இராமானுஜர் ஒரு வைஷ்ணவ சித்தாந்த ஈர்ப்புடையவர். இவர் வேதாந்தத்தின் ஒரு பிரிவான, விசிஷ்டாத்வைதத்தின் முன்னோடியாக விளங்கியவர். இவர் ஸ்ரீபெரும்புதூரில் பிறந்தவர். இவருடைய குரு யாதவப் பிரகாசர். ஸ்ரீ ராமானுஜர் அரிய நூல்கள் பலவற்றை எழுதியவர். ஸ்ரீரங்கப் பெருமானை வழிபட்டு, பல திருப்பணிகள் செய்து, தீண்டாமையை எதிர்த்து குரல் கொடுத்தவர். ஸ்ரீராமானுஜருக்கு எம்பெருமானார், பாஷ்யகாரர், உடையவர் என பல திருநாமங்கள் உண்டு. இவர் பாவார்த்த ரத்னாகரம் எனும் ஜோதிட நூலும் எழுதியுள்ளார்.
ஸ்ரீ ராமானுஜர் திருக்கோஷ்டியூர் சென்று, அங்கு வாழ்ந்த நம்பி பெருமாளிடம் மந்திர உபதேசம் பெற விரும்பினார். அவர் அங்குச் சென்று, "நான் இராமானுஜன் வந்திருக்கிறேன்" எனக் கூற, நம்பி "நான் செத்து வா" என பதில் கூறினார்.
இவ்வாறு 17 முறை இராமானுஜர் வந்தபோதும், நம்பி இதே பதிலைக் கூறினார். கடைசியாக, இராமானுஜர் "அடியேன் வந்திருக்கிறேன்" எனக் கூற, நம்பி அவரை அழைத்து, 'ஓம் நமோ நாராயணாய' என்ற மந்திரத்தை உபதேசித்து அருளினார். கூடவே இதை வெளியில் சொன்னால், உனக்கு நரகம் கிடைக்கும் எனவும் கூறினார். எனினும் உலக மக்கள் அனைவரும் மோட்சகதி அடைந்து, தற்போது பெற வேண்டும் எனும் கருத்தில், ஸ்ரீ ராமானுஜர் திருக்கோஷ்டியூர் கோபுர விமானத்தில் நின்று, உரக்க இந்த மந்திரத்தைக் கூறினார். தான் நரகம் சென்றாலும் பரவாயில்லை, மக்கள் அனைவரும் மோட்சம் செல்ல வேண்டும் எனும் உயரிய நோக்கத்தில் சொல்லப்பட்ட திருமந்திரம் இதுவாகும். இப்போதும் திருக்கோஷ்டியூர் கோவில் விமானத்தில் இராமானுஜர் சிலையும், அதன் எதிர் தெருவில் 'கல் திருமாளிகை' என அழைக்கப்படும் நம்பியின் வீடும் உள்ளது.
பாவ ஜாதகம் என்றால் என்ன?
- கே. பிரபாவதி, கன்னியாகுமரி
ஜோதிடத்தில் இதனை நிர்த்தன யோகம் என்று குறிப்பிடுவர். இதில் 'நி' என்றால் இல்லை என்று அர்த்தமாகும். தனம் என்பது செல்வத்தை குறிக்கும். எனவே நிர்த்தனம் என்பது செல்வம் இல்லாத நிலையைக் குறிக்கும்.
இதனை எவ்விதம் அறிவது? 1, 2, 5, 9 எனும் வளமை தரும் கிரகங்கள், 8-ஆமிடத்தில் மறைந்தால், அது நிர்த்தன ஜாதகம் அல்லது பாவ ஜாதகம் எனப்படும். இவ்வித கிரக அமைப்பு உடையவர்கள் ஒருவேளை உணவுக்கே தெருத்தெருவாக பிச்சை எடுத்து உண்பர்.
பரிகாரங்கள் எல்லாருக்குமே பலிப்பது இல்லையே?
Denne historien er fra June 2024-utgaven av OMM Saravanabava.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra June 2024-utgaven av OMM Saravanabava.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
சகல பாவங்களையும் போக்கும் ராமேஸ்வரம் ராமநாதீஸ்வரர்!
காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரிவரை வாழும் ஆன்மிக பக்தர்கள் அனைவருக்கும் ஒரு முறையாவது ராமேஸ்வரம் வந்து இறைவனை தரிசித்துச் செல்ல வேண்டும் என்பதே ஆவலாக இருக்கும்.
பிள்ளையார் அருளால் பிரகாச வாழ்க்கை பெற்றோம்!
மதுரை பைக்காரா ரயில்வே கேட் அருகில் உள்ள அழகு சுந்தரம் நகர் நான்காவது தெருவில் உள்ள இல்லத்தில் மதுரை எல்.ஐ.சி.யில் வளர்ச்சி அதிகாரி - டெவலப் மெண்ட் ஆபீசராக நூற்றி முப்பது முகவர்களுக்கு தலைமை ஏற்று அவர்கள் 'பாலிசி கேன்வாசிங்' செய்வதற்கு வழி நடத்தி வரும் கடந்த 25 வருடங்களாக 'டீம் லீடராக’ மதுரை கோட்டத்தில் 'நம்பர் ஒன்' அணியாக புகழ் பெற்று வெற்றிநடை போட்டு வரும் கம்பீர மாமனிதர் T.N.ராதா கிருஷ்ணன் அவர்களை அவருடைய துணைவியார் P.ஜீவாகுமாரி உடன் இருக்க சந்தித்து இருவரின் தெய்வீக பக்தி ஈடுபாடுகள், தெய்வ சக்தி அற்புதங்களால் மெய்சிலிர்க்க வைத்த சம்பவங்கள் பற்றி கேட்டோம்.
இந்து மதத்துக்கு மறுமலர்ச்சியைத் தந்த ஸ்ரீ ஆதிசங்கரர்!
அட்சய திருதியை பொன்னான நாளில் தானம், ஜபம், சிறப்பு வழிபாடு செய்வது நம் வழக்கம்.
பாண்டிய மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்ட மேல்சேவூர் அருள்மிகு ரிஷபபுரீஸ்வரர் திருக்கோவில்!
மேல்சேவூர் அருள்மிகு ரிஷபபுரீஸ்வரர் திருக்கோவில் விழுப்புரம் மாவட்டம், செஞ்சியிலிருந்து 17 கிலோமீட்டர், விழுப்புரத்திலிருந்து 48 கிலோமீட்டர், சென்னையிலிருந்து 151 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள பாடல்பெற்ற திருத்தலமாகும்.
இறைவனை அறிந்துகொள்வது எப்படி?
ஸ்ரீ ராமானுஜர் கோபுரத்தில் ஏறி மக்களுக்கு போதித்தது என்ன?
திருக்காமக்கோட்டத்து ஆளுடைய நாச்சியார்!
விடிவெள்ளி வானத்தின் கீழ்த்திசையில் பிரகாசமாக உதித்தது.
முன்குடுமியுடன் காட்சிதரும் ஈஸ்வரன்!
புகழ் மணக்கும் தொண்டை மண்டலத்தின் பொன் விளைந்த பூமியாக, பொன்விளையும் பூமியாகத் திகழ்கிறது பி.வி.களத்தூர் என்னும் பொன்விளைந்த களத்தூர். இங்கு சதுர்புஜராமர் மிகவும் பிரசித்தம்.
சித்தர்கள் அருளிய வாசியோகம்!
இந்த பூமியில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனும், தனது முற்பிறவிகளில் மற்ற வர்களுக்கும், குடும்ப உறவுகளுக்கும், செய்த பாவ- சாப- புண்ணியங்களுக்கு தக்கபலன்களை அனுபவித்து வாழ்ந்து, கர்மவினைகளைத் தீர்த்து முடிக்கவே பிறக்கின்றார்கள்.
எல்லையில்லா ஆற்றல் தந்தருளும் தில்லைவிடங்கன் ஸ்ரீ விடங்கேஸ்வரர்!
\"தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னுஞ் செருக்கு.\"
அறிவுக்கும், கல்விக்கும் உகந்த ஆனி உத்ரம்!
ஒவ்வொரு தமிழ் மாதமும், ஒவ்வொரு சிறப்பான விழாக்களை தன்னகத்தே கொண்டுள்ளது. ஆனி மாதம் நடைபெறும் ஆனி உத்ர திருவிழா விசேஷமானது.