சங்கப் பாடலுக்கு உரையாசிரியர்கள் பலரும் சரியாக உரை எழுதாததால் நான் மேல்கணக்கு எழுதியுள்ளேன் என்கிறார். இவரின் நூல் சங்க காலத்தைப் பற்றிய சமகால வாசிப்பு.
தமிழ்ச் சமூகத்தின் பத்தாயிரமாண்டுப் பண்பாட்டு உருவாக்கத்தின் பெருமிதமான தன் வெளிப்பாடு அய் நூறுக்கும் மேற்பட்ட புலவர்களின் இமாலயப் பாக்கள். பலராலும் கவனிக்கப்படாத சங்கப் புதையலின் சத்தான பக்கங்களை உருவியெடுத்து நம் மீது பூக்களாய்த் தெளிக்கிறார் யுகபாரதி.
போர் அரசியலுக்கு இலக்கியத் தீர்வு அமைதி
போர்க்காலச் சூழலிலும் போருக்கெதிரான கருத்துக்களைப் பதிவு செய்த இலக்கியம் நம் காலத்திலும் தேவை. அறமும் ஈரமும் சாரமும் இயற்கையும் நமது இலக்கியச் சொத்து. மனிதநலச் சிந்தனைகளையும் சமகால நெருக்கடிகளுக்கான தீர்வுகளையும் ஏந்தி நிற்கும் மாந்த இலக்கியம். எண்ணற்ற மனிதர்களின் வாழ்வியல் நெருக்கடிகளின் போராட்டங்களின் பதிவு.
அகழாய்வில் புதிய புதிய உண்மைகள் வெளிச்சத் திற்கு வருவதைப் போன்றே இலக்கிய ஆய்விலும் புதுப் புதுப் பொருள்கள் காலத்தின்
தேவைக்கேற்ப தோன்றுகின்றன. தனியொரு மனிதனின் வாழ்வியலையோ நாட்டின் வரலாற்றையோ வெளிப்படுத்துவது பேரிலக்கியம் என்ற வரையறை, சங்க இலக்கியம் முன்னிறுத்தும் வாழ்வியலைப் புரிந்துகொள்ளப் போதுமான தாக இல்லை.
பேரிலக்கிய வரையறைகளை நெகிழ்த்தாமல் வானம் வரை சிறகு விரிக்கும் புறநானூற்றுப் புலவர்க்கு நாம் நியாயம் வழங்க முடியாது. பண்பாட்டு மரபு காத்திட எட்டுத் திக்கும் பயணிக்கும் அவர்களை எண்கோணங்களிலும் கவிஞர் ஆய்ந்துள்ளார். சமகால அரசியல் திறனாய்வையும் ஒப்பீடாகத் தருகிறார். நூலுக்குத் தனிப்பெருமை சேர்ப்பதாக இந்த அணுகுமுறை அமைகிறது.
சங்க இலக்கியம் காட்டும் மனிதன் கடவுளுக்கும் மன்னருக்கும் அடிபணிய மறுப்பவன். மனிதனுக்கு மனிதன் உற்ற துணை என்று உறவாடுபவன். சாதியும் வர்க்கமும் பாலின வேற்றுமைகளும் இல்லா மானுடன். உண்பது நாழி உடுப்பது இரண்டே மன்னன் உயிர்த்தே மலர்த்தலை உலகம் எனினும் மக்களைக் காப்பதே மன்னனுக்குச் சிறப்பு.
Diese Geschichte stammt aus der June 2024-Ausgabe von Iniya Udhayam.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der June 2024-Ausgabe von Iniya Udhayam.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
சொற்கோ கருணாநிதியின் இலக்கணப் பா(டம்)டல்!
உலகின் முதன் முறையாக ஆறாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான தமிழ் இலக்கணத்தைப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இசைப் பாடல்களாக வெளியிடும் அழகி படப்பாடலாசிரியர் சொற்கோ இரா. கருணாநிதி
வாழ்வின் குரலாக ஒலிப்பது நாட்டுப்புறப் பாடல்கள் தான்!
திராவிட இயக்கங்களின் மேடை, இடதுசாரி இயக்கங்களின் மேடை என முற்போக்கு சிந்தனை மேடைகளில் ஏறிப்பாடுகிறவர் மக்களிசைப் பாடகர் சுப்பிரமணியன், மண்ணின் மீதும், மக்கள் மீதும் காதல் கொண்டவர்கள் நடத்தும் நிகழ்வுகளில் கம்பீரமாக ஒரு குரல் ஒலிக்கிறது என்றால் அது திருவண்ணாமலை மாவட்டம் செல்லங்குப்பம் என்கிற குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்த சுப்பிரமணியன் என்கிற இளைஞனின் குரல்.
பாவம்...என் நண்பன்
வறுமையால் உண்டான கவலையின் முழு வேதனைகளையும் அனுபவித்திருக்கும் என் நண்பன் தீரபாலன் என்றும் எனக்கு வேண்டியவனாக இருந்தான். நாங்கள் ஒன்றாகச் சேர்ந்து ஒரே இடத்தில் ஒரே பள்ளிக்கூடத்தில் லோயர் ப்ரைமரிஅப்பர் ப்ரைமரி உயர்நிலைப்பள்ளி வகுப்புகளில் ஒரே பெஞ்சில் அமர்ந்து பத்து வருடங்களைக் கடந்தவர்கள்.
ஆர்மீனிய ஓவியக் கண்காட்சி!
ஓவியர் திருமதி மாரிபோகோசியனின் ஆர்மீனிய கலை பண்பாட்டு கண்காட்சி அண்மையில் சென்னை பாரீஸ் பகுதியில் உள்ள ஆர்மீனியன் சர்ச்சில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கால்வனிஸம்
கால்வனி என்ற பெயரைக் கொண்ட, நிறைய படித்த ஒரு இத்தாலிக் காரர் இருந்தார்.
சங்கப் புதையலை அள்ளித் தரும் யுகபாரதி!
பாடலாசிரியர் யுகபாரதியின் மேல்கணக்கு நூல், நம் காலத்தில் தமிழராகிய நமக்குக் கிடைத்த இலக்கிய விடிவெள்ளி.
சங்க இலக்கியத்தில் ஆவணப் பதிவர்கள்!
மே மாதம் முதல் வாரத்தில் சென்னை எழும்பூர் ஆவணக் காப்பகத்தில் ஆவண மாக்கள் (ஆவணப் பதிவர்கள்) என்னும் தலைப்பில் வரலாற்று ஆய்வாளரான ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். உரையாற்றினார்.
தனக்குவமை இல்லாத தலைவர் கலைஞர்!
அளக்க முடியாத ஆற்றலால் மூன்று தலைமுறையினரைத் தன் வசமாக்கிக்கொண்ட கலைஞரைப் போல் ஒரு தலைவரை இந்திய அரசியலில் பார்க்கமுடியாது.
கலைஞர் எனும் தமிழ்க்கடல்
முத்தமிழறிஞர் கலைஞர்,தன் நூற்றாண்டை நிறைவு செய்து, நூற்று ஒன்றைத் தொடுகிறார். இதில் ஒரு சந்தேகம் எழலாம். கலைஞர் மறைந்துவிட்டாரே. ஆனால் வாழ்வதுபோல் சொல்வது சரியா? என நினைக்கலாம்.
மோடி யின் தியான நாடகம்!
அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும் புன்மையாற் காணப்படும்'.