பாசிச ஒன்றிய பி.ஜே.பி. அரசை வீழ்த்திட - இந்திய அரசமைப்புச் சட்ட அடிக்கட்டுமானத்தைக் காப்பாற்றிட தோன்றிவிட்டது “இந்தியா” 26 கட்சிகளின் கூட்டமைப்பு! மக்கள் செல்வாக்கை இழந்துவிட்ட பி.ஜே.பி. கூட்டணி வாக்குப் பெட்டிகள்மீது குறி வைக்கும் . அதையும் காவல் காக்கும் பணி - கடமை 26 கட்சிகளின் கூட்டணிக்கு உண்டு என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
இந்திய ஜனநாயகத்தையும், அதன் வழிகாட்டி நெறியாக இருந்து வழிகாட்டியாக உள்ள இந்திய அரசமைப்புச் சட்டத்தையும் பாதுகாக்க, இந்தியா என்ற நமது நாட்டின் காவலர்களாக ஆகி, இன்றைய ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. ஆட்சியின் எதேச்சதிகார, அடக்குமுறைக் கொடும்கதிர்வீச்சுகளிடமிருந்து மீட்டெடுக்கும் ஓர் அரிய முயற்சிக்குப் பல்வேறு முக்கிய எதிர்க்கட்சிகளும் ஓர் அணியில் திரண்டு வந்து நிற்பது, வரவேற்கத்தகுந்த சீரிய முயற்சியாகும்!
நாட்டில் இப்போது அறிவிக்கப்படாத நெருக்கடி காலம் நடைமுறையில் இருக்கிறது.
கடந்த 9 ஆண்டுகளாக அரசமைப்புச் சட்டத்தின் அடிக்கட்டுமானத்தைத் தகர்க்கும் ஒன்றிய பி.ஜே.பி. அரசு!
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மாற்றப்படக் கூடாத அதன் அடிக்கட்டுமானத்தையே மாற்றி, நாளும் சிதைத்து வரும் ஓர் ஆட்சி ஒன்றியத்தில் கடந்த 9 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது! வளர்ச்சி, முன்னேற்றம், கூடுதல் வேலை வாய்ப்பு, விலைவாசி குறைப்பு, விவசாயிகளின் வருமானம் இரண்டு மடங்காகப் பெருக்கம், வெளிநாட்டில் உள்ள இந்தியாவின் கருப்புப் பணத்தையெல்லாம் மீட்டெடுத்துத் திரும்பக் கொண்டு வந்து, இந்தியக் குடிமகன் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் செலுத்தும் அளவு கொணர்வோம் என்றெல்லாம் ஆசை வார்த்தைகளைக் கூறி, முதலில் பதவியைப் பிடித்தனர் (2014).
பிறகு தேச பக்தி', அண்டை நாடுகளின் படையெடுப்பிலிருந்து எதிரிகளை முறியடிக்க என்ற சாக்கில் மேலும் கூடுதல் இடங்களைப் பெற்ற நிலையில் (2019) ஆட் சியைப்பிடித்து, தங்களதுஆர்.எஸ்.எஸ்.அஜெண்டாவை அமல்படுத்தி வருவது கண்கூடு - உலகறிந்த கொடுமை!
எதிர்க்கட்சிகளை அழிக்கும் திரிசூலங்கள்!
Denne historien er fra July 19, 2023-utgaven av Viduthalai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra July 19, 2023-utgaven av Viduthalai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
இந்தியாவை பிடித்த பிணிகள்: ட்விட்டரில் முதலமைச்சர் பதிவு
சுதந்திர நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவு
புதிய சட்ட மசோதாக்கள்: நீதிபதிகளுக்கே ஆபத்து! - கபில்சிபல்
ஒன்றிய அரசின் சட்டத்துறை மேனாள் அமைச்சரும், மூத்த வழக்குரைஞருமான கபில் சிபல் டில்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியிருப்பதாவது:
சிறுதானிய உடனடி உணவு மாவு தயாரிக்கும் பயிற்சி
சென்னை கிண்டியில் உள்ள ஒன்றிய அரசின் எம்எஸ்எம்இ தொழில்நுட்ப மேம்பாட்டு மய்யம் சார்பில், சிறுதானிய உடனடி உணவு மாவுகள் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்தியாவில் 22 பேருக்கு கரோனா
இந்தியாவில் 24 மணி நேரத்தில் புதிதாக 22 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக தினசரி கரோனா பாதிப்பு 50-க்கு கீழ் பதிவாகி வருகிறது.
தமிழ்நாட்டில் ஜாதி, மதவாத வன்முறைகளை தடுக்க தனியாக உளவுப் பிரிவு: திருமாவளவன் வலியுறுத்தல்
தமிழ் நாட்டில் ஜாதி, மதவாத வன்முறைகளைத் தடுக்க தனியாக உளவுப்பிரிவை தொடங்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்டத்தில் சுழன்றடிக்கும் பகுத்தறிவுச் சூறாவளி தெருமுனைப் பிரச்சாரம்
திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் 4ஆவது நாளாக 3.8.2023 மாலை 6 மணி அளவில் திருவாரூர் கீழவீதியில் பாவலர் க.முனியாண்டி, புலவர் சு.ஆறுமுகம் ஆகியோரின் கொள்கைப் பாடல்களுடன் தொடங்கியது.
திண்டிவனத்தில் நடைபெற்ற தெருமுனைக் கூட்டம்
திண்டிவனம் திராவிடர் கழகத்தின் சார்பில் வைக்கம் நூற்றாண்டு விழா, கலைஞர் நூற்றாண்டு விழா பச்சைத் தமிழர் காமராசர் 121 ஆவது பிறந்தநாள் விழா மணிப்பூர் பெண்கள் பாலியல் வன்முறையை கண்டித்து திண்டிவனம் நகரத்தில் நான்கு இடங்களில் தெருமுனைக்கூட்டம் நகர தலை வர் உ.பச்சையப்பன் தலைமையில் நடை பெற்றது.
பொறுப்பில்லாமல் நடந்துகொண்டார் மோடி :திருச்சி சிவா வேதனை
மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி பொறுப்புடன் பதில் அளிக்கவில்லை என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா குற்றம் சாட்டினார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அங்கன்வாடி மய்யத்தின் அனைத்து வசதிகளையும் உறுதி செய்க; தலைமைச் செயலாளர் உத்தரவு
தமிழ்நாடு முழுவதும் உள்ள அங்கன்வாடி மய்யங்களை ஆய்வு செய்து, அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பதனை உறுதி செய்து உரிய மேல் நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா கடிதம் அனுப்பியுள்ளார்.
3 மாதங்களில் ஒரு பெரியாரியல் 5 பொதுக்கூட்டம்-10 தெருமுனைக் கூட்டம் பயிற்சிப் பட்டறை - அசத்தும் ஆத்தூர் கழக மாவட்டம்!
ஈரோடு பொதுக்குழு முடிந்து (13.05.2023) நேற்றுடன் (13.08.2023) மூன்று மாதங்கள் முடிந்துள்ளன! இந்தக் கால கட்டத்தில் மட்டும் 5 பொதுக் கூட்டங்கள், 10 தெருமுனைக் கூட்டங்கள், ஒரு பெரியாரியல் பயிற்சிப் பட்டறையை முடித்து, அசத்திவிட்டது ஆத்தூர் கழக மாவட்டம்!