காரணம், தனது ரசிகரை, தானே அழைத்து சித்திரவதை செய்து கன்னட நடிகர் தர்ஷன் கொலை செய்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டு.
இது உண்மையா? இணையதளம் தொடங்கி பத்திரிகைத் துறை வழியாக செய்தி சேனல் விவாதங்கள் வரை இதுதான் ஹாட் டாபிக்.
தெலுங்கு - கன்னட மசாலா படங்களை மிஞ்சும் இச்செய்தி உண்மையா?
காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள். வழக்கை நடத்தி தீர்ப்பு சொல்ல நீதிமன்றம் காத்திருக்கிறது.
ரைட். யார் இந்த தர்ஷன்?
1966ல் வெளிவந்த ‘தொகுதீப’ என்ற கன்னடப் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் ஸ்ரீநிவாஸ். நாடக நடிகரான இவர், இப்படத்தின் வழியாக புகழின் உச்சத்தில் ஏறத் தொடங்கினார். இதன் பிறகு இவர் பெயர் ஸ்ரீநிவாஸ் தொகுதீப என்றே மாறியது. பெரும்பாலும் நெகடிவ் கேரக்டரில் நடித்தார். ஆனால், நிஜத்தில் இவரைப் போல் நல்லவர் இல்லை... மனிதர்களை நேசிக்கும் பண்பில் சிறந்தவர் என்றெல்லாம் இவரைக் குறித்து கன்னட திரையுலகமும் கர்நாடகமும் புகழ்கிறது.
இந்த ஸ்ரீநிவாஸ் தொகுதீபின் மகன்தான் தர்ஷன். இவருக்கு வீட்டில் சூட்டப்பட்ட பெயர் ஹேமந்த் குமார்.
‘நினஷம்’ என்ற திரைப்பட பயிற்சிப் பள்ளியில் படித்த ஹேமந்த் குமார், பி.சி. கௌரிஷங்கர் என்ற ஒளிப்பதிவாளரிடம் உதவியாளராக இருந்தார்.
முதலில் ஒரு தொலைக்காட்சித் தொடரில் நடித்த ஹேமந்த்திற்கு 1997ம் ஆண்டு வெளிவந்த ‘மகாபாரதா’ என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தர்ஷன் என்ற பெயரோடு நடிக்க ஆரம்பித்த அவருக்கு ஆரம்பத்தில் சின்னச் சின்ன பாத்திரங்களே கிடைத்தன.
தமிழில் சூப்பர் ஹிட் அடித்த விஜய்காந்தின் ‘வல்லரசு’ கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட்டபோது அதிலும் சிறிய கதாபாத்திரத்திலேயே தோன்றினார்.
இந்நிலையில் 2001ம் ஆண்டு பி.என்.சத்யாவின் இயக்கத்தில் வெளியான ‘மெஜஸ்டிக்’ பெரும் வெற்றிப் படமாக அமைந்தது. இதற்குப் பிறகு இவர் நடித்து வெளியான சில படங்கள் வெற்றிப் படங்களாக அமையவே, கன்னடத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரானார் தர்ஷன்.
இதனால் இவரது ரசிகர்கள் இவரை ‘சேலஞ்சிங் ஸ்டார்’ என அழைக்கத் தொடங்கினர்.
This story is from the 28-06-2024 edition of Kungumam.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the 28-06-2024 edition of Kungumam.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
உலகின் பெரிய வீடு குஜராத்தில் இருக்கிறது!
உலகிலேயே மிகப்பெரிய வீடு என்று சொன்னவுடனே அம்பானியின் வீடாக இருக்கும் அல்லது எலான் மஸ்க்கின் வீடாகத்தான் இருக்கும் என்று உறுதியாக நம்புவோம்.
இந்தியாவின் முதல் சைபர் ஃபேன்டஸி ஹாரர்!
\"இந்தப் படம் முடியும்போது, உங்களுக்கு பக்கத்திலே இருக்க வங்க கிட்ட மொபைல் கொடுக்கவே தயங்குவீங்க...\" துவக்கத்திலேயே சற்று பயம் கொடுக்கிறார் அறிமுக இயக்குநர் பி. பிரவீன்குமார்.
பி.டி.உஷாவாக மாளவிகா மோகனன்?
அப்படித்தான் தன் விருப்பத்தை பகிர்ந்திருக்கிறார் மாளவிகா மோகனன்.
AC கும்மாங்குத்து!
அண்ஷனல் எனர்ஜி நெட்வொர்க்கில் 'இன்டர் ஏஜென்சி' (IEA) என்ற உலகளாவிய அமைப்பு, ஏசி தொடர்பான ஓர் ஆய்வை வெளியிட்டுள்ளது.
வாழ்கை ஓரு சினிமா
காலையில் ஹாஸ்பிட்டல் கிளம்பும் போதே நந்து வந்து கட்டிக்கொண்காணேச டான். 6.30 மணிக்கு தூக்கம் கூட சரியாகக் களையவில்லை. ஆனால், கண்ணைத் தேய்த்துக்கொண்டே, “அப்பா, இன்று ஈவினிங்...\" நிமிர்ந்து முகத்தைப் பார்த்தான்.
சோஷியல் மீடியா மீது வழக்கு!
கனடாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஃபேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம், டிக் டாக் போன்ற சமூக வலைத்தளங்களின் மீது வழக்கு தொடுத்திருக்கிறார். அந்த இளைஞரின் பெயர் வெளியிடப்படவில்லை. அவரது வயது 24.
ஏன் இப்படியே படம் எடுக்கறீங்க?
எல்லாம் மாறிடுச்சு, படம் எடுத்துக்கிட்டே \"எல்லாம் மாறிடுச்சு, மாரி செல்வராஜ் என்கிற மனுஷன் யார்?\" இப்படியான கேள்விகளுக்கு பதில் தான் இந்த 'வாழை'...
பதிவான உங்கள் மீதான வழக்கை டிஜிட்டலாக அழிக்க முடியாவிட்டால் என்ன ஆகும்..?
நம் போன் நம்பர், வீட்டு முகவரி, பிறந்த தேதி, படித்த படிப்பு பற்றிய விபரங்களை ஒருவர் சல்லீசாக ஆன் லைன் தளங்களில் கண்டுபிடித்துவிடலாம்.
எம்-பாக்ஸ் வைரஸ் ஆபத்தா?
ரங்கம்மை என்ற எம்-பாக்ஸ் (Monkeypox) நோய்த் தொற்றை குறித்துதான் உலக நாடுகள் அனைத்தும் அலறுகின்றன.
'ஹிண்டன்பர்க்...அதானி...செபி...
பங்குச் சந்தை, பரிவர்த்தனை, வர்த்தகம் என்றாலே அங்கு ஊழல் களும், ஏமாற்று வேலைகளும், பரபரப்புகளும் இருக்கும் என்பது எழுதப்படாத விதிபோல!