Prøve GULL - Gratis
பெண்களே “விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்”
Tamil Mirror
|March 07, 2025
மதுபானம், புகைப் பொருட்கள் மற்றும் போதைப் பொருட்களின் பாவனைகளால் எமது நாடு பல்வேறு வழிகளிலும் பாதிப்படைகின்றது.
-

குறிப்பாக பொருளாதாரம், சுகாதாரம், சமூக சீர்கேடுகள் என பல பிரச்சினைகள் இவற்றினால் ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. எமது நாட்டில் பெண்களின் மதுபான பாவனை மற்றும் புகைத்தல் பாவனை ஆகியன புறக்கணிக்கத்தக்க சதவீதத்திலேயே காணப்படுகின்றன.
ஆகவே, பெண்களை பாவனையாளர்களாக மாற்றுவதற்கும் பெண்கள் மத்தியில் மதுபானத்தையும், புகைப் பொருட்களையும் சாதாரணமாக்க வேண்டும் என்பதற்காகவும் மதுபான நிறுவனங்களும் புகையிலை நிறுவனமும் பல நுணுக்கங்களில் முயற்சித்து வருகின்றன, மேலும், பெண்களின் மதுபான பாவனை மிகவும் குறைவான விகிதாசாரத்தில் காணப்பட்டாலும் மதுபானத்தினால் ஏற்படுகின்ற பல்வேறு பிரச்சினைகளுக்குப் பெண்கள் முகங்கொடுக்கின்றனர்.
இவற்றை வெளிக்கொணரும் வகையிலும், ஏனையோரின் மதுபான பாவனையினால் பெண்கள் முகங்கொடுக்கின்ற பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வதற்கும் 2025ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையமானது ஆய்வொன்றினை மேற்கொண்டது.
25 மாவட்டங்களிலிருந்தும் 15 வயதிற்கும் மேற்பட்ட 1,000 பெண்களிடம் இவ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இது மதுபான பாவனையினால் பெண்கள் எவ்வாறான பிரச்சினைகளுக்கு ஆளாகின்றனர், மதுபானம் எவ்வாறு பெண்களின் உரிமைகளை மீறுகின்றன? என்பனவற்றை ஆராயும் வகையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வாகும்.
ஆய்வின் சாரம்சம்
- 54 சதவீதமான பெண்கள் மதுபான பாவனையினால் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர்
- 42 சதவீதமான பெண்கள் உள ரீதியாகப் பாதிப்படைகின்றனர்
- 69 சதவீதமான பெண்கள் பொது இடங்களில் அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர்
- பெண்களின் உரிமைகளுடன் இணைத்து மதுபான நிறுவனங்கள் அதிகமான விளம்பரங்களை மேற்கொள்கின்றன. எனினும், 37 சதவீதமான பெண்கள் இன்னமும் அது தொடர்பாக அறிந்திருக்கவில்லை.
- மதுபான நிறுவனங்கள் தமது உற்பத்தி பொருளை விற்பனை செய்வதற்கு பெண்களை பயன்படுத்தும் சந்தர்ப்பங்களில் பெண்களின் உரிமைகள் மீறப்படுகின்றன என 64 சதவீதமான பெண்கள் குறிப்பிட்டனர்.
Denne historien er fra March 07, 2025-utgaven av Tamil Mirror.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Tamil Mirror

Tamil Mirror
13 வருடங்கள் பாடசாலை கல்வியை பெறாது “எந்தக் குழந்தையும் இடைவிலகக் கூடாது”
13 வருடங்கள் கல்வியை பெறாமல் பாடசாலைகளை விட்டுச் செல்லக்கூடாது என்றும் பிள்ளைகளுக்கு சிறுவர் வாழ்க்கையை அனுபவிக்கக்கூடியவாறும், அவர்கள் 13 வருட கட்டாய கல்வியுடன் அவர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கக்கூடியவாறும் கல்வி மறுசீரமைப்பு நடைமுறைப்படுத்தப்படும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
2 mins
July 25, 2025

