எடப்பாடி சந்திப்பு எதிரொலி: அண்ணாமலை இன்று திடீர் டெல்லி பயணம்!

எடப்பாடி சந்திப்பை தொடர்ந்து அமித்ஷாவை சந்திக்க அண்ணாமலை இன்று திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
2026 சட்டமன்ற தேர்தல் எதிர்கொள்ளும் வகையில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க அ.தி.மு.க. தயாராகி வருவதாக கூறப்பட்டும் நிலையில் தலைநகர் டெல்லியில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு கூட்டணியை உறுதி செய்யும் விதமாக அமைந்தது.
இதன் எதிரொலியாக உள்துறை அமைச்சர் அமித்ஷா வின் அழைப்பின் பேரில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை இன்று காலை டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றார். அவரது இந்த பயணத்தின் போது அ.தி.மு.க.வுடன் இணக்கமான போக்கை கடைப்பிடிக்கும்படி பா.ஜ.க. மேலிடம் அறிவுறுத்தும் என்று கூறப்படுகிறது.
கடந்த 2021 ஜூலை மாதம், தமிழக பா.ஜ.க. தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டார். அப்போது இருந்தே ஆளும் திமுக அரசுக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன் வைத்து வரும் அண்ணாமலை, கூட்டணிகட்சியான அ.தி.மு.க.வுடனும் இணக்கமாக செல்ல விரும்பவில்லை என்றே கூறப்பட்டது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. உடன் கூட்டணி வைத்ததே அ.தி.மு.க. தோல்விக்கு காரணம் என அதிமுக மூத்த தலைவர்கள் சிலர் வெளிப்படையாக கூறினர். எனினும் அப்போது டெல்லி மேலிடம் அழைத்து இருதரப்பையும் சமாதானம் செய்தது.
தி.மு.க. தலைவர்களின் ஊழல் பட்டியலை வெளியிட்டு பேசிய அண்ணாமலை, தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த அனைத்து கட்சிகளின் வெளியிடுவேன் என்று கூறியதுடன் திராவிட கட்சிகள் ஊழலில் திளைக்கின்றன, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அதன் காரணமாகவே நீதிமன்றத்தால் தண்டிக்கப்படார் என அண்ணாமலை பேசியது அ.தி.மு.க. தரப்பில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இரு ஆண்டுகளுக்கு முன்பு ஈரோடு கிழக்கு தேர் தலின் போது இ.பி.எஸ்.ஓ.பி.எஸ். இருதரப்பினரை இணைக்க அண்ணாமலை முயன்ற போது கட்சியின் உள்விவகாரத்தில் தலையிடுவதை அ.தி.மு.க. நிர்வாகிகள் விரும்பவில்லை.
Denne historien er fra March 27, 2025-utgaven av Malai Murasu.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra March 27, 2025-utgaven av Malai Murasu.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på

ஈரான் மீது குண்டு வீசுவோம்!
அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை; | பதிலடி கொடுக்க ஈரானும் தயார்!!

2 தொடர் தோல்வியால் 7-ஆவது இடம் சென்ற சென்னை அணி!
தோல்விக்கான காரணம் என்ன?

46சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது!
ரூ.5 முதல் ரூ.30 வரை அதிகரிக்கும்!!

பறவைகளுக்கு நீரும் உணவும் அளிப்போம்!
பறவைகளுக்கு உணவு, தண்ணீர் வழங்கி முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்!!

போலீஸ் நிலையத்தில் வாலிபருக்கு கத்திக்குத்து!
விசாரணை நடந்த போது 2 கும்பலிடையே மோதல்!!
மீன் லாரிகளில் கள்ளச் சாராயம் மூட்டை மூட்டையாக கடத்தல்!
பல லட்ச ரூபாய் மதுபாட்டில்கள் பறிமுதல்!!

தமிழ்நாட்டை பார்த்து பாடம் கற்க வேண்டும்!
ராஜ்தாக்கரே காட்டமான கருத்து!!
இலங்கை தம்பதியருக்கு பிறந்த பெண்ணுக்கு குடியுரிமை!
மத்திய அரசு பரிசீலிக்க உயர்நீதிமன்றம் அறிவுரை!!

புதிய உச்சத்தில் தங்கம் விலை!
விரைவில் ரூ.70 ஆயிரத்தையும் தொட்டுவிடும்!!

மியான்மரை உலுக்கிய நிலநடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்ததால் அதிர்ச்சி!
கட்டிடங்கள் இடிந்து விழுந்து சேதம்!!