சென்னை, ஏப்.6 அரசியல் ஒருமைப்பாட்டைவிட சமூகநீதி ஒருமைப்பாடு மிகவும் முக்கியம். தந்தை பெரியார் பிறந்த தமிழ்நாடுதான் இதற்கு முன்னோட்ட மண்! உரிய நேரத்தில் இந்த மாநாடு கூட்டப்படுவதற்குக் காரணமாக இருந்தவர்களுக்கும், பங்கேற்றவர்களுக்கும் நன்றி, பாராட்டுகள்! தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி தலைமையில் சமூகநீதிப் போரில் வென்றே தீருவோம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆங்கிலத்தில் உரையாற்றினார்.
கடந்த 3.4.2023 அன்று மாலை அகில இந்திய சமூக நீதிக் கூட்டமைப்பின் சார்பில் டில்லியில் அகில இந்திய சமூகநீதி மாநாடு நடைபெற்றது. அதில், காணொலி வாயிலாக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரை யாற்றினார்.
அவரது உரை வருமாறு:
சமூகநீதி லட்சியத்தின் பெரும் தளபதியாக இந்த இயக்கத்தை நாடு தழுவிய அளவில் கொண்டு சென்றிருக்கும் தமிழ்நாட்டின் மதிப்பிற்குரிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களே! இந்த சமூகநீதி மாநாட்டில் பங்கேற்றுள்ள அன்பிற்கும், மாண்பிற்கும் உரிய தலை வர்களே! சகோதரர்களே! சகோதரிகளே!
சமூகநீதி உருவான பெரியார் மண்ணிலிருந்து உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொளுகிறோம்.
இட ஒதுக்கீட்டில் முதல் திருத்தத்தைக் கொண்டு வந்தது பெரியார் மண் தமிழ்நாடு!
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முதலாவது திருத்தம், 76ஆவது திருத்தம் மற்றும் 93 ஆம் திருத்தம் ஆகிய சமூகநீதியின் சாதனைக் கட்டங்களை உருவாக்கிய தமிழ்நாட்டிலிருந்து, பெரியார் மண்ணிலிருந்து பேசுகிறோம். தமிழ்நாடு சமூக நீதிக்காக வரலாற்றுச் சாதனை படைத்து வருகிறது. தமிழ்நாட்டைத் தாண்டி நாடு தழுவிய அளவில் சமூகநீதிச் சாதனைகளைப் படைத்திட இதுதான் சரியான தருணம். அதற்கான வழிமுறைகளை வடித்திட சக மனிதரை மனிதத் தன்மையற்றவர்களாக (De-humanise) நடத்திய நிலையிலிருந்து மீண்டும் ‘மனிதராக' (Re-humanise) நடத்தப்படும் நிலைக்கு மாற்றிட சமூகநீதி அறப்போரே சரியான அணுகுமுறையாகும். அதற்காகத்தான் இந்த மாநாடு!
துரோணாச்சாரி- ஏகலைவன் காலம் அல்ல இது!
Denne historien er fra April 06,2023-utgaven av Viduthalai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra April 06,2023-utgaven av Viduthalai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
இந்தியாவை பிடித்த பிணிகள்: ட்விட்டரில் முதலமைச்சர் பதிவு
சுதந்திர நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவு
புதிய சட்ட மசோதாக்கள்: நீதிபதிகளுக்கே ஆபத்து! - கபில்சிபல்
ஒன்றிய அரசின் சட்டத்துறை மேனாள் அமைச்சரும், மூத்த வழக்குரைஞருமான கபில் சிபல் டில்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியிருப்பதாவது:
சிறுதானிய உடனடி உணவு மாவு தயாரிக்கும் பயிற்சி
சென்னை கிண்டியில் உள்ள ஒன்றிய அரசின் எம்எஸ்எம்இ தொழில்நுட்ப மேம்பாட்டு மய்யம் சார்பில், சிறுதானிய உடனடி உணவு மாவுகள் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்தியாவில் 22 பேருக்கு கரோனா
இந்தியாவில் 24 மணி நேரத்தில் புதிதாக 22 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக தினசரி கரோனா பாதிப்பு 50-க்கு கீழ் பதிவாகி வருகிறது.
தமிழ்நாட்டில் ஜாதி, மதவாத வன்முறைகளை தடுக்க தனியாக உளவுப் பிரிவு: திருமாவளவன் வலியுறுத்தல்
தமிழ் நாட்டில் ஜாதி, மதவாத வன்முறைகளைத் தடுக்க தனியாக உளவுப்பிரிவை தொடங்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்டத்தில் சுழன்றடிக்கும் பகுத்தறிவுச் சூறாவளி தெருமுனைப் பிரச்சாரம்
திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் 4ஆவது நாளாக 3.8.2023 மாலை 6 மணி அளவில் திருவாரூர் கீழவீதியில் பாவலர் க.முனியாண்டி, புலவர் சு.ஆறுமுகம் ஆகியோரின் கொள்கைப் பாடல்களுடன் தொடங்கியது.
திண்டிவனத்தில் நடைபெற்ற தெருமுனைக் கூட்டம்
திண்டிவனம் திராவிடர் கழகத்தின் சார்பில் வைக்கம் நூற்றாண்டு விழா, கலைஞர் நூற்றாண்டு விழா பச்சைத் தமிழர் காமராசர் 121 ஆவது பிறந்தநாள் விழா மணிப்பூர் பெண்கள் பாலியல் வன்முறையை கண்டித்து திண்டிவனம் நகரத்தில் நான்கு இடங்களில் தெருமுனைக்கூட்டம் நகர தலை வர் உ.பச்சையப்பன் தலைமையில் நடை பெற்றது.
பொறுப்பில்லாமல் நடந்துகொண்டார் மோடி :திருச்சி சிவா வேதனை
மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி பொறுப்புடன் பதில் அளிக்கவில்லை என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா குற்றம் சாட்டினார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அங்கன்வாடி மய்யத்தின் அனைத்து வசதிகளையும் உறுதி செய்க; தலைமைச் செயலாளர் உத்தரவு
தமிழ்நாடு முழுவதும் உள்ள அங்கன்வாடி மய்யங்களை ஆய்வு செய்து, அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பதனை உறுதி செய்து உரிய மேல் நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா கடிதம் அனுப்பியுள்ளார்.
3 மாதங்களில் ஒரு பெரியாரியல் 5 பொதுக்கூட்டம்-10 தெருமுனைக் கூட்டம் பயிற்சிப் பட்டறை - அசத்தும் ஆத்தூர் கழக மாவட்டம்!
ஈரோடு பொதுக்குழு முடிந்து (13.05.2023) நேற்றுடன் (13.08.2023) மூன்று மாதங்கள் முடிந்துள்ளன! இந்தக் கால கட்டத்தில் மட்டும் 5 பொதுக் கூட்டங்கள், 10 தெருமுனைக் கூட்டங்கள், ஒரு பெரியாரியல் பயிற்சிப் பட்டறையை முடித்து, அசத்திவிட்டது ஆத்தூர் கழக மாவட்டம்!