இந்திய முதலாளிகள், பெரும் நிலப்பிரபுக்கள் போன்றவர்களின் பணத்தை ஒன்று திரட்டி வைப்பதற்கான நிறுவனமாகவும் பாதுகாப்பான கொடுக்கல், வாங்கல் செய்வதற்கான வட்டி லேவாதேவி தொழிலை வங்கி மூலதனம் என்ற பெயரில் பாதுகாக்கவுமே அன்று வங்கிகள் நடத்தப்பட்டு வந்தன. இவை எல்லாமே தனியார் வங்கிகள்தான்.
இந்த தனியார் வங்கிகள் திவாலாகத் துவங்கியபோது நாட்டின் தனியார் வங்கிகளை ஒன்றிணைத்து பொதுத்துறை வங்கிகளாக்கி நாட்டுடைமையாக்கியது இந்திராகாந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி. ஆனால், அதே காங்கிரஸ் கட்சி 1990களில் பொதுத்துறை வங்கிகளை மெல்ல மெல்ல தனியார்மயமாக்குவதற்கான நடவடிக்கைகளில் இறங்கியதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
இதனைத் தொடர்ந்து 2014ம் ஆண்டு பாஜக தலைமையிலான மோடி ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியாவின் வங்கித்துறை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தடுமாறத் தொடங்கியதாகச் சொல்கிறார்கள். இதனை சரிசெய்யும் நடவடிக்கையாக பொதுத்துறை வங்கிகள் அனைத்தும் ஒன்றிணைக்கப்பட்டு அதன் மூலதனம் ஒன்று குவிக்கப்பட்டன.
இப்படி ஒன்றுகுவிக்கப்பட்ட மூலதனம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வாரி வழங்கப்பட்டன. பெற்றுக்கொண்ட நிறுவனங்கள் உரிய வட்டி, அசலை செலுத்தாமல் வங்கிகளை அலைக்கழித்தன. பாஜக அரசும் 'தங்களுக்கு வேண்டப்பட்ட' கார்ப்பரேட் நிறுவனங்கள் பெற்ற கடனை, வாராக்கடன் என்ற பெயரில் தள்ளுபடி செய்யத் தொடங்கின.
இந்தியாவில் 1930, 1940 மற்றும் 1950களில் நாட்டில் அனைத்து வங்கிகளும் தனியார் வங்கிகளாகவே இருந்தன. அவற்றில் சில அந்நிய வங்கிகளாகவும் இருந்தன. இந்நிலையில் பல தனியார் வங்கிகள் தோல்வியடைந்து, மூடப்பட்டன. இந்த வங்கிகளில் தங்களது சேமிப்புகளை வைத்திருந்த அப்பாவி மக்கள் தங்களது பணத்தினை இழந்தனர்.
1913தொடங்கி 1960 வரை 1639 வங்கிகள் இவ்வாறு தோல்வியடைந்து மூடப்பட்டுள்ளன.
1939 மற்றும் 1940ம் ஆண்டுகளில் அதிகபட்சமாக முறையே 117 மற்றும் 107 வங்கிகள் திவாலாகியுள்ளன. 1961 முதல் 1968 வரை, தோல்வியடைந்த 263 வங்கிகள் வேறு ஏதாவது ஒரு வங்கியுடன் இணைக்கப்பட்டன. இக்காலத்தில் வேறு எந்த ஒரு வங்கியும் மூடப்படவில்லை. இதில் அதிகபட்சமாக 1964ல் 82 வங்கிகள் வேறு ஏதாவது ஒரு வங்கியுடன் இணைக்கப்பட்டன.
This story is from the 6-12-2024 edition of Kungumam.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the 6-12-2024 edition of Kungumam.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
வளர்ச்சிப் பணிகளில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்...
தமிழகத்தின் மூன்றாவது துணை முதல்வரான உதயநிதி அடியெடுத்து வைத்துள்ளார்.
முதலீடு ரூ.2100 கோடி...லாபம் ரூ.5 ஆ கோடி!
சூதாட்டம்போல் இருக்கிறதா? கிட்டத்தட்ட அதுவேதான். பாகுபலி' பிரபாஸை மையமாக வைத்துதான் இந்த உள்ளே வெளியே ஆட்டம் அகில இந்திய அளவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
பெரும்பாலான தியேட்டர்களில் ஒரிஜினல் ரிசல்ட் இருக்காது.
போய் லைவ் சவுண்ட் எடுப்போம்.
சிம் கார்டே இல்லாமல் பேசலாம்!
யெஸ். இப்படியொரு சாதனையை நிகழ்த்தி இருக்கிறது, நிகழ்த்தப் போகிறது பிஎஸ்என்எல்.
நாட்டைவிட்டு ஓடும் இந்தியர்கள்
மோடியின் ஆட்சிக் காலத்தில். அதாவது 2014 முதல் 2023 வரை 13,75,000க்கும் மேற்பட்ட வெளிநாடுவாழ் இந்தியர்கள் தங்களின் இந்தியக் குடியுரிமையைத் துறந்துள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச் சர் சமீபத்தில் நாடாளுமன் றத்தில் அறிவித்துள்ளார்.
உத்திரப்பிரதேசம்தான் முதலிடம்!
ஆண்டுதோறும் சாலை விபத்துக்களில் இந்திய அளவில் இந்த சாதனையாம்... சொல்கிறது ஒன்றிய அரசு
ஆப்பிரிக்காவை விட மோசமான நிலையில் இந்தியா!
ஆப்பிரிக்காவை விட இந்தியாவில் குழந்தைகள் வளர்ச்சிச் குறைபாடு விகிதங்கள் அதிகமாக உள்ளன என சமீப ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
அதிகரிக்கும் செலவால் முடங்குகிறதா எதிர்கால நகரம்...?
நியோம்... கடந்த ஏழு ஆண்டுகளாக சவுதி அரேபியா நாடு மிகப் பிரம்மாண்டமாக கட்டெழுப்பி வரும் ஓர் எதிர்கால நகரத் திட்டத்தின் பெயர் இது.
இந்தியா முழுக்க மருத்துவர்கள் மீது வன்முறை ஏன்..?
மருத்துவர்களைக் கடவுளுக்கு இணையாகச் சொல்வார்கள். ஆனால், அண்மைக்காலமாக இந்தியா முழுக்க மருத்துவர்கள் மீதான தாக்குதல்கள் இந்த நம்பிக்கையை உடைத்துவிடுமோ என்ற அச்சம்தான் நிலவுகிறது.
இந்திய வங்கிகளில் மூன்று மட்டுமே பாதுகாப்பானவை!
இப்படி சொல்வது தனியார் அமைப்பு நடத்திய ஆய்வு அல்ல. இந்திய ரிசர்வ் வங்கி!