‘முடியும்’ என்கிறார் அகஸ்தி.ஏழாம் வகுப்பு படிக்கும் பனிரெண்டு வயது மாணவியான அகஸ்தி, சிறுவயதிலேயே ‘குண்டான்சட்டி’ என்ற அனிமேஷன் படத்தை உருவாக்கி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார். அகஸ்தியின் ‘குண்டான்சட்டி’ படத்துக்கு அப்பா கார்த்திகேயன்தான் தயாரிப்பாளர். டிரைலர் வெளியீட்டு விழாவுக்காக சென்னை வந்த அகஸ்தியிடம் பேசினோம்.
மாணவி அகஸ்திக்கு டைரக்ஷன் பண்ணும் ஆசை எப்படி வந்தது?
சிறுவயது தொடங்கி எனக்கு படிப்பில் ஆர்வம் அதிகம். பாடப் புத்தகங்கள் மட்டுமல்லாமல், இலக்கியம், தலைவர்களின் வரலாறு என பல்வேறு புத்தகங்களை ஆர்வத்துடன் படிப்பேன். பள்ளிக்கூடத்தில் நடக்கும் கலை, இலக்கிய விழாக்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வேன்.புத்தக வாசிப்பு பழக்கம்தான் சினிமாவுக்கான முதல் விதையைத்தூவியது என்று சொல்லலாம். நாளடைவில் வாசிப்பு அனுபவம் சொந்தமாக புத்தகம் எழுதும் ஆர்வத்தையும், ஆவலையும் தூண்டியது. அதன்படி புத்தகம் எழுத வேண்டும் என்ற என்னுடைய ஆவலை வீட்டில் சொன்னதும் ஊக்கப்படுத்தினார்கள். அதன்படி ஒரு புத்தகம் எழுதி முடித்தேன்.
விடுமுறை நாட்களில் குழந்தைகளுக்கான கார்ட்டூன் சேனல்களை விரும்பிப் பார்ப்பேன். தொடர்ந்து கார்ட்டூன் படங்கள் பார்த்ததால் அனிமேஷன் படங்கள் மீது அதிக ஈர்ப்பு வந்ததோடு, ஏன் நாமும் அனிமேஷன் படம் எடுக்கக்கூடாது என்ற கேள்வி வந்தது.ஓய்வு நேரங்களில் நிறைய வீடியோஸ் எடுத்து யூடியூபில் போடுவேன். சில குறும்படங்களிலும் நடிக்கவும் செய்துள்ளேன். எனக்கிருந்த அந்த கொஞ்ச கேமரா அனுபவத்தின் அடிப்படையில் அனிமேஷன் படம் எடுக்கலாம்னு முடிவு பண்ணினேன்.
புத்தகம் எழுதப்போகிறேன் என்று சொன்னபோது வீட்டில் ஒத்துழைப்பு கொடுத்து உற்சாகப்படுத்தியதால், அனிமேஷன் படம் பற்றிய என்னுடைய முடிவையும் சொன்னேன். ஆரம்பத்தில் படிப்புல கவனம் செலுத்தினால் போதும், சினிமா வேண்டாம்னு வீட்டில் சொல்லிவிட்டார்கள்.
என்னுடைய ஆர்வத்தைப் புரிந்து கொண்டவர்கள் என் முடிவுக்கு சம்மதம் சொன்னதோடு அப்பா, அம்மா, அக்கா என குடும்பமாக சப்போர்ட் பண்ணினார்கள். பள்ளி ஆசிரியர்கள், சக மாணவிகள் என அனைவரும் என்னுடைய முயற்சிக்கு வாழ்த்துகள் சொன்னதுடன் உதவியாகவும் இருந்தார்கள்.
This story is from the 13-10-2023 edition of Kungumam.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the 13-10-2023 edition of Kungumam.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
பிடிக்காத பெண்ணை லவ் பண்ணுகிறார் ஹீரோ!
புது மாப்பிள்ளை சித்தார்த் கல்யாணப் பரிசாக வெளிவரவுள்ளது 'மிஸ் யூ'.
கிரிக்கெட் ஆட லஞ்சம் கேட்டார்கள்!
இன்றைய தினம் இந்திய 'அணியின் மிக முக்கிய ஆட்டக்காரராக விராட் கோலி இருக்கிறார்.
சர்க்கரை நோயின் தலைநகரமா இந்தியா?
உலகளவில் 82 கோடி 'சொச்சம் சர்க்கரை நோயாளிகள் இருக்கிறார்கள்.
நீங்கள் வயதானவரா...தடுக்கிவிழ வாய்ப்புள்ளதா...இந்தப் பரிசோதனையை செய்து பாருங்கள்!
எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜனின் மறைவு உணர்த்தும் பாடம்
3238 மனிதர்கள் பலி...3.2 மில்லியன் ஹெக்டேர் பயிர்கள் நாசம்...2 லட்சத்து 35 ஆயிரத்து 862 வீடுகள் தரைமட்டம்...9457 கால்நடைகள் இறப்பு...சம்பவம் செய்த தீவிர வானிலை!
274 நாட்களில் 255 நாட்கள் தீவிரமான வானிலை. இந்தத் - தீவிரமான வானிலையால் 3238 பேர் இறந்திருக்கிறார்கள்.
3 வயது சதுரங்க ஜாம்பவான்!
இந்தியச் சதுரங்கத்தின் பொற்காலம் இது என்று அடித்துச் சொல்லலாம்.
அதிபராகிறார் டிரம்ப்...கருத்தடை மாத்திரைகள் + ஹார்மோன் ஊசிகள் பதுக்கப்படுகின்றன!
அமெரிக்க தேர்தல் முடிந்து, வாக்கு எண்ணிக்கையில் பெருவாரியாக வெற்றி பெற்றிருக்கிறார் டிரம்ப்.
ஏ.ஆர்.ரஹ்மான், ஜி.வி.பிரகாஷ் உறவினர் நான்!
க /பெ.ரணசிங்கம்' 'மூலம் அறிமுக மானவர் பவானிஸ்ரீ. ஏ.ஆர்.ரஹ்மான், ஜி.வி. பிரகாஷ் என பலமான சினிமா பேக்ரவுண்ட் உள்ள இவருக்கு தமிழ் சினிமாவில் பவனி வரும்படி பேர் வாங்கிக் கொடுத்த படம் வெற்றி மாறனின் 'விடுதலை'.
டாப் 10 - பணக்கார பாடகர்கள்!
திரையுலகம் எந்த அளவுக்கு வளர்கிறதோ, அதே வேகத்தில் திரை யுலகக் கலைஞர்களின் சம்பளமும் வளர்ந்து வருகிறது.
சுற்றுலாப் பயணிகளுக்காக இந்தோனேஷியாவில் அதிகரிக்கும் Contract Marriage!
திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாகச் சொல்வார்கள். இது இந்தியாவிற்கு மட்டுமல்ல மற்ற நாடுகளின் கலாசாரத்திலும் அப்படித்தான்.