தொழிலதிபர் அதானியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு போதும் சந்திக்கவில்லை. தி.மு.க. ஆட்சியில் எந்த ஒரு தனியார் நிறுவனத்துடனும் ஒப்பந்தம் போடவில்லை. அவதூறு பரப்பினால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
தொழிலதிபர் அதானியை முதலமைச்சர் சந்தித்ததுபோலவும், அதிக விலை கொடுத்து அதானியிடமிருந்து சூரிய ஒளி மின்சாரம் பெற ஒப்பந்தம் போட்டிருப்பதுபோலவும் தொடர்ந்து எதிர்க்கட்சிகளும், ஊடகங்களும் கற்பனையான தகவலை கட்டுக்கதைகள்போல் வெளியிட்டு தெரிவித்து வருவதற்குக் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். மு.க.ஸ்டாலின் அதானியை சந்தித்ததாகவும் இல்லை. அதானி நிறுவனத்துடன் நேரடியாக சூரிய ஒளி மின்சாரம் பெற எந்த ஒப்பந்தமும் போடவும் இல்லை என்பதைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
அ.தி.மு.க. ஆட்சியில் நிர்வாக ரீதியாகவும், நிதிநிலமை ரீதியாகவும் முற்றிலும் சீர்குலைந்திருந்த தமிழ்நாடு மின்சார வாரியத்தை அடுத்தடுத்த நிர்வாகச் சீர்திருத்த மற்றும் ஆக்கபூர்வமான நடவடிக்கை மூலம், இன்றைக்குத் தமிழ்நாடு மின்சார வாரியத்தைத் தலை நிமிரவைத்துள்ளவரே எங்கள் முதலமைச்சர். அதை பொறுத்துக்கொள்ள முடியாமல், இப்படி அடிப்படையிலே உண்மை கிஞ்சித்தும் இல்லாத பொய்க் குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பரப்பி வருவது அரசியல் பண்பு அல்ல.
"ஒவ்வொரு மாநிலமும் ஆண்டுதோறும் நுகர்கின்ற மொத்த மின்சாரத்தில் குறிப்பிடத்தக்க அளவு புதுப்பிக்கத்தக்க மின்சக்தியைப் பயன்படுத்த வேண்டியது கட்டாயம். தவறும்பட்சத்தில் அபராதம் செலுத்த வேண்டும்" என்ற ஒன்றிய அரசின் கட்டாய விதியின் அடிப்படையில் 2020, 2021, 2023 ஆகிய ஆண்டுகளில் 2000 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரத்தைக் கொள்முதல் செய்ய தமிழ்நாடு மின்சார வாரியம் ஒன்றிய அரசின் சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளதே தவிர, எந்தவொரு தனியார் நிறுவனத்துடனும் அல்ல.
Denne historien er fra December 06, 2024-utgaven av Malai Murasu.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra December 06, 2024-utgaven av Malai Murasu.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
சென்னை மெரினா கடற்கரையில் ஜெயலலிதா நினைவிடத்துக்கு அனுமதி அளித்ததில் முறைகேடு!
கணக்கு தணிக்கைத் துறை குற்றச்சாட்டு!!
அமெரிக்காவில் வாழும் லட்சக்கணக்கான இந்தியர்களின் குடியுரிமை பறிபோகும் அபாயம்!
டிரம்ப் புதிய அறிவிப்பால் பரபரப்பு!!
மம்தாவால் கூட்டணியில் சலசலப்பு: தேர்தலில் தனித்து போட்டியிட காங்கிரஸ் நிர்வாகிகள் வற்புறுத்தல்!
அமைதி காக்குமாறு ராகுல் வேண்டுகோள்!!
ரிசர்வ் வங்கி ஆளுநராக சஞ்சய் மல்கோத்ரா ன்று பொறுப்பேற்பு!
இந்திய ரிசர்வ் வங்கியின் 25-ஆவது ஆளுநராக செயல் பட்டு வந்த சக்திகாந்த தாஸின் பதவிக்காலம் நிறைவடைந்தது.
தனியாருக்கு வழங்கப்பட்ட மது விற்பனை அனுமதியை ரத்து செய்ய வேண்டும்!
ஜி.கே.வாசன் வற்புறுத்தல்!!
வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி 24-ஆம் தேதி போராட்டம்!
டாக்டர்.ராமதாஸ் அறிக்கை!!
நாடாளுமன்றத்தில் போராட்டம்: ராஜ்நாத் சிங்குக்கு ரோஜா, தேசியக் கொடி தந்த ராகுல்!
வாங்க மறுத்து சென்றார்!!
டெல்லியில் வெகு விரைவில் அமைப்பாளர் நியமனம் குறித்து இந்தியா கூட்டணி ஆலோசனை!
கருத்திணக்கத்தை உருவாக்க முயற்சி!!
சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ. 640 அதிகரிப்பு!
2 நாளில் ரூ.1,240 உயர்ந்தது!!
காற்றழுத்த தாழ்வுப்பகுதி நெருங்கியது: கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!