Tamil Mirror
ஆறு மாதங்களில் புற்றுநோயாளர்கள் 36,000 பேர் அனுமதி
மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு நாளாந்தம் 950 முதல் 1,000 பேர் வரை சிகிச்சைக்காக வருகின்றனர்.
1 mins
July 25, 2025
Tamil Mirror
“தனது உயிருக்கு அச்சுறுத்தல்”
மாத்தளை மனித புதைகுழியுடன் தொடர்புடைய கொலையாளிகளின் பிள்ளைகளும், தனியார் சித்திரவதை முகாம்களை நடத்தியவர்களும் இந்த பாராளுமன்றத்தில் இருப்பதாக சபை முதல்வர் வெளியிட்ட கருத்தால் தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
1 min
July 25, 2025

Tamil Mirror
உணவு ஒவ்வாமையால் உணவகங்கள் பரிசோதனை
கிண்ணியா பிரதேச சகல உணவகங்களும் பரிசோதனை இடம் பெற்று வருவதாக கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எம். எம். அஜீத், கிண்ணியாவில் வியாழக்கிழமை (24) இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது தெரிவித்தார்.
1 min
July 25, 2025
Tamil Mirror
வெலிகம பிரதேச சபையைக் கைப்பற்றியது ஐ.ம.ச.
பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த வெலிகம பிரதேச சபையின் அதிகாரத்தை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி (SJB) உறுதிப்படுத்தி, தவிசாளர் பதவியைப் பெற்றுள்ளது.
1 min
July 25, 2025

Tamil Mirror
ஆளும் தமிழ் எம்.பிக்கள் இருவர் "பேஸ்புக்கில் இனவாதத்தை தூண்டுவதற்கு முயற்சி”
ஆளும் கட்சி தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் பேஸ்புக்கில் தமிழ் மக்களிடையே இனவாதத்தைத் தூண்டும் வகையில் செயற்படுகின்றனர் என்று ஐக்கிய மக்கள் சக்தி ஹெக்டர் ஹப்புகாமி தெரிவித்தார்.
1 min
July 25, 2025

Tamil Mirror
வட்டவன் பகுதி விவகாரம்: கடுமையான எதிர்ப்பால் தீர்மானிப்பது இடைநிறுத்தம்
வெருகல் பிரதேச செயலக பிரிவின் வட்டவன் பகுதியில், தொல்லியலுக்கான இடங்கள் இருக்குமாயின் அது பற்றிய தீர்மானம் எதிர்வரும் வெருகல் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட வேண்டும் என வெருகல் பிரதேச சபையின் தவிசாளர் சே.கருணாநிதி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
1 min
July 25, 2025
Tamil Mirror
ரம்புட்டான் விபத்து அதிகரிப்பு
ரம்புட்டான் மரங்களில் இருந்து விழும் மக்கள் சம்பந்தப்பட்ட விபத்துக்கள் அதிகரித்து வருவது குறித்து நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர், இது பழம் பறிக்கும் பருவத்தில் பாதுகாப்பு கவலைகள் எழுந்துள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
1 min
July 25, 2025

Tamil Mirror
வடக்கில், "80,000 ஏக்கர் காணிகளை விடுவிக்க நடவடிக்கை”
முல்லைத்தீவு மாவட்டத்தில் 54,000 ஏக்கர் காணி, வவுனியா மாவட்டத்தில் 24,000 ஏக்கர் காணி மற்றும் மன்னார் மாவட்டத்தில் 2,000க்கும் மேற்பட்ட ஹெக்டெயர் காணிகளை விடுவிப்பது தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகக் காணி, நீர்ப்பாசன பிரதியமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்தார்.
1 min
July 25, 2025

Tamil Mirror
போதைப்பொருள் தொடர்பில் 6,000 பேர் கைது
போதைப்பொருள் தொடர்பில் அண்மைக் காலங்களில் 6,000க்கும் மேற்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
1 min
July 25, 2025