சமத்துவ விண்வெளியில் சர்வதேச அரசியல்!
இந்திய வம்சாவளியும், அமெரிக்கக் கடற்படைப் போர் விமானியுமான வீரங்கனை சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து மீட்கப்பட்டு இருக்கிறார் என்பதே ஊடகவெளியின் முதன்மைப் பேசுபொருள். இதன் பின்னணியில் சில செய்திகளை இங்கு சிந்திக்க வேண்டியுள்ளது.
சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வீரர்களை அனுப்புவதில் நாசா தனியார்மயத்தை ஊக்குவித்தது. அது ஒரு 'புரட்சிகரமான' அணுகுமுறை என்று கூறப்பட்டது. தனியார் நிறுவனங்கள் விண்கலன்களைச் சொந்தமாக வைத்து இயக்கும்; நாசா அதில் ஒரு வாடிக்கையாளராக மட்டுமே செயல்பட்டு, தேவைக்கேற்ப விண்கலன்களை வாங்கும். 2014-ஆம் ஆண்டில் வர்த்தகரீதியில் விண்வெளிவீரர்களை அனுப்பும் திறன் வாய்ந்த தனியார் நிறுவனங்களைக் கண்டறியும் குழுவில் விண்வெளி வீரர்களான பாப் பெஹன்கென், எரிக் போ, டக் ஹர்லி, சுனிதா வில்லியம்ஸ் ஆகியோரை நியமித்தது, அமெரிக்க நாசா நிறுவனம்.
2010-ஆம் ஆண்டில், மார்க் நப்பி என்பவர் துணைத் தலைவராக இருந்து வழிநடத்திய போயிங் நிறுவனமும், அமெரிக்கத் தொழிலதிபரான எலான் மஸ்க் உருவாக்கிய ஸ்பேஸ்எக்ஸும் நாசாவின் வணிகக் குழு திட்டப்போட்டியில் பங்கெடுத்தன.
நாசா நியமித்த விண்வெளிக் குழு வீரர்களே 'போயிங்', 'ஸ்பேஸ்எக்ஸ்' ஆகிய இரண்டிலும் பொறியாளர்களுக்கு ஆலோசகர்களாகவும் பணியாற்றினர். என்றாலும், இந்த இரு நிறுவனங்களின் பொறியாளர்களுக்கும் விண்வெளிக் குழு வீரர்களுக்கும் இடையில் பணி உறவுகளின்போது உரசல் ஏற்பட்டதை சக உறுப்பினரான ஹர்லி விவரித்தார். ஒரு குறிப்பிட்ட சோதனையின் போது ஏற்பட்ட உந்து எரிபொருள் கசிவு குறித்து போயிங் குழு விண்வெளி வீரர்களுக்குத் தெரிவிக்கத் தவறிவிட்டதாம். இறுதியில், ஹர்லியும் பெஹன்கெனும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்துக்கு இடம் மாறிச் சென்று விட்டார்கள்.
Denne historien er fra March 26, 2025-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra March 26, 2025-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
‘42,000 கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு- திறன் பயிற்சிகள்’
தமிழ்நாட்டில் 42,000 கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் திறன் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தார்.
ரயில்களில் பெண் பயணிகளின் பாதுகாப்புக்கு புதிய ‘வாட்ஸ்ஆப்’ குழு
பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ‘ரயில் பெண் பயணிகள் பாதுகாப்பு’ என்ற வாட்ஸ்ஆப் குழுவை தமிழ்நாடு இருப்புப்பாதை காவல் துறை இயக்குநர் கே.வன்னிய பெருமாள் தொடங்கி வைத்தார்.

நெசவாளர்களுக்கு அடிப்படை கூலியில் 10%, அகவிலைப்படியில் 10% உயர்த்தி வழங்கப்படும்
அமைச்சர் ஆர்.காந்தி அறிவிப்பு

இலங்கையில் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு முயற்சிக்கும்
தமிழக மீனவர்கள் சர்வதேச கடல் எல்லையைத் தாண்டாமல் இருக்க திட்டங்களை உருவாக்கவும், இலங்கையில் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கவும் மத்திய அரசு முயற்சிக்கும் என்று தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்தார்.

வேளாண் உரங்களுக்கு ரூ.37,216 கோடி மானியம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
நிகழாண்டு காரீஃப் (கோடைப் பருவம்) பருவ காலத்தில் விளைநிலங்களில் உரிய அளவில் மண்ணுக்கு ஊட்டச் சத்தை வழங்கும் முயற்சியின் ஒரு பகுதியாக பாஸ்பேட்டிக், பொட்டாசிக் உரங்களுக்கான ரூ. 37,216 கோடி மானியத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

மனித - வன உயிரின மோதலை தவிர்க்க ரூ.31 கோடியில் உயிர்வேலி
மனித - வன உயிரின மோதலைத் தவிர்க்க கிருஷ்ணகிரியில் ரூ.31 கோடியில் உயிர்வேலி அமைக்கப்படும் என்று வனத் துறை அமைச்சர் க. பொன்முடி அறிவித்தார்.

தமிழகத்தில் பசுமைப் பொருளாதார துறைகளில் முதலீடு
தொழில்முனைவோருக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு
உக்ரைனில் ஐ.நா. தலைமையிலான இடைக்கால அரசு
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்ள, அந்த நாட்டில் ஐ.நா. தலைமையிலான இடைக்கால அரசு அமைக்கப்பட வேண்டும் என்று ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் வலியுறுத்தியுள்ளார்.

விவசாயிகளின் குறைகளை தீர்க்க சிலர் விரும்பவில்லை
விவசாயிகளின் குறைகளைத் தீர்க்க சிலர் விரும்பவில்லை என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

ஆக்கபூர்வ அரசியல் செய்ய முன்வாருங்கள்; அதிமுக, பாஜகவுக்கு முதல்வர் அழைப்பு
ஆக்கபூர்வமான அரசியல் செய்ய முன்வர வேண்டும் என்று அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.