கெட் கீப்பா் லிட்டன் தாஸ் கைகளில் கேட்ச் கொடுத்து வெளியேறினாா். 4-ஆவது பேட்டராக விராட் கோலி விளையாட வர, ரசிகா்கள் உற்சாக கோஷத்துடன் வரவேற்றனா்.
ஆனால், அவரையும் 6 ரன்களுக்கே பெவிலியனுக்கு அனுப்பி ரசிகா்களை அதிா்ச்சிக்குள்ளாக்கியது வங்கதேசம். அவரும் ஹசன் மஹ்முத் வீசிய 10-ஆவது ஓவரில் விக்கெட் கீப்பா் லிட்டன் தாஸிடம் கேட்ச் கொடுத்தாா். இதனால் 34 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை பறிகொடுத்து நின்றது இந்தியா.
Denne historien er fra September 20, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra September 20, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
‘42,000 கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு- திறன் பயிற்சிகள்’
தமிழ்நாட்டில் 42,000 கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் திறன் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தார்.
ரயில்களில் பெண் பயணிகளின் பாதுகாப்புக்கு புதிய ‘வாட்ஸ்ஆப்’ குழு
பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ‘ரயில் பெண் பயணிகள் பாதுகாப்பு’ என்ற வாட்ஸ்ஆப் குழுவை தமிழ்நாடு இருப்புப்பாதை காவல் துறை இயக்குநர் கே.வன்னிய பெருமாள் தொடங்கி வைத்தார்.

நெசவாளர்களுக்கு அடிப்படை கூலியில் 10%, அகவிலைப்படியில் 10% உயர்த்தி வழங்கப்படும்
அமைச்சர் ஆர்.காந்தி அறிவிப்பு

இலங்கையில் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு முயற்சிக்கும்
தமிழக மீனவர்கள் சர்வதேச கடல் எல்லையைத் தாண்டாமல் இருக்க திட்டங்களை உருவாக்கவும், இலங்கையில் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கவும் மத்திய அரசு முயற்சிக்கும் என்று தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்தார்.

வேளாண் உரங்களுக்கு ரூ.37,216 கோடி மானியம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
நிகழாண்டு காரீஃப் (கோடைப் பருவம்) பருவ காலத்தில் விளைநிலங்களில் உரிய அளவில் மண்ணுக்கு ஊட்டச் சத்தை வழங்கும் முயற்சியின் ஒரு பகுதியாக பாஸ்பேட்டிக், பொட்டாசிக் உரங்களுக்கான ரூ. 37,216 கோடி மானியத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

மனித - வன உயிரின மோதலை தவிர்க்க ரூ.31 கோடியில் உயிர்வேலி
மனித - வன உயிரின மோதலைத் தவிர்க்க கிருஷ்ணகிரியில் ரூ.31 கோடியில் உயிர்வேலி அமைக்கப்படும் என்று வனத் துறை அமைச்சர் க. பொன்முடி அறிவித்தார்.

தமிழகத்தில் பசுமைப் பொருளாதார துறைகளில் முதலீடு
தொழில்முனைவோருக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு
உக்ரைனில் ஐ.நா. தலைமையிலான இடைக்கால அரசு
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்ள, அந்த நாட்டில் ஐ.நா. தலைமையிலான இடைக்கால அரசு அமைக்கப்பட வேண்டும் என்று ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் வலியுறுத்தியுள்ளார்.

விவசாயிகளின் குறைகளை தீர்க்க சிலர் விரும்பவில்லை
விவசாயிகளின் குறைகளைத் தீர்க்க சிலர் விரும்பவில்லை என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

ஆக்கபூர்வ அரசியல் செய்ய முன்வாருங்கள்; அதிமுக, பாஜகவுக்கு முதல்வர் அழைப்பு
ஆக்கபூர்வமான அரசியல் செய்ய முன்வர வேண்டும் என்று அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.