நிகழ்ச்சியில் பங்கேற்க வருகை தந்த தமிழர் தலைவருக்கு உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அருகே கழகப் பொதுச் செயலாளர் துரை சந்திரசேகரன் தலைமையில் விழுப்புரம் சுப்பராயன் மற்றும் பல்வேறு கழகப் பொறுப்பாளர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர்.
நிகழ்ச்சி அரங்கத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவரை அனைத்து தோழர்களும் இரண்டு வரிசையாக நின்று கழக கொள்கை முழக்கமிட்டு உற்சாகமாக வரவேற்றனர். நிகழ்ச்சியையொட்டி நீண்ட தூரம் கழகக் கொடிகள் ஏராளமாக கட்டப்பட்டிருந்தது.
கல்லக்குறிச்சி, விழுப்புரம், திண்டிவனம், புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், பெரம்பலூர், அரியலூர் மற்றும் காரைக்கால் மாவட்டங்களின் கழக கலந்துரையாடல் கூட்டம் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் ஜூன் 18ஆம் தேதி உளுந்தூர்பேட்டை ஆதிலட்சுமி திருமண மண்ட பத்தில் நடைபெற்றது. அப்போது தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பேசுகையில்,
கொடி, செடி, படி எனும் முழக்கத்தை தோழர் களுக்கு தமிழ் தலைவர் அவர்கள் வழங்கினார்கள் அதாவது, கழகத் தோழர்கள் வீட்டில் கொடி பறக்க வேண்டும், கொடிக்கு அருகில் ஒரு செடி நட வேண்டும். செடி நட்டால் அது சுற்றுச்சூழலை பாதுகாக்கும். தோழர்கள் விடுதலை நாளிதழை படிக்க வேண்டும் விடுதலையைப் படித்தால் சமூக மாற்றம் ஏற்படும் என்றார். மேலும், மேற்கண்ட பத்து மாவட்டங்களின் கலந்துரையாடல் கூட்டங்களை பார்க்கின்ற போது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது மேலும், என்னுடைய சொந்த மாவட்டம் என்பதில் பெருமையாக உள்ளது என்று கூறி கழகத் தோழர்களிடையே உற்சாகமாக கருத்துரை வழங்கினார்.
நிகழ்வின் தொடக்கத்தில், கழக சொற்பொழிவாளர் புவனகிரி யாழ் திலீபன் கடவுள் மறுப்பு கூறினார். மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன் வரவேற்புரை யாற்றினார்.
Denne historien er fra June 20,2023-utgaven av Viduthalai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra June 20,2023-utgaven av Viduthalai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
இந்தியாவை பிடித்த பிணிகள்: ட்விட்டரில் முதலமைச்சர் பதிவு
சுதந்திர நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவு
புதிய சட்ட மசோதாக்கள்: நீதிபதிகளுக்கே ஆபத்து! - கபில்சிபல்
ஒன்றிய அரசின் சட்டத்துறை மேனாள் அமைச்சரும், மூத்த வழக்குரைஞருமான கபில் சிபல் டில்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியிருப்பதாவது:
சிறுதானிய உடனடி உணவு மாவு தயாரிக்கும் பயிற்சி
சென்னை கிண்டியில் உள்ள ஒன்றிய அரசின் எம்எஸ்எம்இ தொழில்நுட்ப மேம்பாட்டு மய்யம் சார்பில், சிறுதானிய உடனடி உணவு மாவுகள் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்தியாவில் 22 பேருக்கு கரோனா
இந்தியாவில் 24 மணி நேரத்தில் புதிதாக 22 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக தினசரி கரோனா பாதிப்பு 50-க்கு கீழ் பதிவாகி வருகிறது.
தமிழ்நாட்டில் ஜாதி, மதவாத வன்முறைகளை தடுக்க தனியாக உளவுப் பிரிவு: திருமாவளவன் வலியுறுத்தல்
தமிழ் நாட்டில் ஜாதி, மதவாத வன்முறைகளைத் தடுக்க தனியாக உளவுப்பிரிவை தொடங்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்டத்தில் சுழன்றடிக்கும் பகுத்தறிவுச் சூறாவளி தெருமுனைப் பிரச்சாரம்
திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் 4ஆவது நாளாக 3.8.2023 மாலை 6 மணி அளவில் திருவாரூர் கீழவீதியில் பாவலர் க.முனியாண்டி, புலவர் சு.ஆறுமுகம் ஆகியோரின் கொள்கைப் பாடல்களுடன் தொடங்கியது.
திண்டிவனத்தில் நடைபெற்ற தெருமுனைக் கூட்டம்
திண்டிவனம் திராவிடர் கழகத்தின் சார்பில் வைக்கம் நூற்றாண்டு விழா, கலைஞர் நூற்றாண்டு விழா பச்சைத் தமிழர் காமராசர் 121 ஆவது பிறந்தநாள் விழா மணிப்பூர் பெண்கள் பாலியல் வன்முறையை கண்டித்து திண்டிவனம் நகரத்தில் நான்கு இடங்களில் தெருமுனைக்கூட்டம் நகர தலை வர் உ.பச்சையப்பன் தலைமையில் நடை பெற்றது.
பொறுப்பில்லாமல் நடந்துகொண்டார் மோடி :திருச்சி சிவா வேதனை
மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி பொறுப்புடன் பதில் அளிக்கவில்லை என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா குற்றம் சாட்டினார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அங்கன்வாடி மய்யத்தின் அனைத்து வசதிகளையும் உறுதி செய்க; தலைமைச் செயலாளர் உத்தரவு
தமிழ்நாடு முழுவதும் உள்ள அங்கன்வாடி மய்யங்களை ஆய்வு செய்து, அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பதனை உறுதி செய்து உரிய மேல் நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா கடிதம் அனுப்பியுள்ளார்.
3 மாதங்களில் ஒரு பெரியாரியல் 5 பொதுக்கூட்டம்-10 தெருமுனைக் கூட்டம் பயிற்சிப் பட்டறை - அசத்தும் ஆத்தூர் கழக மாவட்டம்!
ஈரோடு பொதுக்குழு முடிந்து (13.05.2023) நேற்றுடன் (13.08.2023) மூன்று மாதங்கள் முடிந்துள்ளன! இந்தக் கால கட்டத்தில் மட்டும் 5 பொதுக் கூட்டங்கள், 10 தெருமுனைக் கூட்டங்கள், ஒரு பெரியாரியல் பயிற்சிப் பட்டறையை முடித்து, அசத்திவிட்டது ஆத்தூர் கழக மாவட்டம்!