‘தூய்மையான கழிவறையால் அனைவருக்கும் பயன்’
Tamil Murasu|November 22, 2024
தேசிய சுற்றுப்புற வாரியம், பொதுச் சுகாதார மன்றத்தின் ஏற்பாட்டில் ‘தூய்மையான பொதுக் கழிவறைகள் இயக்கம் 2024’ வியாழக்கிழமை (நவம்பர் 21) தொடக்கம் கண்டது.
ரவி சிங்காரம்
‘தூய்மையான கழிவறையால் அனைவருக்கும் பயன்’

செஞ்சா உணவங்காடி நிலையத்தில், நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் பே யாம் கெங் இந்த இயக்கத்தைத் தொடங்கிவைத்தார்.

இவ்வாண்டு இயக்கத்தின் முழக்கவரி, ‘நமது கழிப்பறைகள் சுத்தமாக இருந்தால் நாம் அனைவரும் வெற்றி பெறுகிறோம்!’. கழிவறைச் சுத்தத்திற்கு அனைவரது பங்களிப்பும் முக்கியம் என்பதை இது வலியுறுத்துகிறது.

இந்த இயக்கத்துக்கு சிங்கப்பூர்க் கழிவறைச் சங்கம், சிங்கப்பூர் உணவு அமைப்பு, சிங்கப்பூர் கனிவன்பு இயக்கம் உள்ளிட்ட பங்காளிகள் தொடர்ந்து பலத்த ஆதரவு கொடுக்கின்றன.

2024, பொதுச் சுகாதார ஆண்டாக குறிக்கப்பட்டுள்ளது. 2024 தொடக்கத்திலிருந்து, தேசிய சுற்றுப்புற வாரியமும் சிங்கப்பூர் உணவு அமைப்பும் பொதுக் கழிவறைச் சுத்த அமலாக்க நடவடிக்கைகளை அதிகரித்துள்ளன.

2024 ஜனவரி 1 முதல் நவம்பர் 15ஆம் தேதி வரை உணவிடங்கள், ரயில்/பேருந்து நிலையங்கள் போன்றவற்றின் உரிமையாளர்கள்மீது 1,253 அமலாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. சென்ற ஆண்டு இதே காலகட்டத்தில் எடுக்கப்பட்ட 367 நடவடிக்கைகளைவிட இது மூன்று மடங்கு அதிகம்.

கழிவறை அசுத்தம், உணவுச் சுகாதாரம் தொடர்பான விதிமீறல்களுக்கு தண்டனைப்புள்ளிகள் கட்டமைப்பின்படி, 10 காப்பிக்கடைகளுக்கு சிங்கப்பூர் உணவு அமைப்பு தற்காலிகத் தடை விதித்தது. ஒப்புநோக்க, 2022, 2023ஆம் ஆண்டு ஒவ்வொன்றிலும் ஒரே ஒரு காப்பிக்கடைக்குத்தான் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டது.

Denne historien er fra November 22, 2024-utgaven av Tamil Murasu.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

Denne historien er fra November 22, 2024-utgaven av Tamil Murasu.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA TAMIL MURASUSe alt
Tamil Murasu

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்: பாஜக முயற்சி

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் பொது வேட்பாளரை நிறுத்தும் முயற்சியில் பாஜக இறங்கியுள்ளது. இதற்கு அதிமுக சம்மதிக்கும் பட்சத்தில், தமாகா சார்பில் பொது வேட்பாளரைக் களம் இறக்குவது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது.

time-read
1 min  |
January 09, 2025
Tamil Murasu

உள்ளாட்சிகளுடன் சிற்றூர்கள் இணைப்பு குறித்து கருத்துத் தெரிவிக்க அவகாசம்

ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளை இணைக்கும் திட்டம் குறித்து கருத்துத் தெரிவிக்க 4 மாதங்கள் கெடு அளிக்கப்பட்டுள்ளது. எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டால் முதல்வர் கவனத்துக்குக் கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
January 09, 2025
16 ஆண்டுகளுக்கு முன் கொல்லப்பட்டவர் நேரில் வந்தார்; கொலை வழக்கு நீடிப்பு
Tamil Murasu

