ஆனாலும் இந்தக் கம்பி மத்தாப்புக்குள்கூட பெரியதொரு டைனமைட் இருப்பதாக கொந்தளிக்கிறார்கள் விமர்சகர்கள்.மகளிர் இட ஒதுக்கீடு கோரிக்கைக்கான போராட்டம் பலகாலமாக இந்தியாவில் நடந்துவருகிறது. பலவேளைகளில் அதை சட்டமாக்குவதற்கான முயற்சிகளும் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நடந்தன. ஆனால், என்ன கெட்ட காலமோ... பட்ட காலிலேயே படும் கெட்ட குடியே கெடும் என்பதுபோல் இந்த மசோதாவுக்கு போதாத காலமாக இருந்தது.
ஆனால், எந்த பிரதமராலும் கொண்டு வரமுடியாத சட்டத்தை வெற்றிகரமாக பாராளு மன்றத்தில் நிறைவேற்றியதன் மூலம் இந்தியப் பெண்களின் நம்பிக்கை நட்சத்திரமாக ஒரேநாளில் மாறிப் போயிருக்கிறார் மோடி. ஆனாலும் இந்த சட்டம் பல குறைகளுடையதாக இருக்கிறது. அதிலும் இந்தச் சட்டம் இன்னும் பல தடைகளைத் தாண்டித்தான் நிறைவேற உள்ளதால் இது அமல்படுத்தப்படுவது கடினம் என விமர்சகர்கள் அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து மேய்கின்றனர்.
இப்போது இருக்கும் 543 பேர் அடங்கிய மக்களவையில் 78 பெண் எம்பி-க்கள் இருக்கின்றனர். இது 15 சதவீதத்துக்கும் குறைவு. அதேபோல 245 பேர் அடங்கிய மாநிலங்களவையில் 24 எம்பி-க்கள், அதாவது 14 சதவீதம் மட்டுமே பெண்கள். சுமார் பாதிக்குப் பாதியான பெண்கள் கொண்ட இந்திய மக்கள் தொகையில் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவே இந்த புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.
எந்நேரமும் சண்டை, போர், பட்டினி என்று கிடக்கும் ருவாண்டா எனும் ஆப்பிரிக்க நாட்டில்கூட சுமார் 56.3 சதவீத பெண்கள் அரசியலில் கோலோச்சுகிறார்கள். அதைவிட நம் பக்கத்து நாடான நேபாளத்தில் 33.2 சதவீதப் பெண்கள் அரசியல் அதிகாரத்தில் இருக்கிறார்கள்.
பெண்களின் பிரதிநிதித்துவம் இந்திய பாராளுமன்றத்தைவிட மாநில சட்டமன்றங்களில் இன்னும் மோசம்.மத்தியப் பிரதேசம், ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா, அருணாச்சலப் பிரதேசம், ஒடிசா, மற்றும் குஜராத்தில் 10 சதவீதத்துக்கும் குறைவான பெண் எம்எல்ஏக்கள். பீகார், உத்தரப்பிரதேசம், அரியானா, தில்லி, பஞ்சாப், ராஜஸ்தான், மற்றும் உத்தரகாண்டில் 10 லிருந்து 12 சதவீதம் பெண் எம்எல்ஏக்கள்.
This story is from the 13-10-2023 edition of Kungumam.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the 13-10-2023 edition of Kungumam.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
ஹியூமன் வாஷிங் மெஷின்
மனிதர்கள் ஆயிரக்கணக்கான வருடங்களாக கையால்தான் துணிகளைத் துவைத்து வந்தனர்.
வீட்டை உடைக்கும் இளைஞர்!
‘‘யாரோ திருடர்கள் தங்களின் வீட்டுக் கதவுகளை உடைத்து உள்ளே புகுந்துவிட்டனர்; ஆனால், எந்தப் பொருளும் திருட்டுப் போகவில்லை...’’ என்று ஜப்பானின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேலானவர்கள் காவல்துறையிடம் புகார் தெரிவித்திருக்கின்றனர்.
ஏஐ டாய்லெட் கேமரா!
இந்தத் தலைப்பு உங்களை முகம் சுளிக்க வைக்கலாம்.
விவசாயம் செய்ய பரோலில் வந்த கொலைக் 'குற்றவாளி!
சமீபத்தில் வெளியான செய்தி ஒன்று, இந்திய நீதித்துறையை மட்டுமல்லாமல், பொது மக்களையும் ஆச்சர்யத்தில் மூழ்கடித்துள்ளது.
நெல்ல பெயரை வாங்க வேண்டும் சாந்தினியே!
பதினான்கு வருடங்கள் பயணம், டெம்ப்ளேட் கேரக்டர்களில் சிக்காமல் வித்யாசமான கதாபாத்திரங்கள்... என தனது கரியரை நல்ல நடிகைக்கான பயணமாக கொண்டு சென்று கொண்டிருக்கிறார் சாந்தினி தமிழரசன்.
உலகின் முதல் செயற்கை கண்
பொதுவாக உலகில் அனைத்து பிரச்னைகளுக்குமே தீர்வு என்பது உண்டு. அதுவும் தொழில்நுட்பம் உச்சபட்சமாக முன்னேறியிருக்கும் இந்தக் காலத்தில் பல சிக்கல்களுக்கும் தீர்வுகள் எளிதாகவே கண்டறியப்படுகின்றன.
பி.வி.சிந்துவுக்கு டும்டும்டும்
இந்தியாவின் முன்னணி பாட்மிண்டன் வீராங்கனையான பி.வி.சிந்துவின் திருமணம் வரும் டிசம்பர் 20ம் தேதி உதய்ப்பூரில் நடைபெறுகிறது.
உங்க விஜய் to வடிலெக்ஸா...
‘‘அலெக்ஸா... நான் த்ரிஷா மாதிரி ஒரு பொண்ண கல்யாணம் செய்துக்க போறேன்..!’’
வருகிறார் முஃபாசா
உலகின் தலைசிறந்த பத்து அனிமேஷன் திரைப்படங்களில் ஒன்று, ‘த லயன் கிங்’.
சைபர் மோசடி...Data s மோசடி!
2024ம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இந்தியா ரூ.11,333 கோடி அளவுக்கு சைபர் மோசடி இழப்பை சந்தித்துள்ளதாக உள்துறை அமைச்சகத்தின் ஒரு பிரிவான இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.