மே 13, 2013. அன்னையர் தினத்துக்கு அடுத்த நாள். தாயாருடன் உணவுண்ண வீட்டிற்கு விரைந்த நோவெல், திடீரெனத் தலையில் தாங்கமுடியாத வலியை உணர்ந்தார்.
சாதாரண தலைவலி என்றுதான் நினைத்தார். ஆனால் இடது கையும் நடுங்கியது. உடலின் இடப்பக்கத்தில் உணர்வே இல்லை. வாந்தி எடுத்தார். பின்னர் மயங்கிவிட்டார்.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மூளையில் ‘கோல்ஃப்’ பந்து அளவிலான ரத்தக் கட்டு இருந்தது தெரியவந்தது. அதை நீக்க அறுவை சிகிச்சை தேவைப்பட்டது. உயிர் பிழைப்பது கடினம். பிழைத்தாலும் சாதாரணமாக நடக்கவோ, பேசவோ முடியாது என்றனர் மருத்துவர்கள்.
தற்போது 51 வயதாகும் நோவெல் பீட்டர் சேவியர், சிரித்து சரளமாகப் பேசுகிறார். சிரமப்பட்டாலும் அவரால் நடக்க முடிகிறது. மரினா பே சேண்ட்ஸ் சூதாட்டக்கூடத்தில் பணியாற்றுகிறார்.
‘ஒன்றுமில்லாதவர் என்ற நிலையிலிருந்து நாயகர் வரை’ (Zero to Hero) எனும் அவரது நூல் இவ்வாண்டு ஜூன் மாதம் வெளியானது. இதன் விற்பனையில் கிடைக்கும் நிதி மூலம் அவர் பிலிப்பீன்சிலுள்ள சாலையோரக் குடும்பங்களுக்கு உணவு வழங்குகிறார்.
ஆகாயப் படை வீரர்
சிங்கப்பூர்க் குடியரசு ஆகாயப்படையில் 20 வயதில் சேர்ந்து ஆறு ஆண்டுகள் முழு நேர வீரராகச் சேவையாற்றியவர் நோவெல். தொடக்கத்தில் வான் போக்குவரத்து அதிகாரியாகவும் பின்பு ‘சூப்பர் பூமா’ ஹெலிகாப்டர் சிமுலேட்டர் (simulator) பயிற்றுவிப்பாளராகவும் அவர் பணியாற்றினார்.
பின்னர் புதிய அனுபவங்களை நாடி, விடுதித் தொழிலாளர், பாதுகாப்பு அதிகாரி, கூலி, குடிநுழைவு அதிகாரி, கூட்டுரிமை வீட்டு மேலாளர் என பல்வேறு வேலைகளில் அவர் பணிபுரிந்தார். வாழ்க்கை சுமுகமாகத் தொடர்ந்துகொண்டிருந்தபோது பக்கவாதத்தினால் எல்லாம் தலைகீழாக மாறியது.
பக்கவாதம் வாழ்வை முடக்கிவிடாது
Denne historien er fra December 29, 2024-utgaven av Tamil Murasu.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra December 29, 2024-utgaven av Tamil Murasu.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
தளபதி 69ல் சந்தானம
நடிகர் விஜய்யின் 69வது படத்தில், சந்தானம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக வெளியான தகவல் கோடம்பாக்க வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிவகார்த்திகேயன் படங்களுக்கு திடீர் வரவேற்பு
சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படங்களுக்கான வியாபார எல்லை மளமளவென பெருகியுள்ளது. ‘அமரன்’ படத்தின் வெற்றிதான் இதற்குக் காரணம்.
அன்பு மட்டுமே வாழ்க்கை என நினைப்பவன் ‘வணங்கான்’
எழுத்தாளர் ஜெயமோகனின் ‘அறம்’ தொகுப்பைப் படித்துக் கொண்டிருந்தபோது, அதில் இடம்பெற்றிருந்த ‘வணங்கான்’ என்ற சிறுகதையின் தலைப்பு இயக்குநர் பாலாவுக்குப் பிடித்துப்போனது.
குகேஷுக்கு ‘கேல் ரத்னா' விருது
விளையாட்டுத்துறையில் சாதித்தவர்களுக்கு இந்திய அரசால் வழங்கப்படும் உயரிய விருதான கேல் ரத்னா விருது தமிழகத்தைச் சேர்ந்த உலக சதுரங்க வெற்றியாளர் டி.குகேஷ் மற்றும் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் உட்பட நால்வருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
பணியிடப் போக்குகளில் ஆதிக்கம் செலுத்தும் ‘ஏஐ’
செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடு அதிகரித்துவரும் நிலையில் சிங்கப்பூர் ஊழியர்களில் 45 விழுக்காட்டினர் அதைப் பயன்படுத்துவதை மேலாளர்களிடம் ஒப்புக்கொள்வதில்லை என்று அண்மைய ஆய்வில் தெரியவந்துள்ளது.
நியூயார்க் இரவுவிடுதி வெளியே துப்பாக்கிச்சூடு; பதின்மர் காயம்
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள இரவுவிடுதிக்கு வெளியே நடந்த துப்பாக்கிச்சூட்டில் பத்து பேர் காயமைடைந்தனர்.
ஜேஜு ஏர் விபத்து: விமான வால் பகுதியை அகற்ற முடிவு
தென்கொரிய வரலாற்றில் இதுவரை இல்லாத மிக மோசமான விமான விபத்தில் ஜேஜு விமானத்தின் வால் பகுதியை அகற்ற அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
லாலு பிரசாத் அழைப்பை நிராகரித்த நிதிஷ்குமார்
பீகார் முதல் அமைச்சர் நிதிஷ்குமார் இண்டியா கூட்டணியில் சேர்வதற்கான காலம் வந்துவிட்டது.
இந்தியக் கிராமத்தில் முன்னாள் அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டருக்கு அஞ்சலி
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டரை கௌரவிக்கும் வகையில் அவரது பெயர் சூட்டப்பட்ட இந்தியக் கிராமத்தில் மக்கள் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
சீர்மிகு திட்டத்தால் பொலிவு பெறும் நகரங்கள்
உலகப் பொருளியல் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது இந்தியா.