16 ஆண்டுகளுக்கு முன் கொல்லப்பட்டவர் நேரில் வந்தார்; கொலை வழக்கு நீடிப்பு

பீகார் மாநிலம் டியோரியா பகுதியைச் சேர்ந்த நாதுனி பால், 50, என்பவர் கடந்த 2009ஆம் ஆண்டு தனது வீட்டிலிருந்து காணாமல் போனார். அப்போது, அவரது மாமா மற்றும் அவரது சகோதரர்கள் நால்வர் சேர்ந்து நாதுனியின் நிலத்துக்காக அவரைக் கொலை செய்துவிட்டதாகக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

time-read
1 min  |
January 09, 2025
Tamil Murasu

புதுச்சேரி அரசைக் காக்க பாஜகவுடன் திமுக உறவு: அதிமுக கண்டனம்

சென்னை அண்ணா பல்கலைக் கழக மாணவி வன் கொடுமை சம்பவத்தில் பிரச் சினையை திசை திருப்பும் வகையில், தமிழக திமுக அரசைக் கண்டித்து புதுச்சேரி மாநில அதிமுக சார்பில் அக்கட்சியின் செயலாளர் அன்பழகன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் புதன்கிழமை அண்ணா சிலை பழைய பேருந்து நிலையம் அருகில் நடந்தது.

time-read
1 min  |
January 09, 2025
பெண் சமூக ஊழியர்கள் தொடர் போராட்டம்
Tamil Murasu

பெண் சமூக ஊழியர்கள் தொடர் போராட்டம்

கௌரவ ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள்

time-read
1 min  |
January 09, 2025
Tamil Murasu

சிங்கப்பூரில் 2024ல் டெங்கிச் சம்பவங்கள் 36% அதிகரிப்பு

சிங்கப்பூரில் கடந்த 2024ஆம் ஆண்டு 13,600க்கும் அதிகமான டெங்கிச் சம்பவங்கள் பதிவாயின.

time-read
1 min  |
January 09, 2025
Tamil Murasu

லிஷா இளையர் பிரிவு தொடக்கம்

லிட்டில் இந்தியா வர்த்தகர்கள் மரபுடைமைச் சங்கம் (லிஷா) ஜனவரி 8ஆம் தேதி தனது இளையர் பிரிவைத் தொடங்கியது.

time-read
1 min  |
January 09, 2025
உயர்நிலைப் பள்ளிகளில் பாட அடிப்படையிலான வகைப்பாட்டுத் திட்டம்: ஓராண்டு நிறைவு
Tamil Murasu

உயர்நிலைப் பள்ளிகளில் பாட அடிப்படையிலான வகைப்பாட்டுத் திட்டம்: ஓராண்டு நிறைவு

கல்வி அமைச்சு அறிமுகம் செய்த பாட அடிப்படையிலான வகைப்பாடு (Subject Based Banding), 120 உயர்நிலைப் பள்ளிகளில் ஓராண்டாகச் செயல்பட்டு வருகிறது.

time-read
1 min  |
January 09, 2025
போத்தலால் தாக்கப்பட்ட பள்ளி மாணவர் காயம்
Tamil Murasu

போத்தலால் தாக்கப்பட்ட பள்ளி மாணவர் காயம்

சக மாணவரை போத்தலால் தாக்கியதாக சந்தேகிக்கப்படும் 12 வயது மாணவர், காவல் துறை விசாரணையில் உதவி வருகிறார்.

time-read
1 min  |
January 09, 2025
Tamil Murasu

மோசடிகளில் 73 மில்லியன் வெள்ளி இழப்பைத் தடுத்த காவல்துறை, வங்கிகள்

மோசடிக்காரர்களிடம் 8,700க்கும் மேற்பட்ட வங்கி வாடிக்கையாளர்கள் கிட்டத்தட்ட $73 மில்லியன் இழப்பதை, காவல்துறையின் மோசடிக்கு எதிரான நிலையத்துடன் கூட்டாகச் செயல்பட்ட ஆறு வங்கிகளும் தடுத்துள்ளன.

time-read
1 min  |
January 09, 2025